Sri Uppiliappan Temple- Thirunageswaram

ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயில் – திருநாகேஸ்வரம் (திரு விண்ணகரம் )

Sri oppilyappan temple, thirunageswaram
Moolavar ( thanks google)

மூலவர் – ஸ்ரீ ஒப்பிலியப்பன்

தாயார் : பூமாதேவி

ஊர் பெயர் : திரு நாகேஷ்வரம் ( திரு விண்ணகரம்)

Sri Uppliyappan Temple, Thiru vinnagaram(thiru nageswaram)
Main Gopuram
  • திவ்ய தேசங்களில் 13 வது தலம் ஆகும்
  • பேயாழ்வார் ,திருமங்கை ஆழ்வார் ,நம்மாழ்வார் அவர்களால் மங்களாசனம் செய்யப்பட்டது .
  • நின்றகோலத்தில் கிழக்கு திசையை நோக்கி காட்சி தருகிறார் .
  • மார்கண்டய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாக பிறக்கவேண்டும் என்றும் திருமால் தனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று நினைத்து இங்குள்ள துளசி வனத்தில் கடும் தவம் புரிந்தார் ,அவரின் தவத்தில் மனமிரங்கிய பூமாதேவி துளசி செடியின் அருகே 2 வயது குழந்தையாக பிறந்தார் . திருமண வயதை முடிந்த பூமாதேவியை மணக்க திருமால் வயோதிக அந்தணன் வேடத்தில் வந்து பெண் கேட்டார் அதெற்கு அவர் என் மகள் பச்சிளம் குழந்தை அவளுக்கு உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது என்று மறுத்துவிட்டார் . ஆனால் ஸ்வாமியோ என்னக்கு உப்புஇல்லாமல் சமைத்து கொடுத்தாலும் பரவாயில்லை ஆனால் அவளையே மணப்பேன் என்று கூறினார் . மகரிஷி வேறு வழியில்லாமல் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டினர் உடனே அந்தணராக வந்த திருமால் ஸ்ரீனிவாசனாக காட்சி தந்து பூமாதேவியை மணந்தார் . இத்தலத்தில் பூமாதேவியுடன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார் மற்றும் உப்பில்லாத உணவை விரும்பி ஏற்றதால் இங்கு உப்பிலியப்பன் என்ற நாமத்தோடு காட்சிதருகிறார் . எனவே திவ்ய தேசங்களிலேயே உப்பில்லாமல் படைக்கப்படும் ஒரே தலமாகும் .
  • தாயாருடன் காட்சி தரும் திவயதேசம்
  • தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தலம் . திருப்பதி செல்லமுடியாதவர்கள் இத்தலத்திற்கு செல்லலாம் .
  • நம்மாழ்வாருக்கு பொன்னப்பன் ,மணியப்பன்,முத்தப்பன் ,என்னப்பன் மற்றும் திருவிண்ணகரப்பன் என்று ஐந்து வடிவங்களில் காட்சி கண்ட தலம் இது .

செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம் :


06 .00 – 01.00
04 .00 – 09.00

கும்பகோணத்திலிருந்து 5 கிம் தொலைவில் உள்ளது . இக் கோயிலின் அருகிலேயே ராகுதலமான திருநாகேஸ்வரம் உள்ளது . மற்றும் 3 km தொலைவில் அய்யாவாடி பிரத்யங்கரா தேவி கோயில் உள்ளது .
navagraha temple tour செல்பவர்கள் கும்பகோணம் temple tour செல்வபவர்கள் கண்டிப்பாக சென்று பார்க்கவேண்டிய தலம் .

Location Map :

Leave a Reply