Sri Panchavarneswarar Temple- Uraiyur,Trichy

ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் – உறையூர்

Sri Panchavarneswarar Temple- Urayur

இறைவன் : பஞ்சவர்ணேஸ்வரர் ,தான் தோன்றீஸ்வரர்

இறைவி : காந்திமதி அம்மை ,குங்குமவல்லி

தல விருச்சகம் : வில்வ மரம்

தல தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம் ,சிவ தீர்த்தம்,நாக தீர்த்தம்

புராண பெயர் : திருமுக்கீச்சரம்

ஊர் : உறையூர் ,திருச்சி

மாவட்டம் : திருச்சி, தமிழ்நாடு

  • தேவார பாடல் பெற்ற தென்கரை தலங்களில் 5 வது தலமாகும் .தேவார 274 தலங்களில் 68 வது தலமாகும் .
  • 63 நாயன்மார்களில் ஒருவரான  புகழ்ச்சோழநாயனார் அவதார தலம்.மற்றும் யானைப்புக முடியாத 70 மாட கோயில்களை கட்டிய கோச்செங்கட் சோழன் பிறந்த தலமும் இதுவாகும் .
Sri Panchavarneswarar Temple- Urayur
யானையை கோழி குத்தி தாக்கும் சிற்பம்
  • கரிகால பெருவளத்தான் என்ற சோழ மன்னன் பட்டணத்து யானையின் மீது உலா வரும்போது அவனது யானைக்கு மதம் பிடித்துவிட்டது ,அப்போது அவன் இறைவனை மனதில் நினைத்து வேண்டினான் ,இத்தல இறைவன் அங்கு உலாவிக்கொண்டிருந்த கோழியை தன் கண்ணால் பார்த்தார் ,உடனே அந்த கோழி அசுர பலம் பெற்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தி தாக்கி அதன் மதத்தை போக்கி வென்றது . சிவபெருமானின் கருணையால் கோழி மூலம் தன்னை காப்பாற்றியதால் இவ் தலத்தில் இறைவனுக்கு கோயில் ஒன்றை எழுப்ப எண்ணி இக்கோயிலை கட்டினான் .கோயிலின் உள் மண்டபத்தில் இடப்பக்கம் உள்ள தூணில் உட்புறம் “யானைமீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது ,அவ் யானையை கோழி குத்தி தாக்கும் சிற்பம் புடைசிற்பமாக உள்ளது “. இதனால் இவூருக்கு ‘கோழியூர் ‘ என்ற மற்றொரு பெயரும் உண்டு .
Sri Panchavarneswarar Temple- Urayur
  • சோழ மன்னனின் மனைவி காந்திமதி சிறந்த சிவபக்தை ஆவார் .அவர் பிள்ளைப்பேறு அடைந்தபோதும் நாள் தவறாமல் தாயுமானவரை தரிசிப்பார் .அவ்வாரு ஒருநாள் இறைவனை தரிசிக்க செல்லும்போது வழியில் மயங்கி விழுந்தால் .தன்னால் இறைவனை காண முடியவில்லையே  என்று வருந்தினாள் .அவளுடைய மனவருத்தத்தை போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்கு காட்சி கொடுத்தார் .அதனால் ‘தான் தோன்றீஸ்வரர் ‘ என்று பெயரும் பெற்றார்.
Sri Panchavarneswarar Temple- Urayur
புகழ்ச்சோழநாயனார்
  • இத்தல இறைவன் உதங்க முனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து காலங்களில் காட்டியருளினார் .காலையில் இரத்தின லிங்கமாகவும் ,உச்சிக்காலத்தில் ஸ்படிக லிங்கமாகவும் ,மாலையில் ஸ்வர்ண லிங்கமாகவும் ,இரவில் வைர லிங்கமாகவும் ,அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும் காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார் .உதங்க முனிவர் சந்நிதி இறைவனின் சன்னதிக்கு நேர் எதிரே உள்ளது.  

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-panchavarneswarar-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00 வரை ,மாலை 4 .00 -9 .00 மணி வரை
தொலைபேசி எண்: 9443919091

செல்லும் வழி

திருச்சியின் ஒரு பகுதியே இந்த உறையூர் ஆதலால் திருச்சியின் எந்த பகுதியில் இருந்தும் இக்கோயிலுக்கு செல்லலாம் .

Location:

Leave a Reply