ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் – குமரக்கோட்டம் (காஞ்சிபுரம் )
இறைவன் : சுப்ரமணியர்
இறைவி : தெய்வானை ,வள்ளி
தல விருச்சம் : மாமரம்
தல தீர்த்தம் : சரவணப்பொய்கை
புராண பெயர் : குமரக்கோட்டம்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
விழா காலங்கள் : ஐப்பசி மாத சஷ்டி ,வைகாசி மாத விசாகம் நட்சத்திரம்
மகாகவி காளிதாசனால் ‘நகரேஷு காஞ்சி’ என்று புகழப்பட்ட காஞ்சிபுரம் புனிதமான பஞ்சபூத தலங்களுள் பிருத்திவி என்னும் மண் தலமாகும் .இவ் புனித தலத்தில் அமைந்துள்ள குமரக்கோட்டம் காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில்களுக்கு நடுவில் சோமேஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது .
ஓம் என்னும் பிரணவத்தின் பொருள் அறியாத பிரம்மனை சிறை செய்த பின் பிரம்மனை போன்று ருத்ராக்ஷ மாலை ,கமண்டலம் கொண்டு பிரம சாஸ்தா கோலத்தில் படைப்பு தொழிலை செய்யும் நிலையில் பலமுருகனாக காட்சி அளிக்கிறார் .
இறைவன் ‘திகடசக்ரம் ‘ என அடி எடுத்துக் கொடுத்து தனக்கு பூஜை செய்த கச்சியப்ப சிவாச்சாரியாரை கொண்டு கந்தபுராணம் எழுத அருள்பாலித்தார் . கந்தபுராணம் அரங்கேற்றியபோது எழுப்பப்பட்ட ஐயத்தையும் இம்முருகனே புலவர் வடிவத்தில் வந்து தீர்த்து வைத்தார் .கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. இம்மண்டபம் கிபி 11 ஆம் நூற்றாண்டை சார்ந்தது .
இத்தல இறைவன் பற்றி அருணகிரிநாதர் ,மாதவ சிவஞான முனிவர் மற்றும் பாம்பன் சுவாமிகள் ஆகியோர்கள் பாடியுளார்கள்.
Full Video please watch
திறந்திருக்கும் நேரம் :
காலை 05 .00 -12 .00 , மாலை 4 .30 -8 .00
செல்லும் வழி :
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு பின்புரம் இக்கோயில் அமைந்துள்ளது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/sri-subramaniya-swamy-temple.html