ஸ்ரீ தாணுமாலயன் கோயில் -சுசீந்திரம்
இறைவன் : தாணுமாலயர்
தாயார் : அறம் வளர்த்த நாயகி
தல தீர்த்தம் : கொன்றை
தல விருச்சகம் : பிரபஞ்ச தீர்த்தம்
ஊர் : சுசீந்திரம்
மாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு
- இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது , இக்கோயிலை முன்னர் நம்பூதிரிகள் நிர்வகித்துவந்தனர் அவர் குடும்பத்தை தேக்குமுன் மடம் என்று அழைத்தார்கள் , பின்பு திருமலை நாயக் மற்றும் திருவாங்கூர் மகாராஜ் ஆகியோர்கள் நிர்வகித்தனர் , கி.பி 1875 ஆம் ஆண்டு திருவாங்கூர் மஹாராஜாவால் லாட்டரி ஆரம்பிக்கப்பட்டது அப்போது 40000 ரூபாய் இக்கோயில் மறுசீரமைப்புக்காக லாட்டரி பணம் செலவிடப்பட்டது .
- இக்கோயிலில் முதலில் தட்சணாமூர்த்தியை வணங்கி விட்டு கடைசியில் விநாயகரை வணங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது .
- இக்கோயில் மண்டபங்கள் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளது ,கலைநயத்துடன் கூடிய செண்பகராமன் மண்டபம் ,இசைத்தூண்களை கொண்ட குலசேகர மண்டபம் ஆகியவை புகழ்பெற்றவை .
- இங்கு வேறு எங்கும் காணமுடியாத கணேசனி என்ற விநாயகரின் பெண் உருவத்தை காணலாம் . இறைவனின் வாகனமான நந்தி தேவர் 13 அடி உயரமும் 21 அடி நீளமும் உடைய இந்தியாவில் உள்ள மிக பெரிய நந்திகளில் ஒன்றாகும் .
- ஆஞ்சநேயர் கோயில் : இங்குள்ள ஆஞ்சநேயர் இக்கோயிலின் மேலபிரகாரம் தோண்டும் போது கிடைத்தது ,சுமார் 18 அடி உயரம் கொண்ட நின்ற நிலையில் காட்சி தருகிறார் , இவரை 1930 ஆண்டு நிறுவினார்கள் ,1740 ஆம் ஆண்டு திப்புசுல்த்தான் படையெடுப்பின் போது இவ் சிலையானது சிதலமடைந்தது ,புனரமைத்து பின்பு நிறுவினார்கள் ,மிகவும் பிரசித்துப்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலாகும் .
- தாணு (சிவன் ),மால் (விஷ்ணு ),அயன் (பிரம்மா)ஆகியோர் இணைந்ததே தாணுமாலயர் என்ற பெயராகும் ,திருமாலை முடியிலும்,பிரம்மாவை அடியிலும் தன்னை நடுவிலும் வைத்து ஈசன் காட்சிதரும் இடமே சுசீந்திரம் ஆகும் . அகலியால் சாப விமோச்சனம் பெற்ற இந்திரன் இவ் தளத்திற்கு வந்து இறைவனை வணங்கிய பின்னரே சாப விமோச்சனம் பெற்றதாக சுசீந்திர ஸ்தல வரலாறு கூறுகிறது .
- மாமுனிவர் அத்திரியும் அவரது தர்மபத்தினி அனுசூயாவும் இவ் தளத்திற்கு வந்து தவம் செய்து வந்தனர்,முனிவர் இமயமலை சென்ற போது அயன் ,அரி ,அரன் ஆகிய மூவர்களும் முனிவர் தங்கியிருந்த இடத்துக்கு பிராமணர் வடிவில் வந்தனர் அப்போது அவர்கள் அனுசூயாவிடம் தமக்கு உணவு வேண்டும் என்று கேட்டார்கள் , அவரும் அவர்களுக்காக உணவு சமைத்து பரிமாறும் போது அவர்கள் உடைகள் உடுத்தி பரிமாறும் ஒருவரால் தங்களால் உணவு உண்ண முடியாது என்று கூறினார்கள் ,அப்போது அனுசூயா தன் கணவன் காலை அலம்பிய நீரை எடுத்து அவர்கள் மேல் தெளித்தார் உடனே அவர்கள் குழந்தை வடிவமாக மாறினார்கள் ,பின் அவர்களுக்கு உணவு ஊட்டி ,தாலாட்டி உறங்க வைத்தார் , வெகு நேரமாக தன் கணவன்கள் காணாமல் தேவியர்கள் இவ் இல்லத்திற்கு வந்தனர் அவர்கள் அனுசுயாவிடம் வேண்டி கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவள் அவர்களை மீண்டும் பழைய உருவத்திற்கு கொண்டுவந்தாள். அப்போது அங்கு வந்த முனிவரும் நடந்ததை அறிந்துகொண்டார் அவர்கள் இருவருக்கும் மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர் .இவ் நிகழ்ச்சியை நினவுவூட்டவே இக்கோயிலை நிறுவினார்கள் என்று கூறப்படுகிறது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-thanumalayan-temple-suseendram.html
செல்லும் வழி:
நகர்க்கோயில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் சுமார் 10 km தொலைவில் இக்கோயில் உள்ளது. நிறைய பேருந்து வசதிகள் உள்ளன . இக்கோயிலுக்கு அருகில் கன்னியாகுமரி உள்ளது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 4 .30 -11 .30 மாலை 5 .00 -8 .30
Location: