ஸ்ரீ சாரங்கபாணி கோயில் – கும்பகோணம்
இறைவன் : சாரங்கபாணி ,ஆராவமுதன்
தாயார் : கோமளவல்லி நாச்சியார்
கோலம் : சயனம்
தீர்த்தம் : ஹேமவல்லி தீர்த்தம் , காவேரி ,அரசலாறு
விமானம் : வைதிக விமானம்
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு
மங்களாசனம் : பூதத்தாழ்வார் ,பேயாழ்வார் ,திருமிசையாழ்வார் ,நம்மாழ்வார் ,பெரியாழ்வார் ,ஆண்டாள் ,திருமங்கையாழ்வார்
பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12 வது திவ்ய தேசமாகும் , சோழநாட்டு திவ்ய தேசம் .
மிகப் பழமையான கோவில்களில் ஒன்று இந்தக் கோவில். சோழர்களால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.கோவிலின் புறச்சுவரை சுற்றி வரும்போது ஆயிரம் வருட பழமையான தமிழ் கல்வெட்டுக்களை நீங்கள் காணலாம். இக்கோயிலை ராஜராஜ சோழன் காட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது .
பொதுவாக அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாள் தன்னுடைய கரங்களில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியபடி தான் காட்சி தருவார். ஆனால் சாரங்கபாணி ஆலயத்தில் உள்ள இறைவன், தன்னுடைய கரங்களில் ‘சார்ங்கம்’ என்னும் வில்லை வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர், உற்சவர் இருவருமே கையில் வில் வைத்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். சார்ங்கம் என்ற வில்லை வைத்திருப்பதாலேயே, இத்தல இறைவன் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதாரச் சிலைகள் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இத்தல தேர் சக்கரம் பிரம்மாண்டத் தோற்றத்துடன் சுற்றுப்புற சுவர்களிலும் அழகிய கலைநயமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 11 நிலைகளையுடைய இது 150 அடி உயரம் கொண்டது.
நாலாயிர திவ்ய பிரபந்தம்:
ஸ்ரீமத் நாதமுனிகள் இந்த காலத்தில் பாடப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ‘ இது பத்து’ என்னும் பொருள்பட ஒருவர் இருப்பதை கொண்டு இந்தப் பாடல்களைப் பாடியவர் யார்? என்று அறியாமல் வருத்தப்பட்டார். அப்போது பகவான் ஸ்ரீ இமந்நாத முனிகளின் கனவில் தோன்றி ஆழ்வார் திருநகரிக்கு சென்று நம்மாழ்வாரின் சந்தித்தால் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என்று வழிகாட்டினார். இறைவனது கட்டளையை ஏற்று ஸ்ரீமந் நாதமுனிகள் நம்மாழ்வாரை தரிசனம் செய்ய, நம்மாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை சொல்லிக்கொடுத்து அவரது சந்தேகத்தையும் போக்கினார். நாலாயிரப் பாசுரங்களை எந்தவித குறையும் இல்லாமல் நிலைநிறுத்த ஸ்ரீமந் நாத முனிகளுக்கு இந்த சக்கரபாணி பெருமாள் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆரா அமுதன் என்ற பெயரும் உண்டு.
பாதாள ஸ்ரீநிவாசன் :
இந்தத் தலத்தில் பாதாள அறையில் இருக்கிறார் பாதாள சீனிவாசன். திருமலையில் இருந்து தாயாரோடு திருவிளையாடல் புரியும் நோக்கில் இறைவன் குடந்தை பாதாள அறையில் தங்கினார். தாயார், இறைவனைத் தேடிக்கொண்டு இங்கு வந்து சேர்கிறார். வந்த இடத்தில் மகாலட்சுமித் தாயார் மகவாய் அவதரிக்கத் திருவுளம் கொண்டார். அங்கு தவமியற்றிக் கொண்டிருந்த ஹேமரிஷியின் மகளாகத் திருவுளம் கொண்டு பொற்றாமரைக் குளத்தில் சிறு மழலையாக அவதரித்தார். ஹேமரிஷி அவரைக் கண்டெடுத்து, கமல மலர்களின் நடுவே தவழ்ந்தவள் என்பதால், கோமளவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார்.
சொர்க்கவாசல் இல்லை :
கோமளவல்லியும் திருமணப் பருவம் எய்தியதும், மகாவிஷ்ணுவையே மணந்துகொள்ள வேண்டும் என்று தவமிருந்தார் . தவத்துக்கு இரங்கிய மகாவிஷ்ணு, தாயாரை மணந்துகொள்ள வைகுண்டத்திலிருந்து நேரடியாக இந்தத் தலத்துக்கு வந்து சேவை தந்தார் .வைகுண்டவாசனாக பெருமாள் எழுந்தருளிய காரணத்தினால், இந்த கோயிலில் சொர்க்கவாசல் இல்லை. இங்குள்ள பெருமாளை என்றைக்கு தரிசித்து வழிபட்டாலும் வைகுண்ட ஏகாதசியன்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை .
