ஆடி அம்மாவாசை தர்ப்பணம்
நமக்கு உயிரையும் உடலையும் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் உபச்சாரங்களையும் தந்து அவர்களை துதிக்க வேண்டும் . இவர்களுக்கு நாம் தர்ப்பணம் அல்லது படையல் செய்யாமல் விட்டுவிட்டால் அவர்கள் மனவருத்தம் அடைவார்கள் அவர்களின் மனக்குரிய பித்ரு தோஷம் உண்டாக காரணமாகிவிடும் , அவர்களுக்கு சரியான நேரங்களில் எள்ளும் நீரும் விடாமலும் அல்லது தானம் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது காகத்திற்கு உணவு கொடுக்காமல் இருந்தாலோ மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டு அலட்சியமாக இருந்தால் மூன்று ஆண்டுகளில் பித்ரு தோஷம் உண்டாகும் .
சிலருக்கு ஜாதகத்திலேயே பித்ரு தோஷம் இருக்க வாய்ப்புண்டு அவர்கள் அதற்கான காரணங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்கள் செய்யவேண்டும் .
குடும்ப தலைவருக்கு பித்ரு தோஷம் இருந்தால் அவர்கள் அதெற்கென உள்ள பரிகாரங்களை செய்துவிடவேண்டும் இல்லை என்றால் ௧௬ தலைமுறை தோஷம் உண்டாகும் .
தடுமாறியவனுக்கு தை அம்மாவாசை ,ஆட்டம் கண்டவனுக்கு ஆடி அம்மாவாசை மறந்தவனுக்கு மஹாளய அம்மாவாசை ஓடி போனவனுக்கு ஒன்றுமே இல்லை என்ற சொல்வழக்கு உண்டு . ஆதலால் இந்நாட்களில் அவர்களுக்கு மறக்காமல் படையாலோ , தர்பணமோ செய்து காகத்திற்கு அன்னம் இடவேண்டும் மற்றும் பெரியவர்களுக்கு வஸ்திர தானம் அல்லது அன்னம் தரவேண்டும் .
பித்ருக்கள் நாம் கஷ்டப்படாமல் இருக்கவும் செல்வம் புகழோடு இருக்கவும் எப்போதும் பார்த்துக்கொள்வார்கள் அவர்களுக்கு நாம் இவற்றை செய்தால் அவர்கள் தோஷம் இன்றி மிக மகிழ்ச்சியுடன் இருக்கலாம் .
அன்றைய தினங்களில் சமையலில் பாகற்காய் , பிரண்டை , பலாக்காய் இருந்தால் மிக நல்லது . ஏன்னென்றால்
காரவல்லி சதம் ப்ரோக்தம் வஜ்ரவல்லி சதம் த்ரயம்
பிநச: ஷட்சதம் ப்ரோக்தம் ஸ்ராத்த காலே விதியதே:
காரவல்லி (பாகற்காய் )- 100 , வஜ்ரவல்லி (பிரண்டை )-300 , பனசம்(பலாக்காய் )-600 ஆக 1000 வகை காய்கள் சமைத்ததற்கு சமம் .
Tharpanam :https://www.indiatempletour.com/category/tharpanam/