Sri Trivikrama Narayana Perumal Temple- Sirkazhi

ஸ்ரீ திருவிக்ரம நாராயண பெருமாள் – சீர்காழி ( விண்ணகரம் )

Sri Trivikrama Narayana Perumal Temple- Sirkazhi

இறைவன் : திருவிக்ரமன் ,தாடாளன்

தாயார்: லோகநாயகி ,மட்டவிழ் குழலி

கோலம் : நின்ற கோலம்

விமானம் : புட்கலாவர்த்த விமானம்

தீர்த்தம் : சங்கு தீர்த்தம் ,சக்கர தீர்த்தம்

மங்களாசனம்: திருமங்கையாழ்வார்

ஊர் : சீர்காழி

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 28 வது திவ்ய தேசமாகும் . சோழநாட்டு திவ்ய தேசமாகும் .

  இறைவன் நாராயணன் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ,மகாபலியின் கர்வத்தை அடக்க ஈரடியால் உலகனைத்தையும் அளந்தார் ,அத்தகைய விண்ணளக்கும் மூர்த்தி சீர்காழி என்னும் இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் .

 உரோமச முனிவரின் ஆசையை பூர்த்தி செய்ய இறைவன் தன் இடது காலை தூக்கி திரிவிக்ரம அவதாரத்தை காட்டியுள்ளார் . ஆதலால் இவுருக்கு தாடாளன் என்ற பெயரும் உண்டு .

இத்தல தாயார் தன் சுவாமி ஒற்றை காலுடன் இருப்பதால் அவரின் கால் வலிக்காமல் இருப்பதற்காக தன் மார்பில் இறைவனை தாங்குகிறாள்.இது ஒரு அபூர்வ அமைப்பாகும் , எல்லா  கோயில்களிலும் இறைவனே தாயாரை தன் மார்பில் சுமப்பார் . உச்ச அம்பாள் தாயாரை மரித்த படி உள்ளதால் அவரின் திரு முகத்தை மட்டுமே நாம் காணமுடியும் , தன் கணவரை தான் தங்குவதை யாரும் பார்த்திடக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள் .

இத்திருத்தலம் ஒருமுறை சிதைந்து போன தருவாயில் ஒரு மூதாட்டி ,உற்சவர் திருமேனியை ஒரு தவிட்டு பானையில் வைத்து பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது இதனால் இவருக்கு ‘தவிட்டு பானை தாடாளன் ‘ என்ற திருநாமம் உண்டு .

திருமங்கையாழ்வார் வேலை பரிசாக பெற்ற தலம்:

ஒரு சமயம் திருமங்கையாழ்வாருக்கும் ,திருஞானசம்பந்தருக்கு ஒரு வாதம் ஏற்பட்டது அப்போது சம்பந்தர் சொன்ன ‘குறள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி திருமங்கையாழ்வார் பெருமாளின் 10 அவதாரங்களை பாடினார் அவரின் திறமையை கண்டு மகிழ்ந்த சம்பந்தர் அவருக்கு தன் கையில் உள்ள வேலை பரிசாக கொடுத்தார் அதுமட்டும் அல்லாமல் அவரின் காலுக்கு தண்டையும் அணுவித்தார் .

இந்த கோயிலை பற்றி நாம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் படிக்கலாம் .

முன் மண்டபத்தில் வராக அவதாரம் எடுத்த பெருமாள் வலது கையை தானம் பெற்ற கோலத்தில் வைத்து இடது கரத்தில் குடை பிடித்தபடி சாளிக்ராம மாலை அணிந்து  காட்சிதருகிறார் . அவருக்கு கிழே திருமங்கையாழ்வார் கையில் வேல் பிடித்து காலில் தண்டையுடன் காட்சிதருகிறார் .

கோயிலுக்கு வெளியே வெளி புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் ,கோயிலின் உட்பிரகாரத்தில் ராமர் சன்னதியும் உள்ளது .

பரிகாரம் :

இவ் தல தாயாரை வணங்கினால் கணவன் மனைவி அன்பு மற்றும் ஒற்றுமை அதிகமாகும் .பிரிந்திருக்கும் கணவனிடம் மீண்டும் சேர்வர் என்ற நம்பிக்கை உள்ளது .உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி ,வாஸ்து பூஜை செய்பவர்கள் தங்கள் நிலத்தின் மண்ணை எடுத்து வந்து இக்கோயிலில் வைத்து பூஜை செய்கிறார்கள் .இதனால் தங்களுடைய நிலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 7.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

அமைவிடம் :

சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் சீர்காழி அருகில் பேருந்து நிலையத்திலிருந்து 2 km முன்னதாகவும் , சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 1km தொலைவிலேயும் உள்ளது .

அருகில் உள்ள கோயில்கள் :

இவூரில் அருகில் நிறைய பாடல் பெற்ற தலங்களும்,திவ்ய தேசங்களும் உள்ளன .

English:

The temple is among the 108 divyadesams of Sri Vaishnavas and comes under Choza naatu divyadesams. The presiding deity is Sri Thiruvikraman in standing posture and thayar is called Loganayaki thayar. The Lord is also known as Thadalan and the utsavar is called Trivikrama Narayanan. The place is also called as Uttama kshetram. Apart from this temple, one can have darshan of Lord Trivikraman at Thiru Ooragam in Kanchipuram and Thirukovilur divyadesam. The Lord’s left leg is lifted high indicative of the Lord measuring the sky in Vamana avatharam. The Shaivite saint Thiru Gnana Sambandhar and Vaishnavite saint Thirumangai azhwar met here wherein the latter won over a debate and the former acknowledged the greatness by gifting Thirumangai azhwar with a vel.

Location Map:

Leave a Reply