Sri Nellaiappar Temple- Thirunelveli

ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி

Sri Nellaiappar Temple- Thirunelveli
Thanks Google

இறைவன் : நெல்லையப்பர்

இறைவி : காந்திமதி ,வடிவுடையம்மன்

தல விருச்சம் :மூங்கில்

தீர்த்தம் : பொற்றாமரை குளம்

ஊர் : திருநெல்வேலி

மாவட்டம் : திருநெல்வேலி ,தமிழ்நாடு

பாடியவர்கள் : சம்பந்தர்

தேவார பாடல் பெற்ற பாண்டிநாட்டு தளங்களில் இது 14 வது தலமாகும் .தேவார பாடல் பெற்ற 276 சிவ தலங்களில் 204 வது தலமாகும் .அம்மனின்  51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடமாகும் . ஈசனின் பஞ்ச சபைகளில் இவ் தலம் தாமிர சபையாகும் .

ஸ்வாமிக்கு நான்கு ராஜகோபுரங்களும் ,அம்பாளுக்கு ஒரு ராஜகோபுரமும் உள்ளன . இறைவன் சுயம்பு மூர்த்தி ஆவார் .இவரின் லிங்கத் திருமேனியில் கோடாரியால் வெட்டப்பட்ட அடையாளத்தை காணலாம் .

காந்திமதி தாயார் அவர்களை தாரை வார்த்து கொடுத்த கோவிந்தர் ,நெல்லையப்பருக்கு வடக்கே ஆயாசமாக சேஷசயனத்தில் மல்லாந்து படுத்திருக்கிறார் .அவர் மார்பில் சிவலிங்க அடையாளம் இருக்கும் .நீண்டிருக்கும் அவரது வலது கைக்கு அருகிலும் ஒரு சிவலிங்கம் இருக்கும் .

  அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர் சிவலிங்கத் திருமேனி சற்று தாழ்வில் உள்ளது .இங்கு பொல்லாப்பிள்ளையார் சன்னதியின் 12 தூண்கள் கொண்ட கல் ஜன்னல் இருக்கிறது .இவரை குழந்தை வேண்டி பக்தர்கள் வேண்டி கொள்கிறார்கள் .

Sri Nellaiappar Temple- Thirunelveli

தல வரலாறு :

வேதபட்டர் , இறைவனுக்கு திரு அமுதுக்கு உலர போட்டிருந்த நெல் ,மழையினால் நனையாதவாறு இறைவன் வெளியீட்டு காத்தமையால் இத்தல இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்ற திருநாமம் வந்தது .பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலை தன் மீது கவிழ செய்து ,அதனால் வெட்டுண்டு ,காட்சி தந்தருளினார் .இதனால் திருமேனியில் மேற்புறம் வெட்டப்பட்ட அடையாளம் உள்ளது .

உச்சி காலத்தில் மட்டும் அம்பிகையே நேரில் வந்து சுவாமியே வழிபட்டு செல்வதாக ஐதீகம் .அகத்தியருக்கு இறைவன் கல்யாண காட்சியை காட்டி அருளிய தலம் .

தமிழ்நாட்டில் இறைவன் ஈசன் நடராஜர் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான 5 சிவ சபைகளில் இரண்டு சபைகள் இவ் திருநெல்வேலி மாவட்டத்திலேயே உள்ளது .தாமிர சபை நெல்லையப்பர் ஆலயத்திலும் ,சித்திரை சபை குற்றாலம் குற்றாலீஸ்வரர் தலத்திலும் உள்ளது .

இந்தத் தாமிர சபையினில், அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் இரண்டாவது திருச்சுற்றில் தெற்குப் பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது.

கல்லாலான பீடத்தின் மீது, மரத்தாலான மண்டபத்தை நிருத்தப் பட்டு, இதனின் மேற்கூறையில் தாமிரத் தகடுகளால் பதிக்கப்பட்டுள்ளன.பிரமிடுபோல கூம்பு வடிவத்தில் தோற்றம் உடையவை இவை.தாமிர சபையின் பின்புறமாக சந்தன சபாபதி சந்நிதி அமைந்துள்ளது.

இங்கே மூலவராக நடனத் திருக்கோலத்தில் சந்தன சபாபதி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

சந்தன சபாபதி கண்களும் பூசப்படும் சந்தனமானது, சித்திரைத் திருவோணம்,ஆனி உத்திரம், ஆவனி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி, மார்கழித் திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தி ஆகிய ஆறு சந்தர்ப்பங்களில் களையப்பட்டு புதியதாக மீண்டும் பார்க்கப்படுகிறது

தாமிரசபையில் எழுந்தருளியிருக்கும் சந்தன சபாபதிக்கு ஆறு அபிசேக நாட்கள் நடக்கின்றன.

1.மார்கழித் திருவாதிரை–உஷத்கால பூசை.

2.மாசி-சுக்ல பட்ச சதுர்த்தி– காலசந்தி பூசை.

3.சித்திரை-திருவோணம்– உச்சிகால பூசை.

4.ஆனி-உத்தர நட்சத்திரம்– சாயங்கால பூசை.

5.ஆவணி-சுக்கிலபட்ச சதுர்த்தி– இராத்திரி சந்தி பூசை.

6.புரட்டாசி-சுக்கிலபட்ச சதுர்த்தி– அர்த்தயாம பூசை.

