கடற்கரை கோயில் – மாமல்லபுரம்
கண்னை மயக்கும் அழகிய சிற்பங்கள் கடற்கரையின் அலைகளின் சத்தங்களை தன் அழகால் உள்வாங்கி நம் காதுகளையும் ,கண்களையும் எங்கும் செல்ல விடாமல் நம்மை இழுக்கும் இந்த கடற்கரை கோயிலை நம் எழுத்துக்களால் அடக்கிடமுடியாது .
இந்த மாமல்லபுரம் குடவரை கோயில் கோயில்களுக்கெல்லாம் முன்னோடியான கோயிலாகும்.
இக்கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனால் கிபி 700 -728 காலத்தை சார்ந்த கோயிலாகும் , இப்போது இக்கோயில் தொல்பொருள் ஆராச்சியின் துறையின் கீழ் பராமரிக்கப்படுகிறது . யூனிஸ்கா அமைப்பினால் உலக பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .
கிழக்கு நோக்கிய சத்ரியசிம்ம பலவேஸ்வர கிருஹம் என்னும் கோயில் நான்கு அடுக்குகளுடன் கூடிய உயரமான விமானம் மற்றும் நுழைவாயிலில் சிறிய கோபுரத்துடன் விளங்குகிறது .இக்கோயிலின் கருவரையில் எட்டு பட்டைகளுடன் கூடிய தாரா லிங்கமும் சோமஸ்கந்தர் சிற்பமும் உள்ளன .மேற்கு நோக்கிய ராஜசிம்ம பல்லவேஸ்வரர் கிரஹம் என்னும் கோயில் இரண்டு அடுக்குகள் கூடிய விமானத்துடன் காணப்படுகிறது ,இதற்கு முன் உள்ள கட்டடங்களின் அடித்தளமே காணப்படுகிறது .இவ் இரண்டு கோயில்களுக்கும் இடையே கிடந்த கோலத்தில் காலத்தால் முந்தய திருமால் சிற்பம் இயற்கையான பாறையில் செதுக்கப்பட்டுள்ளது .
மாமல்லபுரத்தில் நம் கண்ணுக்கு விருந்துகள் படைக்கும் இடங்கள் நிறைய உள்ளன :
1 . தல சயன பெருமாள் -108 திவ்ய தேசங்களில் ஒன்று
2 . அர்ச்சுனன் தபஸ்
3 . கிருஷ்ணர் மண்டபம்
4 . பஞ்ச ரதம்
5 . கோவர்தன மலையை தூக்கும் கிருஷ்ணர்
6 . குழல் ஊதும் கண்ணன்
7 . விநாயகர் கோயில்
8 . மகிஷாசுரமர்த்தினி குகை
9 . கொற்றவை அரக்கன் மகிஷாசுரனுடன் போரிடும் சிற்பம்
10 . அனந்த சயன பெருமாள் சிற்பம்
11 . ராமானுஜ மண்டபம்
12 . கலங்கரை விளக்கம்
13 .ராயர் மண்டபம்
14 . வராகர் மண்டபம்
15 .கோனேரி மண்டபம்
16 . பிடாரி ரதம்
17 . சாளுவன்குப்பம் புலி குகை
18 . சாளுவன்குப்பம் முருகன் கோயில்
19 . அதிரணசண்ட மண்டபம்
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/shore-temple-mamallapuram.html
செல்லும் வழி:
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை(ECR ) வழியாக செல்லும் அனைத்து பாண்டிச்சேரி பேருந்துகள் செல்லும் மற்றும் நிறைய பேருந்துகள் மாமல்லபுரத்திற்கு உள்ளன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து காரிலும் செல்லலாம் .சுமார் 30 km தொலைவில் உள்ளது.
அருகில் உள்ள முக்கியமான இடங்கள்
1 . நித்திய கல்யாண பெருமாள் – திருவிடந்தை
2 . கந்தசாமி கோயில் – திருப்போரூர்
3 . முட்டுக்காடு படகு சவாரி
4 . முதலை பண்ணை
மாமல்லபுரத்தில் தங்குவதற்காக நிறைய ஹோட்டல்கள் உள்ளன