Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் – திருவிடைமருதூர்

Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

இறைவன் : மகாலிங்கேஸ்வரர்

இறைவி :  பிருஹத் சுந்தர ருசாம்பிகை, நன்முலைநாயகி

தல விருச்சம் : மருதமரம்

தீர்த்தம் : அயிராவணத்துறை, காவேரி ,காருணிய அமிர்த தீர்த்தம்

ஊர் : திருவிடைமருதூர்

மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு

பாடியவர்கள் : சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர்

தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 30 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்கள் 276 இல் 93 வது தலமாகும் .

திருவிடைமருதூர் தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாகும் .இவ் ஆலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நதி மிகவும் புகழ்பெற்றது .அம்பாள் சந்நதிக்கு தெற்கு பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி உள்ளது .மூகாம்பிகை சந்நிதி இந்தியாவில் திருவிடைமருதூரிலும்,கர்நாடக மாநிலத்தில் கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது .

இத்தலம் வரகுண  பாண்டியன் என்ற பாண்டிய நாடு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும் .ஒருமுறை வரகுண  பாண்டியன் அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாட சென்றான் .அப்போது வழியில் உறங்கி கொண்டிருந்த அந்தணர் ஒருவர் மன்னர் சென்ற குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான் .இதனால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது .

அந்தணனின் ஆவியும் அரசனை பற்றிக்கொண்டது .சிறந்த சிவபக்தனான வரகுண   பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டான் .இறைவன் சோமசுந்தர் மன்னர் கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும் படி கூறினார் .

எதிரிநாடான சோழநாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படி செல்வது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது .போருக்கு சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்தி சென்றான் .அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான் .

வரகுண பாண்டியனை பற்றியிருந்த பிரம்ஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனை பின்பற்றி கோவிலிலுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன .அரசர் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தன .ஆனால் இறைவன் வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார் .

அரசனும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான் .இதனால்தான் இன்றளவும் இவ்வாலயத்தில் வரும் பக்தர்கள் பிரதான வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கில் உள்ள அம்மன் சந்நிதி வழியாக வெளியே செல்லும்  முறையை கடைபிடித்து வருகிறார்கள் .

ஆண்ட விநாயகர் :

இத்தல விநாயகர் இத்தல ஈசனை பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் பெற்றது .

பூஜை விதிகளை தேவேர்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு பரமசிவன் தம்மைத்தாமே அர்ச்சித்து காட்சியருளுகிறார் .சிவா பரிகார மூத்த தலங்கள் யாவும் அருகே அமையபெற்றதால் இது மகாலிங்க தலம் எனப்படுகிறது . மற்ற பரிகார தலங்கள் யாவன .1 . விநாயகர் – திருவலஞ்சுழி ,2 . முருகர் – சுவாமி மலை ,3 . நடராசர் – சிதம்பரம் ,4 .தட்சணாமூர்த்தி – ஆலங்குடி ,5 .சண்டேகேஸ்வரர்- திருசேய் நல்லூர் ,6 .பைரவர் – சீர்காழி ,7 . நவகிரகம் – சூரியனார் கோயில்

Sri Mahalingeswarar Temple- Thiruvidaimarudur

இத்தலத்தில் மகாலிங்க பெருமானுக்கு பூஜை நடந்த பிறகே விநாயகருக்கு பூஜை நடைபெறும் .இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாகும் ,27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது .27 நட்சத்திரங்களுக்கும் ,27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன .

இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும் ,இத்தலத்தில் உள்ள அசுவ மேதத் திருச்சுற்றை (முதல் மதில் உட்புற சுற்று ) வலம் வருவோர் அசுவமேத யாகம் செய்த பலனை பெறலாம் .கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கைலாய மலையை வலம் செய்த பலனை பெறுவர்.

சோழர்கள் ,பாண்டியர்கள் ,நாயக்கர்கள்,மராட்டியர்கள் ஆகியோர்கள் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள் . சோழர் கால கல்வெட்டுகள் பல உள்ளன .

திறந்திருக்கும் நேரம் :

காலை -5 .30 முதல் 12 .30 வரை ,மாலை 4 .30 முதல் 9 .00 வரை

தொலைபேசி எண்: 0439 -2460660

அமைவிடம் : .

கும்பகோணத்தில் இருந்து சுமார் 9 .00 km தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது .

Sri Mahalinga Swamy Temple is one of the Panchakrosha Sthalas.The Ammbal Shrine is one of the Sakthi Bheetas. Chakkara Maha Meru is installed here.The presiding Deity is Mahalinga ,because Siva worshipped Himself. Her consort is Perunalamamulaiammai. She is Bruhatsundara Gujamabika. In her Shrine is a cell facing north. This is the temple of Mookaambika.There are many Lingas in the Shrine. Agasthiya Linga, Kasyapa Linga, Chola Linga , Chera Linga, Sahasara Linga, Panchabhuta Linga, a cluster of 27 Lingas behind Chokkanatha are some.

Location:

திருச்சிற்றம்பலம்   

Leave a Reply