ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் – திருநாவலூர்
இறைவன் – பக்தஜனேஸ்வரர் ,ஜம்புநாதேஸ்வரர்
இறைவி – சுந்தரநாயகி
தலவிருச்சம் – நாவல்மரம்
தலதீர்த்தம் – கோமுகி ,கருடநதி
ஊர் – திருநாவலூர்
மாவட்டம் – விழுப்புரம் ,தமிழ்நாடு
பாடியவர்கள் – சுந்தரர்,அருணகிரிநாதர்
தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் 216 வது தேவார தலமாகும் .நடு நாட்டு தலங்களில் 8 வது தலமாகும் .
இறைவன் சுயம்பு மூர்த்தியாவார் .சுந்தரர் அவதரித்த தலம்.சுக்ரன் வழிபட்ட சிவத்தலம் . இங்கு தட்சணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார் .
கி. பி 9 -10 ஆம் நூற்றாண்டை சார்ந்தது .முதலாம் பராந்தக சோழனின் மகன் ராசாதித்தன் என்ற சோழ இளவரசன் இப்பகுதியில் சோழ படைகளை நிர்வகித்து வந்தான் .இப்பகுதி மௌலி கிராமம் என்று அப்போது அழைக்கப்பட்டு இப்போது கிராமம் என்று அழைக்கப்படுகிறது .இது திருநாவலூருக்கு அருகில் உள்ளது . இங்குள்ள கல்வெட்டுகள் ராசாத்தியபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது . இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது பராந்தக சோழன் காலத்தில்தான். மூன்றாம் கிருஷ்ணரிடம் இழந்த சோழ பேரரசு மீண்டும் ராஜராஜன் காலத்தில் தான் இப்பகுதியை மீட்டது .
கருவறை சுவரில் சண்டேஸ்வரர் வரலாறு சிற்ப வடிவில் உள்ளது. பால் கறப்பது ,தந்தையார் மரத்தின் மீதேறி பார்ப்பது ,திருமஞ்சனம் செய்வது ,இறைவன் கருணை செய்வது வடிக்கப்பட்டுள்ளது .
ராஜகோபுரத்தை தாண்டி நாம் உள்ளே செல்லும்போது இடது புறத்தில் பரவை நாச்சியார் ,சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சங்கரருக்கு தனி சன்னதி உள்ளது .
நவகிரக சன்னதியில் சுக்ரனுக்கு எதிராக அவர் வழிபட்ட சுக்ரலிங்கம் உள்ளது .அதுபோல் நவகிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் திசை மாறி இறைவனின் இறைவனின் கருவறையை பார்த்தவாறு உள்ளார்.
அம்பாள் சுந்தரநாயகி மற்றும் வரதராஜ பெருமாள் சன்னதி தனியாக உள்ளது .இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் .
மேலும் பல தகவல்களுக்கு கிழே தரப்பட்டுள்ள வீடியோவிற்கு சென்று பாருங்கள் .
திறந்திருக்கும் நேரம்
காலை 6 .30 – 12 .00 , மாலை 4 .00 -8 .30
செல்லும் வழி
சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி உளுந்தோர்பேட்டை முன்பாக மடப்பட்டு தாண்டி பிரதான சாலையில் திருநாவலூர் ஊராட்சி அலுவலகத்தின் அருகில் பிரிந்து எதிரே இடதுபக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் சுமார் 2 km தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம் .