ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில் – திருப்பதி
இயற்கை கொஞ்சி பேசும் மலை ,வழியெங்கும் நம் மனதை பரவசத்தில் ஆழ்த்தும் பக்தி ,எங்கும் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கம் ,எப்போது அவரை காணுவோம் என்ற மனதின் தவிப்பு, தரிசனம் கிடைத்தவுடன் மனதில் ஒரு மிக பெரிய நிம்மதி ,தன் துன்பங்களெல்லாம் பறந்து போய்விட்டதை உணர்த்த மனம், மீண்டும் எப்போது காணுவோம் என்ற அவா! ஆம் இவை அனைத்தும் ஏற்படுகின்ற ஒரே இடம் திருமலை ,திருப்பதி மட்டுமே . பாலாஜி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்டுகிறவரை அவருக்கு உகந்த மாதம் மற்றும் கிழமையான இந்த புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று என்னுடைய இந்த india temple tour இணையத்தளத்தில் எழுவதை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன் .
அவரை பற்றி எவ்வளவோ எழுதலாம் ,இந்த திருமலையை பற்றி இந்த அடியேனுக்கு எட்டிய அளவில் எழுதியுள்ளேன் . தங்களுக்கு தெரிந்த அவருடைய திருவிளையாடல்களை இவ் இணையத்தில் உங்கள் கருத்துக்களால் தெரிவிக்குமாறு அடியேன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் .
மூலவர் : ஸ்ரீனிவாசன் , வெங்கடாஜலபதி
தாயார்: அலர்மேல் மங்கை
உற்சவர் : போக ஸ்ரீனிவாசர் ,கல்யாண வேங்கடவர்
கோலம் : நின்ற , சயனம்
தீர்த்தம் : சுவாமி புஷ்கரணி
மங்களாசனம் : பத்து ஆழ்வார்கள் பாடியுள்ளனர்
ஊர் : திருமலை ,திருப்பதி
மாநிலம் : ஆந்திரா மாநிலம்
திருமலையின் திவ்யதேசம் என்பது மூன்று திருத்தலங்களை கொண்டது .கீழ்திருப்பதியில் கிடந்த கோலத்தில் காட்சி தரும் கோவிந்தராஜர், மலைமீது நின்ற கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீனிவாசர் ,திருச்சானூர் குடிகொண்டுள்ள பத்மாவதி என்கிற அலமேலு தாயார்.இவ்மூன்று கோயில்களையும் சேர்த்தே ஒரு திவ்யதேசமாக கருதப்படுகிறது .
திருவேங்கடமுடையான் ,பாலாஜி ,ஸ்ரீனிவாசன் வெங்கடாஜலபதி என்று பலபெயர்களால் அழைக்கப்படுகிறார் .
உலகத்தில் அதிகமாக உண்டியல் வசூலாகும் தலங்களில் ஒன்று
தொண்டைமான் சக்கரவர்த்தி ஏழுமலையானுக்கு முதன் முதலில் கோயில் கட்டினான் .
திருப்பதி மூலவர் போலவே இன்னோரு வெள்ளியால் ஆன பெருமாள் சிலை கிபி 614 சமவை என்னும் பல்லவ அரசியால் உருவாக்கப்பட்டது .இது இப்பொது “போக ஸ்ரீனிவாசர்” எனப்படுகிறார் . சயன மண்டபத்தில் பட்டு மெத்தையோடு இருக்கும் இவரை வெள்ளி ஊஞ்சலில் தூங்கி ,தினமும் அதிகாலையில் சுப்ரபாதம் கேட்டு கண்விழிக்கிறார் .
விஜயநகர மன்னர் கிருஷ்ணா தேவராயர் ஏழுமலையானுக்கு தங்கம் ,நவரத்தினம் ,ஆபரணம் காணிக்கை தந்தார் .
அன்னமாச்சியார் ஏழுமலையானனைபற்றி 30000 பாடல்கள் பாடியுள்ளார் ,இப்பாடல்கள் செப்பு தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது .
பெருமானை சந்திப்பதற்கு முன் வராஹ மூர்த்தி சன்னதியில் தரிசனம் பெற்று புஸ்கரிணியில் குளித்து தரிசித்தால் மிக சிறப்பாகும் .
கீழ்திருப்பதியில் உள்ள கோவிந்தராஜரை தரிசிக்கவேண்டும் . பின்பு பத்மாவதி தாயாரை தரிசித்து விட்டுத்தான் வேங்கடவனை தரிசிக்கவேண்டும் என்பது ஐதீகம் .
