ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – கும்பகோணம்
இறைவன் : காசிவிஸ்வநாதர்
இறைவி : விசாலாட்சி
தல விருச்சகம் : வேப்பமரம்
தல தீர்த்தம் : மகாமக குளம்
புராணபெயர் : திருக்குடந்தை காரோணம்
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு
- நவ கன்னிகள் வழிபட்ட தலமாகும் .கங்கை ,யமுனா ,கோதாவரி ,நர்மதா ,சரஸ்வதி ,கிருஷ்ணா,,துங்கபத்திரா ,சரயு ஆகிய நவகன்னிகளும் நெடுங்காலமாக ஒரு குறை இருந்தது ,மக்கள் தன பாவங்களை எங்களிடம் நீராடி தன் பாவங்களை இறக்கி செல்கின்றனர் .அவ்வாறு இறக்கிய பாவங்களை தாங்கள் சுமக்க வேண்டுமா என்று ஈசனிடம் முறையிட்டனர் .இறைவன் நவ கன்னியர்களையும் அழைத்து வந்து கும்பகோணம் மகா மக குளத்தில் நீராடினால் எல்லா பாவங்களும் தீரும் என்று கூறினார் .அவர்களும் நீராடி பாவங்களை தீர்த்துக்கொண்டார்கள் . ஈசனும் மகாமக குளத்தில் எழுந்தருளியுள்ளார் .
- ராமர் இலங்கைக்கு செல்லும் முன்பு இத்தலத்திற்கு வந்து லிங்க பிரிதிஷ்டை செய்து ராமர் வழிபட்ட ஷேத்திர மகாலிங்கத்தை இக்கோயிலுக்கு வடகிழக்கு மூலையில் நாம் காணலாம் .இந்த மகா லிங்கம் இன்றும் வளர்ந்து வருவதாக கூறுகின்றனர் .இத்தலத்திலேயே ராமர் ராவணனை கொள்ள ருத்ராம்சம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காரோணம் என்ற பெயர் பெற்றது .
- இங்கு வேப்ப மரத்தின் கீழ் சிவபெருமான் உள்ளது ஒரு சிறப்பம்சமாகும் .ஏனனில் அம்மன் மற்றும் விநாயகரே பெரும்பாலும் வேப்ப மரத்தின் கீழ் இருப்பார்கள் .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .00 வரை , மாலை 4 .30 -8 .30 வரை
செல்லும் வழி:
கும்பகோணம் மகாகுளத்தின் வடகரையில் இவ் கோயில் அமைத்துள்ளது .
Location:
தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!