ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் – திருக்கோயிலூர்
இறைவன் : வீரட்டேஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தலவிருச்சகம் : சரக்கொன்றை
தீர்த்தம் : தென்பெண்ணை ஆறு
- தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 222 வது தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 11 வது தலமாகும் .
- அட்ட வீராட்த் தலங்களில் மிக பழமையான 2 வீரட்டானம் தலமாகும் .
- அந்தகார சூரனை சிவபெருமான் வதைத்த தலம்.
- விநாயகர் அகவல் பாடிய ஔவையார் அவர்களை திருக்கைலாயத்துக்கு கொண்டு சேர்த்த பெரியானை கணபதி சிறப்புடையது .
- சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் பாடிய திருத்தலம் .
- திருமூல நாயனார் அவர்களின் திருமந்திரம் பாடல் பெற்ற தலம்
- வாஸ்து பூஜை மூலவர் தோன்றிய இடம்
- 64 பைரவர்கள் தோன்றிய இடம்
- சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற இடம் .
- பில்லி, சூனியம் ,வைப்பு ஆகியவற்றிக்கு விமோசனம் கிட்டும் இடம் .
- பாரி வேந்தர்களின் மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகியவர்களுக்கு இத்தலத்தில் கபிலர் மற்றும் ஔவையார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது .
- ராஜராஜ சோழன் பிறந்த ஊர் . இவருடைய தமக்கை குந்தவை இக்கோயிலுக்கு பொன், பொருள் தந்துள்ளார் .
- கபிலர் உயிர் நீத்த இடம் . இவருடைய குன்று கோயிலின் அருகிலேயே உள்ளது .
- இறைவன் சுயம்புவாக காட்சி தருகிறார் . அம்பாள் திரிபுர சுந்தரி தோன்றிய இடம் .
- ஷண்முக வேலவரை அருணகிரிநாதர் பாடியுள்ளார் .
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த தலத்தை என்னுடைய india temple tour தலத்தில் பகிர்வதை பெருமையாக கருதிகிறேன்.
அமைவிடம் மற்றும் கோயில் திறந்திருக்கும் நேரம்
திருக்கோயிலூர் பேருந்து நிலையத்திற்கு முன்னதாக ஆற்று பாலத்தின் இறக்கத்தில் கீழையூர் என்ற இடத்தில உள்ளது .
காலை 6 .30 – 12 .00 மாலை 5 .00 – 8 .30
Location Map :