ஸ்ரீ அட்டபுயக்கர பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
இறைவன் : ஆதி கேசவ பெருமாள் ,அட்டயபுயகரத்தோன்
தாயார் : அலர்மேல்மங்கை ,பத்மாசனி
உற்சவர் : கஜேந்திர வரதன்
கோலம் : நின்ற கோலம்
தீர்த்தம் : கஜேந்திர புஸ்கரணி
விமானம் : ககனாக்ருதி,சக்ராக்ருதி ,வ்யோமாகார விமானம்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
மங்களாசனம்: பேய்ஆழ்வார் ,திருமங்கை ஆழ்வார்
- ஆழ்வாரர்களலால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் 45 வது திவ்யதேசமாகும் .
- திவ்ய தேசங்களிலேயே 8 கைகளுடைய பெருமாள் உள்ள தலம் இது மட்டுமே . எட்டு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியபடி காட்சி தருகிறரர்.
- பொதுவாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர வாசல் ஒரு திசையிலும் ,சொர்க்கவாசல் ஒரு திசையிலும் இருக்கும் ஆனால் இங்கே இரண்டும் ஒரே திசையில் (வடக்கு )இருக்கிறது
- பிரம்மா தனக்கு பூவுலகில் விக்ரக ஆராதனை இல்லை என்பதால் தன்னை படைத்த விஷ்ணுவுக்கு பெரிய யாகம் செய்தார் ,ஆனால் அவ் யாகத்திற்கு கலைவாணியை அழைக்காமல் செய்தார் ,ஆதலால் கலைவாணி கோபமுற்று பூமியையும் மற்றும் யாகத்தை கலைக்க அரக்கர்கள் அனுப்பினாள் இதனால் கலக்கமுற்ற பிரம்மா விஷ்ணுவிடம் முறையிட அவர் எட்டு கரங்களுடன் தோன்றி அவர்களை அழித்து எல்லோரையும் காத்தார் .
- இக்கோயில் இதற்க்கு முன் ஆதி கேசவ பெருமாள் என்றே கூறப்பட்டது மங்களாசனம் செய்தபிறகு அஷ்டபுஜ பெருமாள் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது .
- மகாசந்த் முனிவரின் கஜேந்திர உருவத்தில் இருந்து விமோச்சனம்கொடுத்த இடம் . இவ் புஸ்கரணியில் இந்த நிகழ்வு நடந்தது .
- வீடு கட்ட நிலம் வாங்குபவர்கள் ,விளை நிலம் வாங்க நினைப்பவர்கள் ,நில சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால் பிரச்சனைகள் தீரும்
- பல்லவர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் ,கி.பி 820 காலத்தை சேர்ந்த பழமையான கோயிலாகும் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/ashtabhuja-perumal-temple-kanchipuram.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 – 12 , மாலை 4 -8 மணி வரை
செல்லும் வழி :
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2km தொலைவில் ரெங்கசாமி குளத்தில் இருந்து மிக அருகில் உள்ளது .
Location :