ஸ்ரீ வடக்குநாதர் கோயில் – திருச்சூர்
இறைவன் : வடக்குநாதர்
தாயார் : பார்வதி தேவி
ஊர் : திருச்சூர்
மாவட்டம் : திருச்சூர் , கேரளா
- இங்குள்ள சிவலிங்கம் 12 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட மிக பழமையான நெய்யிலான லிங்கமாகும் . இவ் நெய் லிங்கம் தீப ஆர்த்தியின் போதோ வெப்பத்தாலோ உருகாமல் இறுகி மலை போல் உள்ளது. இவருக்கு நெய்யால் அபிஷேகம் செய்கிறார்கள் அவை அப்படியே உறைந்து கெட்டியாக உறைந்துவிடுகிறது. எப்போதாவது நெய் வெளிப்பட்டாலும் அது காணாமல் போய்விடுகிறது ,இவ் நெய்யை பூச்சிகள் அண்டாது ,மற்றும் இவ் நெய்யிக்கு மணம் கிடையாது . லிங்கத்தை பாதுகாக்க பெரிய கவசம் சாத்தப்படுகிறது .
- அமர்நாத்தில் பனிலிங்கம் உள்ளது போல் இங்கு நெய் லிங்கம் உள்ளது
- இவ் நெய்யை வாங்கி சாப்பிட்டால் நாள்பட்ட நோய்,மலட்டுத்தன்மை ஆகியவை தீரும் .
- ஊரின் நடுவில் பரந்து விரிந்த இடத்தில் இக்கோயில் உள்ளது , இக்கோயில் லிங்கத்தை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார் , பல்லாயிரம் வருடங்கள் தொன்மையான ஆலயம் இது .
- பெருந்தச்சன் என்பவர் இக்கோயிலை நிர்மாணித்தார் ,அதன் பிறகு நம்பூதிரிகள் நிர்வாகித்தார்கள். கொச்சி ராஜா சக்தன் தம்புரான் காலத்தில் இக்கோயிலை பொதுமக்கள் நிர்வகிக்கும் ஆணையை பிறப்பித்தார் .
- இங்குள்ள பார்வதி தேவி யை பரசுராமரும் , ராமர் ,நாராயணர் மற்றும் கணபதி ஆகியோரை ஆதி சங்கரர் ப்ரிதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது . இங்குள்ள மணி ஆனது வாசுகி பாம்பு மறு உருவமாக கருதப்படுகிறது ,இந்த மணியை பிரதோஷ காலத்தில் நம்பூதிரிகள் மட்டுமே அடிப்பார்கள் .
- இக்கோயிலின் பூரம் திருவிழா ஏப்ரல் மே மாதங்களுக்கு இடையே நடக்கும், அப்போது 150 யானைகள் அணிவகுக்கும் ,இவ் திருவுள்ள மிகவும் பிரசித்துப்பெற்றது.
- ஆதி சக்கரர் பெற்றோர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டதால் தான் அவருக்கு ஆதி சங்கரர் பிறந்தார்
செல்லும் வழி:
கோயம்பத்தூர் இருந்து திருச்சூர் செல்ல ரயில் மற்றும் பேருந்துகள் நிறைய உள்ளன ,சென்னையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து ரயில்களும் செல்கின்றன. ஊரின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது
திறந்திருக்கும் நேரம் :
காலை 4 .00 -11 .00 மாலை 5 .00 -8 .30 வரை
குறிப்பு : கோயிலுக்குள் சட்டை அணிய அனுமதியில்லை ,பெண்கள் சேலை மற்றும் பாரம்பரிய உடை மட்டுமே அணிய அனுமதி உண்டு .
அருகில் உள்ள கோயில் :
குருவாயூருக்கு இவூரில் இருந்து செல்வது ரொம்ப சுலபம்
Location :
Nice information
Nice information. We are eagerly waiting to see this temple.