இரண்டு வாயில்கள் :
இறைவன் தாயாரை மணக்க சூரிய ரதத்தில் இங்கு நேரில் வந்தார். சூரிய ரதம் என்பதால், இறைவனின் கருவறை தேரின் வடிவத்திலேயே அமைந்திருக்கிறது. அதேபோல், சூரியனின் வடதிசை, தென்திசை பயணத்தைக் குறிப்பிடும் வண்ணம், இரண்டு வாயில்கள் உள்ளன. ஒன்று தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயனம். மற்றொன்று வடக்கு நோக்கி நகரும் உத்தராயனம். மற்ற ஆலயங்கள்போல நேரான வாயில் இந்த சந்நிதிக்கு இல்லை. மாறாக இரண்டு வாயில்களும் இரண்டு பக்கவாட்டு திசைகளில் அமைந்துள்ளன.
படி தாண்டா பத்தினி :
கோமளவல்லி தாயார் இதுவரை கோயிலை விட்டு வெளியே வந்ததே இல்லை என்பதால் ‘படி தாண்டா பத்தினி’ என்ற பெயரும் உண்டு.இந்த தலம் கோமளவல்லி தாயாரின் பிறந்த வீடு ஆகும். அவரை திருமணம் செய்து கொண்ட திருமால், இங்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
உத்தான சயன கோலம் :
பெருமாள் படுத்தபடி இருக்கும் ‘சயனம்’ என்னும் நிலைக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. அதில் ஒரு சயனம் ‘உத்தான சயனம்’ ஆகும்.திருமிசையாழ்வார் இக்கோயிலுக்கு வந்து இறைவனை பற்றி பாடும்போது .“நடந்து திரிந்ததால் கால்கள் வலிக்கிறது என்பதற்காகவா, பள்ளிகொண்டிருக்கிறாய்?” என்ற பொருளில் பாடினார். அதைக் கேட்ட பெருமாள் எழ முயன்றார். உடனே திருமழிசை ஆழ்வார், “அப்படியே காட்சி தா” என்று கேட்க, இறைவனும் அப்படியே அருளினார். படுத்தபடி சற்றே தலையைத் தூக்கி எழ முயலும் கோலத்தில் இங்கு இறைவன் அருள்கிறார். இந்த கோலத்திற்கு `உத்தான சயனம்’ என்று பெயர்.
பரிகாரம்: படிக்கின்ற மாணவர்கள் தேர்வு நேரத்தில் பரீட்சை பயம் வராமல் இருக்கவும் தேர்வு எழுதும் பொழுது திடீரென்று படித்தது நினைவுக்கு வராமல் தவிப்பதை தடுக்கவும் வெளியூர் பயணத்தின்பொழுது இக்கட்டான நிலையில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கவும், பயம் விலகவும் மரண பயத்திலிருந்து வெளியே வரவும், இந்த சாரங்கபாணி கோவிலுக்கு முடிந்த போதெல்லாம் வந்து பெருமாளை தரிசனம் செய்தால் நம்மை காப்பார்
திறந்திருக்கும் நேரம் :
காலை 7 .00 -12 .00 , மாலை 05 .00 -09 .00 வரை
செல்லும் வழி:
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 km தொலைவிலும் , ரயில்நிலையத்தில் இருந்து சுமார் 2 km தொலைவிலும் உள்ளது .அருகிலேயே கும்பேஸ்வரர் கோயில் உள்ளது . சென்னையில் இருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
English :
Sarangapani Temple is a Hindu temple dedicated to Vishnu, located in Kumbakonam, Tamil Nadu, India. It is one of the Divya Desams, the 108 temples of Vishnu revered in Nalayira Divya Prabandham by the 12 poet saints, or Alwars.
The temple is believed to be of significant antiquity with contributions at different times from Medieval Cholas, Vijayanagar Empire and Madurai Nayaks. The temple is enshrined within a huge granite wall and the complex contains all the shrines and the water bodies of the temple. The rajagopuram (the main gateway) has eleven tiers and has a height of 173 ft (53 m). The Potramarai tank, the temple tank, is located opposite to the western entrance of the temple.
Lakshmi emerged from the Potramarai tank among thousand lotuses and was thus named Komalavalli (the one who emerged from lotus). Vishnu descended to earth as Aravamudhan in a chariot drawn by horses and elephants from his abode Vaikuntam.He stayed in the nearby Someswaran Temple to convince Lakshmi to marry him and the couple eventually got married.
Hotels to stay in Kumbakonam
1. Hotel Green Park
No. 10, Lakshmi Vilas Street,
Kumbakonam, South India – 612001.
Ph :(0435) – 2402853 / 2403914
2. Lee Garden
Naal Road Junction, Srinagar Colony, Kumbakonam
Tanjore, Tamil Nadu 612001
Ph:0435 240 2526
3. Rayas Grand
23-25, Holy Mahamaham Tank West Bank,
Kumbakonam, Tamil Nadu
Ph:0435 242 3170
Map