Sri Veerattaneswarar Temple, Thiruvathigai

ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் – திருவதிகை

Sri Veerattaswarar Temple, Tiruvathigai
Full View

அழகிய கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் மிக உயர்ந்த கோபுரத்துடன் ஆதவன் நிழலை பூமியில் தொட்டுவிடாமல் அழகிய சிற்பங்களுடன் கூடிய கோபுரத்துடன் மதில்கள் சுற்றி ஒய்யாரமாக வளர்ந்திருக்கும் மரங்களுக்கு இடையே நம்முடையை சடைமுடியான் ,கருணை கடவுளாம் அந்த ஈசன் மிக உயரமாக காட்சிதருகிறார் . சிற்ப கலைகளை மிக நேர்த்தியாக வடிக்கும் பல்லவர்கள் இந்த கோயிலை கட்டியுள்ளனர். இதனால் இக்கோயிலின் எல்லா இடங்களிலும் மிக வேலைப்பாடுடன் கூடிய சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன . இக்கோயிலை பற்றி எனது india temple tour இணையத்தில் இடுகை பதிவிடுவதை மிக பெருமையாக கருதுகிறேன் .

இறைவன் : வீரட்டானேஸ்வரர் , வீரட்டேஸ்வரர்

இறைவி :பெரியநாயகி ,திரிபுர சுந்தரி

தல விருச்சகம் : சரங்கொன்றை

தீர்த்தம் : கெடிலம் ,சூலதீர்த்தம்

ஊர் : திருவதிகை ,பண்ருட்டி ,கடலூர் மாவட்டம்

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அப்பர் ,மாணிக்கவாசகர்

நிகழ்ச்சிகள் : சித்திரையில் அப்பர் பெருமானுக்கு 10 நாட்கள் உற்சவம் வைகாசி 10 நாள் உற்சவம் தேர் வீதி உலா,திரிபுர சம்ஹராம் நடைபெறும் 

Sri Veerattaswarar temple,tiruvathigai
Entrance

தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் 7 வது தலம். 274 தலங்களில் 218 தலமாகும் .

இவூரின் அருகில் சுமார் 8 தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் திருநாவுக்கரசர் பிறந்தார் அவர் சமண மதத்தை சார்ந்திருந்தார்.ஆனால் அவரது சகோதரி திலகவதி அம்மையார் சைவத்தை சார்ந்து இக்கோயிலில் தங்கியிருந்து தொண்டாற்றிக்கொண்டிருந்தார் . ஒருநாள் திருநாவுக்கரசருக்கு தீராத சூலை நோய்(வயிற்றுவலி ) ஏற்பட்டது வலியை பொறுக்கமுடியாமல் சகோதிரியிடம் வந்து நோயை குணப்படுத்த வேண்டினர் அவரும் வீரட்டேஸ்வரிடம் ஐந்தெழுத்தை ஓதி திருநீறை அளித்தார் அவர் அதை பூசிக்கொண்டு வாயில் போட்டுக்கொண்டார் உடனே அவரது தீராத வயிற்று வலி நின்றது . உடனே அவர் வீரட்டேஸ்வரரை வணங்கி கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார் . அங்கேயே தங்கி உழவார பணி மேற்கொண்டார் .

முதலில் தேவாரம் பாடிய தலம் இது

அட்டவீரட்டத்தலங்களில் இது மூன்றாவதுமான திரிபுரம் எரித்த தலமாகும் .

சக்தி பீடங்களில் 64 இல் இதுவும் ஒன்று

அம்பிகை திருமண கோலத்தில் காட்சி தரும் தலம் வேறு எந்த தலத்திலும் இவ்வளவு பெரிய அம்பாள் கிடையாது ஆதலால்தான் இவருக்கு பெரியநாயகி என்று பெயர் . இத்தலத்தில் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன .

Video

விநாயகருக்கு விடலை தேங்காய் உடைக்கும் பழக்கம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது

திருநாவுக்கரசருக்கு நாவுக்கரசர் என்ற நாமம் பெற்ற தலம்

விஷ்ணு ,பிரம்மா,சப்த ரிஷிகள் ,அகத்தியர், கருடன் ,திருமூலர், பஞ்சபாண்டவர்கள் நம்பியாண்டார் நம்பி ,சேக்கிழார் ,பட்டினத்தார், மனவாசங்கடந்தார்,உமாபதிசிவம் ,தாயுமானவர், வள்ளலார் ஆகியவர்கள் வணங்கிய தலம்

தமிழகத்திலேயே முதன்முதலாக தேவரம்பாடல் பெற்ற அதி அற்புதபதியும்,திருமுறைகளில் நான்காம் திருமுறை ஆரம்ப தலம் இதுவாகும்

திலகவாதியாரால் திருநீற்றின் பெருமையை வெளிக்கொணர்ந்த தலம்.

சுந்தரருக்கு திருவடிதீச்சை இறைவன் அளித்த தலம்

திருஞானசம்பந்தருக்கு பூதகணங்கள் பாட இறைவன் தனது திருநடன காட்சியை காட்டருளிய தலம் .

கற்பகிரஹம் தேரை போல் பதுமைகளால் அலங்கரிக்கப்படும் அதன் நிழல் கிழே விழாதவாறு பல்லவர்கள் கணித சாஸ்திரப்படி அமைக்கப்பட்டுள்ளது . இதை கண்டுதான் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை வடிவமைத்து உள்ளான் என்று சொல்லப்படுகிறது.

இறைவனின் சிறப்புக்கள் :

  • மிக பெரிய லிங்கம் ,16 பட்டைகளுடன் பெரிய சுயம்பு லிங்கமாகும்
  • தன் சிரிப்பாலே அசூரர்களான தாருகாட்சன் ,கமலாட்சன் , வித்யுன்மாலி ஆகியோர்களை அழித்த இடம்
  • இறைவன் தேரில் வந்ததால் முதன்முதலில் தேர் ஏற்றப்பட்டதும் இத்தலத்தில் தான். கோயிலுக்கு தேர் தேவை என்ற ஐதீகம் ஏற்பட்ட இடம் இவ் இறைவனை வணங்கினால் ஆணவம் ,கன்மம் ,மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும் .
  • லிங்கத்துக்கு பின்னால் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணகோலம் உள்ளது ,திருஞானசம்பந்தருக்கு திருமணகோலத்தில் காட்சி தந்த தலம் .
  • அருணகிரிநாதர் இக்கோயிலின் முருகரை பற்றி பாடியுள்ளார் .
கோயில் திறக்கும் நேரம் மற்றும் வழி:

காலை 6 -12 .00
மாலை 5 -8 .00

https://goo.gl/maps/nCg1ph2zuJo

பண்ரூட்டியிலிருந்து 3 km தொலைவில் உள்ளது. cuddalure செல்லும் வழியில் திருவதிகை இறங்கிக்கொள்ளலாம் அல்லது பஞ்சாயத்து யூனியன் office நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம் .

அருகில் உள்ள கோயில்

1 . சரநாராயண பெருமாள் ,திருவதிகை ( எனது அடுத்த இடுகையில் பார்க்கலாம் )
2 . திருவந்திபுரம் தேவநாத பெருமாள்
3 . ஹயக்ரீவர் கோயில் , திருவந்திபுரம்
4 .பாடலீஸ்வரர் கோயில் , கடலூர்

Leave a Reply