Sri Lakshmi Narasimhar Temple- Narasingapuram

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் – நரசிங்கபுரம்

Sri Lakshmi Narasimhar Temple-Narasingapuram

இறைவன் : லட்சுமி நரசிம்மர்

தாயார் : மரகதவல்லி தாயார்

ஊர் : நரசிங்கபுரம்

மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு

  • இறைவன் நரசிம்மர் இங்கு சாந்த முகத்துடன் 7 அடி உயரத்தில் தாயாரை இடது புறத்தில் அமர்த்தி அவரை கட்டி பிடித்த மாதிரி அமர்ந்துளார் . மற்ற இடங்களில் உக்ரமாக இருப்பார் மற்றும் தாயார் வலது புறத்தில் இருப்பார் . பரஸ்பர ஆலிங்கனம் அமைப்பில் உள்ளார் .இதனால் கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற பெயரும் உண்டு .
  • தாயார் இறைவனை பார்க்காமல் நம்மை நோக்கி பார்க்கிறார் இது ஒரு அபூர்வ அமைப்பாகும் .இதனால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் .
  • 1400 வருடங்கள் பழமையான கோயிலாகும் , சுமார் 11 நூற்றாண்டை சார்ந்த கோயிலாக கருதப்படுகிறது .
  • கருடாழ்வார் 4 அடி உயரத்தில் கழுத்தில் 16 நாகங்களை அணிகலன்களாக அணிந்துள்ளார் ,ஆதலால் நாகா தோஷ பரிகார தலமாகும் .
  • மரகதவள்ளி தாயார் ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு
  • செவ்வாய் தோஷம் ,குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் ,கடன் பிரச்னை உள்ளவர்கள் ,நாக தோஷம் உள்ளவர்கள் சென்று தரிசிக்க வேண்டிய கோயில்
  • மிக அழகான கிராமத்தில் பசுமையான சூழலில் அமைந்துள்ளது , புதறுகளால் சூழப்பட்ட இந்த கோயிலை சமீபத்தில் புதுப்பித்து குடமுழக்கு பண்ணினார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/lakshmi-narasimhar-temple-narasingapuram.html

செல்லும் வழி:
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் வழியில் queensland தாண்டி எம்பீ பேக்டரி வரும் அதன் வலது புறத்தில் திரும்பி பெரும்பாக்கம் சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம் .

திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .30 – 12 .00 மாலை 4 .30 -8 .00

அருகில் உள்ள கோயில்
இக்கோயிலின் அருகில் கூவம் திரிபுராந்தக கோயில் இது தேவார பாடல் பெற்ற தலம், மற்றும் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் இக்கோயில் கேட்டை நட்சத்திர பரிகார தலமாகும் .இவை இரண்டையும் தரிசிக்கலாம் .

Location :

Leave a Reply