Sri Neer Vanna Perumal Temple- Thiruneermalai

ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் கோயில் – திருநீர்மலை

Sri Neer Vanna Perumal Temple- Thiruneermalai

மூலவர் : நீர்வண்ணர் ,ரங்கநாதர் ,உலகளந்த பெருமாள் ,பாலநரஸிம்ஹர்

தாயார் : அணிமாமலர்மங்கை ,ரங்கநாயகி

தல விருச்சம் : வெப்பாலமரம்

தலதீர்த்தம் : காருணீய தீர்த்தம் ,சித்த,சொர்ண தீர்த்தம்

ஊர் : திருநீர்மலை

மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு

மங்களாசனம்: திருமங்கையாழ்வார் ,பூதத்தாழ்வார்

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 62 வது தலம்.

இத்தலத்தின் சிறப்பானது பெருமாள் நான்கு கோலங்களில் இங்கு பக்தர்களுக்கு சேவை தருகிறார்கள் .மற்றும் இங்கு நரசிம்மர் உக்கிரமாக இல்லாமல் சாந்த சொரூபமாக பால நரசிம்மராக காட்சி தருகிறார் .

இது ஒரு மலை கோயிலாகும் .பெருமாள் நின்ற கோலத்தில் நீர் வண்ண பெருமாளாகவும் ,இருந்த கோலத்தில் நரசிம்மராகவும் ,சயன கோலத்தில் ரங்கநாதராகவும் ,நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாளாகவும் சேவை தருகிறார்கள் .இவ் கோலத்தை திருமங்கையாழ்வாருக்காக இறைவன் அன்புடன் சேவை தந்த தலமாகும் .

நீர்வண்ண பெருமாள் : ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு தன் ராமபிரானை திருமண கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை வந்தது .அவர் இத்தலம் வந்து வேண்டி தவம் இருந்தார் .அவரின் வேண்டுகோளுக்கு மனம் இறங்கி ராமபிரான் தன் சீதா பிராட்டிமற்றும் குடும்பத்துடன் வால்மீகி மகரிஷிக்கு காட்சி கொடுத்தார். அவரின் வேண்டுதலின் படி இத்தலத்தின் மலையடிவாரத்தில் தனி கோயிலில் நிரந்தரமாக தங்கினார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் நீர் வண்ண பெருமாள் என்றும் ,இவ் தலத்திற்கு திருநீர் மலை என்றும் பெயர் ஏற்பட்டது .நீல நிறமாக நீல வண்ண பெருமாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு .மலையடிவாரத்திலேயே நாம் கல்யாண ராமரையும் ,அணிமலர் மங்கை தாயாரையும் சேவிக்கலாம் . திருமங்கையாழ்வார் தாயாரையே மங்களாசனம் செய்துள்ளார்.

மலையடிவாரத்தில் நீர்வண்ண பெருமாளையும் ,திருவேங்கட நாதரையும் தரிசித்துவிட்டு ,200 படிகள் ஏறி சென்றால் மலை கோயிலை அடையலாம்.மலைக்கோயிலில் ,ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி ,பிரம்மா சகிதமாக சயன கோலத்தில் தெற்கு நோக்கி திவ்ய தரிசனம் தருகிறார் .இவரை ‘விடலரிய பெரிய பெருமாள் மெய்பாதங்களே என்று சுவாமி தேசிகர் பாடியுள்ளார் .இவரின் திருமேனி சுதை வடிவம் என்பதால்   திருமஞ்சனம் இல்லாமல் சாம்பிராணி தைலம் சாற்றுதல் மட்டுமே நடைபெறுகிறது .பெருமாளுக்கு வலப்புறத்தில் தனிச் சன்னதியில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சேவை தருகிறார் .

இவ் மலை கோயிலில் நரசிம்மர் சாந்தமாக பாலரூபத்தில் பக்தர்களுக்கு சேவை தருகிறார் .பிரகலாதனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி அவனை போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார் .இவருக்கு பின்புறம் நரசிம்மர் ,சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார் .இவரிடம் சங்கு ,சக்ரம் இல்லை ,இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம் .

இதே சன்னதியில் வாமன அவதாரமான உலகளந்த பெருமாள் ஒரு காலை தூக்கிய நிலையில் காட்சி தருகிறார் .

இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் நான்கு திவ்ய தேசங்களாக நாச்சியார் கோயில் ,திருவாலி ,திருக்குடந்தை மற்றும் திருக்கோயிலூரை வழிபட்ட பலனை அடையலாம் .

பரிகார தலம்:

புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் ரெங்கநாதரை அர்ச்சனை செய்து ,ஒரு  துணியில் கருங்கல் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் வைத்து ,தல விருச்சமான வெட்பாலை மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள் .இதனால் புத்ர பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம் .வேண்டுதல் நிறைவேறியவுடன் கண்ணனுக்கு தொட்டில் கட்டி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-neer-vanna-perumal-temple.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 8 .00 -12 .00 , மாலை 4 .00 -8 .00 மணி வரை

செல்லும் வழி:

சென்னையில் அமைந்துள்ள திவ்யதேசம் . இயற்கை சூழலுடன் மிக ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளது  இத்தலம் . இத்தலத்திற்கு பல்லாவரம் ,பம்மல்  மற்றும் குன்றத்தூரில் இருந்து செல்லலாம் . மற்றும் தாம்பரம் மதுரவாயல் புறநகர் சாலையின் அணுகு சாலையின் வழியாகவும் செல்லலாம் .

English : Sri Neervannaperumal Temple, Thiruneermalai is one among the 108 Divyadesams found in Chennai near Tambaram.The Perumal shows his 4 sevas in this temple (ie) – Nindra, Iruntha, Kidantha and Nadantha Thirukkolmas.It is said that once Thirumangai Alwar came here to get the Dharshan of the Perumal. At that time, the mountain was fully surrounded by water and he waited for six months to worship the Perumal. After all the water drained, he went up the mountain and worshipped the Perumal. The place where Thirumangai Alwar stayed is called as “Thiru Mangai Alwarpuram“.

Om Namo Narayana!

Leave a Reply