ஸ்ரீ வைகுண்டநாதர் பெருமாள் – காஞ்சிபுரம்
இறைவன் : வைகுந்தநாதன்,பரமபதநாதன்
தாயார் : வைகுந்தவல்லி
கோலம் : வீற்றிருந்த கோலம்
விமானம் : முகுந்த விமானம்
தீர்த்தம் : ஐரம்மத தீர்த்தம்
ஊர் : காஞ்சிபுரம்
புராண பெயர் : திருபரமேஸ்வரர் விண்ணகரம்
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
மங்களாசனம் : திருமங்கையாழ்வார்
- 108 திவ்ய தேசங்களில் 57 வது திவ்ய தேசமாகும் தொண்டைநாட்டு திவ்ய தேசமாகும் .
- பல்லவ மன்னர்கள் காலத்தில் நிர்ணயக்கப்பட்ட கோயில் , 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலாகும் ,நந்திவர்மன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது . அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடவரை அமைப்புடன் கூடிய புடைப்பு சிற்பங்கள் அதிக அளவில் உள்ளது. தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது .
- வைகுண்டவாசனின் வாயில் காவலர்களாக ஜெய,விஜயன் ஆகியோர்கள் கைலாத நாதரின் ஆசியுடன் பூலோகத்தில் அவதரித்தார்கள். அவர்கள் வைகுண்டநாதனுக்காக காஞ்சிபுரத்தில் கோயில் கட்டினார்கள் அவர்கள் அஸ்வமேத யாகம் நடத்தினார்கள் அப்போது அவர்களுக்கு பெருமாள் வைகுண்டத்தில் உள்ளது போல் இங்கு வந்து காட்சி தந்தார் அதன் பிறகு இங்கயே பக்தர்களுக்கு காட்சி தருவதற்காக இங்கயே தங்கிவிட்டார் .
- இவ் கோயிலே இப்போது பரமேஸ்வர விண்ணகரம் என்று அழைக்கப்படுகிறது . கருவறை 3 அடுக்குகளான அமைந்துள்ளது . பெருமாளின் நின்ற கோலத்தை மேல் தளத்திலும் ,பல்லவனுக்கும்,வில்லவனுக்கும் காட்சி தந்த அமர்ந்தகோலத்தை கீழ் தளத்திலும் ,வடக்கே தலை வைத்து தெற்கு நோக்கி தன் திருப்பாதத்தை வைத்தும் சயன கோலத்தில் நடு தளத்திலும் காட்சிதருகிறார் .
- தாயார் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் காட்சிதருகிறார் .
- வைகுண்ட ஏகாதசி அன்று எல்லா பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பார்கள் ஆனால் இக்கோயில் ஜெய விஜய ஆகியோர்கள் கட்டியதால் இங்கு பரமபத வாசல் கிடையாது .
- இப்போது கட்டட பராமரிப்பின் காரணத்தால் 1964 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாம் தளத்திற்கு செல்ல அனுமதி இல்லை .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/vaikundanathar-perumal-temple.html
செல்லும் வழி:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் உள்ளது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 – 12 .00 , மாலை 5 .00 -7 .30
Location :