தாமிர சபையின் முன்புறமான இல்லாதான் ஒரு மண்டபம் இருக்கிறது.இம்மண்டபத்தின் மேற்கூறையானது, வளைவான ஆர்ச் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது, கட்டுமானப் பொருட்கள் எவைகளையும் பயன்படுத்தப்படாமல் முட்டுக் கொடுத்து நிறுவியிருக்கிறார்கள்.இம்மண்டபத்தின் தூண்களின் கீழ்புறம் அமைந்துள்ள யானை சிற்பங்கள்தான் இம்மண்டபத்தினைத் தாங்கி நிற்கின்றன.

மார்கழித் திருவாதிரைத் திருநாளில் தாமிர சபைக்கு எழுந்தருளும் உற்சவரான தாமிரசபாபதியின் திருநடனம் இம்மண்டபத்தில் வைத்துத்தான் நடைபெறுகிறது.இந்தத் திருநடனக் காட்சியினை மகாவிஷ்ணு மத்தளம் வாசிப்பது போலவும், மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி முதலான இறைவர்களோடு சேர்ந்து, பதஞ்சலி, வியாக்கியானம் ஆகிய முனிவர்களும் தரிசிப்பதைப் போன்று புடைப்புச் சிற்பங்களாக இம்மண்டபத்திலிருக்கும் தூண்களில் உளிகொண்டு உயிரூட்டம் கொடுத்துள்ளனர்.

திருவாதிரைத் திருநடனம்:

இந்தத் திருநடனக் காட்சி ஒவ்வொரு ஆண்டும் தாமிர சபையில் மார்கழி மாதத் திருவாதிரை நன்னாளில் வெகு விமரிசையாக நடந்தேறி வருகிறது.

நடராஜப் பெருமானின் ஐந்தொழிலையும் தனித்தனியாகச் செய்யும் தாண்டவங்களையும்,அவற்றை அவர் இயற்றிய இடம் பற்றியும் ‘திருப்பத்தூர் புராணத்தில்‘ நீங்கள் அறியப்படலாம்.

தாமிர சபையில் தேவதாருவன நெல்வேலி

ஆம்பிர பலதலத்தில் ஆற்றதும் முனிநிருத்தம்‘ என இருக்கிறது.

இதுதான் படைத்தல் தொழிலைக் கூறும் தாண்டவமாகும்.

தாமிர சபையின் மேற்கூரையில் மரத்தாலான எண்ணற்ற சிற்பங்கள் இருக்கின்றன.தாமிர சபையில் நடுநாயகமாக அமைந்துள்ள கல் பீடத்தில் வைத்து நடத்தப் படுகிறது.ஆடல் வல்லானின் திருநடனக் காட்சியினை கூரையின் முதல் அடுக்கில், இறைவனின் திருமூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளன.அடுத்திருக்கும் இரண்டாவது அடுக்கில் முனிவர்கள் நிறைய வர்கள் பார்த்து ரசிப்பது போல் இருக்கின்றன.இந்த மரச்சிற்பங்களில் இதர திருநடன சபைகளின் சிற்பங்களும் உருவாக்கியிருக்கிறார்கள்.கண்ணப்ப நாயனார் தனது ஒரு காலால் சிவலிங்கத்தின் கண்ணை மிதித்துக் கொண்டு குறுவாளால் தன் கண்ணைக் கொட்டும் காட்சியினையும், இதை சிவ பெருமான் தடுக்கும் காட்சியும் அற்புத சிற்பமாக செதுக்கியிருக்கிறார்கள்.

கோயில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் தென் வடக்காக 756 அடி நீளமும் ,மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்ட மிக பெரிய சிவாலயமாகும் .

இரண்டாவது பிரகாரத்தில் ‘ஏழிசை ஸ்வரங்கள் ‘ இசைக்கும் தூண்கள் உள்ளன .இவற்றை தட்டி பார்த்தல் ஸ்வரங்களின் ஒலியை கேட்கலாம் .

இக்கோயிலில் பல பழமையான கல்வெட்டுகள் காணப்படுகின்றன .சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (கிபி 746 -966 ),10 ம் நூற்றாண்டை சார்ந்தது .முதலாம் ராஜேந்திர சோழன் (கி பி 1012 -1044 ),முதலாம் குலத்துங்கன் (கி பி 1070 -1120 ) போன்ற சோழ மன்னர்களுடைய கல்வெட்டுகளும் ,இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி பி 1190 -1267 ) என்ற பாண்டிய மன்னன் கல்வெட்டுகள் ,மேலும் சுந்தர பாண்டியன் ,விக்ரம பாண்டியன் ,வீர சோமேஸ்வரன் ,இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ,சதய வர்மன் வீரபாண்டியன் ஆகியோர்களின் கல்வெட்டுகள் உள்ளன .

திறந்திருக்கும் நேரம் :

காலை 5 .30 முதல் 12 .30 வரை ,மாலை  4 .00 முதல் 9 .00 வரை

செல்லும் வழி:

சென்னையில் இருந்து சுமார் 625 km தொலைவில் தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ளது .நிறைய ரயில்களும் ,பேருந்துகளும் உள்ளன . அருகில் கன்னியாகுமரி உள்ளது .

Sri Nellaiappar Temple is dedicated to Lord Shiva. According to the history, both the gopurams were built by Pandiyas and the sanctums of the temple were constructed by Nindraseer Nedumaran who ruled in the 7th century CE. This is one of the Pancha Sabha temples (Copper).Nellaiappar Temple is spread over an area of 14 acres and is one of the biggest temples in Pandiya Naadu. The temple complex consists of two temples, one for Lord Shiva and the other one for Kanthimathi Amman.There is also a shrine to Vishnu near the sanctum, signifying the belief that Nellai Govindan .This temple one of 51 Sakthi Peedam.

Location:

Leave a Reply