தல புராணம்
கிருஷ்ண அவதாரத்திற்கு பிறகு கலியுகத்தில் பெருகிய அநியாயங்களை அகற்றுவதற்காக காஷியப முனிவர் தலமையில் நடந்த யாகத்தின் பலனை தருவதெற்காக பிருகு முனிவர் மும்மூர்த்திகளையும் சந்திக்க சென்றார் . திருமால் பிருகு முனிவரை கண்டுகொள்ளாமல் இருந்ததை கண்டு கோபம் கொண்ட முனிவர் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார் ஆனால் திருமலோ கோபம் கொள்ளாமல் அவர் பாதங்களை தடவி கொடுத்தார் . திருமாலுக்கு யாக பலன்களை தருவதென்று முனிவர் முடிவு கொண்டார் . தான் குடிகொண்டிருக்கும் மார்பில் எட்டி உதைத்த முனிவரை தண்டிக்கும் படி லட்சுமி தாயார் பெருமானை கேட்டுக்கொண்டார் ஆனால் திருமாலோ மறுத்துவிட்டார் கோபம் கொண்ட தாயார் பாற்கடலிருந்து கிளம்பி பூலோகம் வந்துவிட்டார் .அவரை தேடி பூலோகம் முழுவதும் அலைந்து வேங்கடமலையில் உள்ள ஒரு புற்றில் பசியோடு களைப்பாக அமர்ந்துகொண்டார் . இவருடைய நிலையை நாரத முனிவர் லட்சுமி தேவியிடம் சொல்ல தேவி வருத்தமடைந்தார் நாரதரின் ஆலோசனையின்படி சிவன் பசுவாகவும் பிரம்மா கன்றாகவும் இவைகளின் உரிமையாளராக லட்சுமி தேவி வேடம் இட்டு அவ்வூரின் மன்னரிடம் விற்க சென்றார். மன்னர் தன்மாடுகள் மேச்சலுக்கு செல்லும் போது பசுவானது திருமால் இருக்கும் புற்றின் அருகில் சென்று பால் சுரந்தது . மாடு மேய்க்கும் இடையன் இதை கண்டதும் தன் கோடாலியை தூக்கி எறிந்தான் அது திருமாலின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது ,தன் காயத்துக்கு மருந்து இட மூலிகை தேடி செல்லும் போது வராஹ மூர்த்தி ஆஸ்ரமம் இருந்தது அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறப்பில் கண்ணனின் அன்னை யசோதயாக இருந்தார் ) அவரை பாசத்தோடு மருந்து இட்டார் . அவரே திருமாலுக்கு ” ஸ்ரீனிவாசன் ” என்று பெயரிட்டார் .
சந்திரகிரியை ஆண்ட ஆகாசராஜன் என்ற அரசனுக்கு பூமியில் புதைந்த பெட்டி ஒன்று கிடைத்தது அதில் தாமரையில் படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்தது தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உள்ளதால் இந்த குழந்தைக்கு “பத்மாவதி” என்று பெயர் இட்டார்.
ஸ்ரீனிவாசர் இவரை கல்யாணம் செய்வதெற்காக குபேரனிடம் கடன் பெற்று பத்மாவதியை கரம்பிடித்தார் .இந்த கலியுகம் முடியும் வரை வாங்கிய கடனை திருப்பி தருவதாக கூறியிருந்தார் அதன்படி இன்றும் இங்கு தினமும் ஸ்ரீனிவாசருக்கு திருமணமும் மற்றும் இன்றும் கடனை திருப்பி செலுத்துவதாகவும் ஐதீகம் .
நேரம் மற்றும் வழிகள் :
பக்தர்களின் மிகுதியால் நள்ளிரவு 12 .30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 01 .00 மணியளவில் திறக்கப்படும் .
சென்னையிலிருந்து 4 மணி நேரத்தில் அடையாளம் மற்றும் இந்தியாவில் எல்லா பகுதியிலிருந்தும் விமானம் .ரயில் ,பேருந்து வசதிகள் உள்ளன .
இப்பொது ஆன்லைனில் தரிசனத்துக்கு பதிவு செய்யும் வசதி உள்ளது ஆகையால் குடுமபத்துடன் செல்பவர்கள் முன்கூட்டிய திட்டமிட்டு தேவசனத்தில் தங்குவதற்கும் ஸ்வாமி தரிசனம் செய்வதற்கும் புக்கிங் செய்துகொள்ளலாம் .
Online booking :
https://tirupatibalaji.ap.gov.in/#/login
Location Map :