ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் – திருவிடந்தை
இறைவன் : நித்திய கல்யாண பெருமாள் ,லட்சுமி வராக பெருமாள்
தாயார் : கோமளவல்லி தாயார்
தல விருச்சம் : புனை ,ஆனை
தீர்த்தம் : வராஹ தீர்த்தம் , கல்யாண தீர்த்தம்
கோலம் : வீற்றிருந்த கோலம்
விமானம் : கல்யாண விமானம்
புராண பெயர் : வராகபுரி ,திருவிடந்தை
ஊர் : திருவிடந்தை
மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு
மங்களாசனம்: திருமங்கையாழ்வார்
- 108 திவ்ய தேசங்களில் இக்கோயில் 63 திவ்ய தேசமாகும் ,தொண்டை மண்டல திவ்ய தேசம் .
- இக்கோயில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய மிக அழகான பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாமல் நடுத்தரமான கோயிலாகும் .
- பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட கோயில் , 6 ஆம் நூற்றாண்டில் இருந்து 9 நூற்றாண்டு காலத்தை சேர்ந்த கோயில் , 7 நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டு 11 நூற்றாண்டில் சோழர்களால் பராமரிப்புகள் செய்யப்பட்டுள்ளது .
- இக்கோயிலின் வெளியே 16 கால் மண்டபம் மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது .திராவிட கட்டட அமைப்பை சார்ந்தது ,இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
- சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில் குனி என்னும் முனிவர் இறைபதம் அடைய தவம் செய்துவந்தார் அப்போது அங்கு ஒரு கன்னிகை அவருக்கு பணிவிடை செய்து அவருக்கு தர்மபத்தினியாக இருந்து தானும் இறைபதம் அடையவேண்டும் என்று எண்ணினால் அனால் முனிவர் இறைபதம் அடைந்து விட்டார் , அதனால் அவள் தன் ஆசை நிறைவேற காடுகளை சுற்றி திரிந்தார் அவரது உண்மையான விருப்பத்தை அறிந்து காலவ முனிவர் அவரை திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன ,அவள் தர்மபத்தினியாக வாழ்ந்து பரம பதம் அடைந்தார் , எல்லா குழந்தைகளுக்கும் திருமணம் எவ்வாறு செய்துமுடிக்கபோரோம் என்ற கவலை அவரை தொற்றிக்கொண்டது .
தன்னுடைய நிலையை வேதமூர்த்தியான வராகரிடம் வேண்டினார் ,அவர் கவலை படாதே தானே தினமும் பிரம்மச்சாரியாக வந்து எல்லா கன்னிகைகளையும் திருமணம் செய்து கொள்வதாக கூறினார் . திருமணத்தில் வேதங்கள் சடங்குகள் முக்கியமாகும் மற்றும் கன்னிகாதானம் என்பது மிக முக்கியமானதாகும் அதுமட்டும் அல்லாமல் திருமணம் தெய்வத்தால் நிச்சயிக்கப்படுகிறது என்ற சத்திய வாக்கிற்கு பொருள் சேர்க்கும் படியாக இறைவனே 360 கண்ணிகளை திருமணம் செய்துகொண்டார் .361 நாள் அனைத்து கன்னிகளையும் ஒன்றாக்கி அகிலவல்லி தாயார் என்ற நாமம் சூட்டி அவரை எழுந்தருள செய்தார் . காலவ முனிவர் இறைவனின் கருணையை கண்டு ஆனந்த கண்ணீர் சிந்தினார் .360 பெண்களில் முதல் பெண்ணிற்கு கோமளவல்லி என்ற பெயர் இருந்ததால் ,இக்கோயிலில் தாயாருக்கு கோமளவல்லி என்ற பெயரோடு தனி சன்னதியில் வீற்றியுள்ளார்.
- பெருமாளாளுக்கு தினமும் கல்யாணம் நடக்கும் திவ்யதேசமாகும் .
- திருமகளை வலது புறத்தில் தாங்காமல் இடது புறத்தில் தாங்கி நிற்கும் ஒரே தலம் என்பதால் இத்தலம் அமைவிடத்திற்கு திருவிடந்தை என்று பெயர் ஏற்பட்டது .
- இவரின் கன்னத்தில் திஷ்டி பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது அதேபோல் தாயார் அவர்களுக்கும் திஷ்டி பொட்டு உள்ளது .
- திருமணம் தோஷம் மற்றும் திருமண தடை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு பெற்றோர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் வந்து புதிய பூ மாலை வாங்கி வந்து இறைவனுக்கு அர்ச்சனை செய்து அவ் மாலையுடன் கோயிலை 9 முறை வலம் வந்து கொடி கம்பத்தின் முன் வண்ணங்கி அவ் மாலையுடன் வீட்டிற்கு சென்று பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும் ,திருமணம் முடிந்தவுடன் தம்பதியராக அவ் மாலையுடன் வந்து இக்கோயிலில் பின் உள்ள தல விருச்ச மரத்தில் சேர்த்துவிடவேண்டும் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/nithya-kalyana-perumal-thiruvidanthai.html
செல்லும் வழி:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் செல்லும் வழியில் மாமல்லபுரத்திற்கு முன்பாக இக்கோயில் அமைந்துள்ளது . அருகில் திருப்போரூர் கந்தசாமி கோயில் உள்ளது.
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 – 12 .00 , மாலை 3 .00 – 8 .00 வரை
Location: