ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் – ஸ்ரீரங்கம்
குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை இலங்கை நோக்கிக்
கடல் -நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்வேன் உலகத்தீரே ?!
-தொண்டரடி பொடிஆழ்வார்
மூலவர் — ரங்கநாதர் ,பெரிய பெருமாள்
தாயார் — அரங்கநாயகி
கோலம் —சயனம் கோலம்
விமானம் –-ப்ரணவாக்குறுதி விமானம்
தீர்த்தம் — சந்திரபுட்கரணி
ஊர் —- ஸ்ரீரங்கம்
- திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசம் தலம் இது .
- பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் தலம்
- பெரிய பெருமாள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் தலம் . இங்கு பெரிய கோயில் ,பெரிய பெருமாள் ,பெரிய பிராட்டி,பெரிய கருடன் ,பெரிய மதில் ,பெரிய கோபுரம் எல்லாமே பெரியதாகும் .
- அரங்கநாதருக்கு 7 நாச்சியார்கள் உள்ளனர் . ஸ்ரீதேவி ,பூதேவி ,துலுக்க நாச்சியார் ,சேரகுல வல்லி நாச்சியார் ,கமலவல்லி நாச்சியார் ,கோதை நாச்சியார் (ஆண்டாள் ),ரெங்கநாச்சியார் .
- மதுரகவி ஆழ்வாரை தவிர 11 ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பெற்ற ஒரே தலம் .
- 21 கோபுரம் 7 சுற்று பிரகாரம் உள்ள மிக பெரிய கோயில் .
- காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் இடையில் தீவு போல் உள்ள இடத்தின் நடுவில் மிக பிரமாண்டமாக காட்சி தரும் தெற்கு ஆசியாவிலேயே பெரிய கோபுரம் உள்ளது .17 நூற்றாண்டை சேர்ந்தது .தர்மவர்ம சோழன் முதலில் ஆலயம் அமைத்து வழிபட்டார் .
- ஆண்டாள் நாச்சியார் இறைவனிடம் ஐக்கியமான தலம் . திருப்பாணாழ்வார் ,ராமானுஜர் ,பெரும்புதூர் மாமுனி ஆகியோர் முக்தி அடைந்த தலம் .
- மேற்கு நோக்கி அமைந்த தலம்
- கம்பராமாயணம் அரங்கேறிய தலம்
தல வரலாறு :
நாராயணர் உலகத்தில் உயிர்களை படைக்கும் பொருட்டு தனது நாபியிலிருந்து பிரம்மாவை படைத்தார் .படைக்கும் மூர்த்தியனான பிரம்மா செய்த தவத்தால் இறைவன் திருப்பாற்கடலில் ப்ரணவாகுர்த்தி விமானத்தில் சயனகோலத்தில் சுயம்புவாக தோன்றினார் . மூர்த்திக்கு நித்ய பூஜைகள் ப்ரம்மா சூரியனை நியமித்தார் . சூரிய குலத்தில் பிறந்த இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகர் அயோத்திக்கு எடுத்துவந்து பூஜை செய்துவந்தார் . ராமபிரான் இந்த விமானத்தை தனது பட்டாபிஷகத்திற்கு வந்த விபூசகனுக்கு பரிசாக கொடுத்தார் . அவர் விமானத்தை தன் தலையில் சுமந்தபடி இலங்கையை நோக்கி சென்றார் அப்போது காவேரி கரையில் இறக்கி வைத்துவிட்டு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு மீண்டும் அதை எடுக்க முயற்சிக்க அது நடவாமல் போனது பலநாள் அங்கேயே அவர் தங்கியிருந்தார் அப்போது அவருடைய உறக்கத்தின் போது அசீரிரி கேட்டது தான் இங்கேயே இருப்பதாகவும் இலங்கையை நோக்கி எப்போதும் காட்சி தருவதாகவும் கூறி மறைந்தார் .
திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி:
6 .00 AM – 7 .15 , 9 .30 -1 .00
2 .30 pm – 5 .30 , 7 .00 -8 .00
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன , திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன . ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ அஹோபில மடம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் மடம் உள்ளது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-ranganathar-swamy-temple-srirangam.html
அருகில் சமயபுரம் மாரியம்மன் கோயில் , திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வர் கோயில் உள்ளது .