ஸ்ரீ தர்மேஸ்வரர் கோயில் – மணிமங்கலம்
இறைவன் : தர்மேஸ்வரர்
இறைவி : வேதாம்பிகை
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம் : சிவபுஷ்கரிணி
புராண பெயர் : சதுர்வேதி மங்கலம்
ஊர் : மண்ணிவாக்கம்
மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு
இக்கோயிலானது சென்னையில் உள்ள மேற்கு தாம்பரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 10 km தொலைவில் உள்ளது. சென்னை வட்ட சாலையில் சர்வீஸ் சாலையில் வந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் சுமார் 3 km தொலைவில் உள்ளது .
செல்லும் வழியெல்லாம் பச்சை பசேலென்று வயல்கள் , எங்கு பார்த்தாலும் விவாசாய பூமியாக காட்சிதருகிறது , அழகான இந்த சிறிய கிராமம் தானா சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில் போர்களும் மற்றும் முக்கியமான இடமாகவும் இருந்தது என்று நினைத்து பார்க்கும்போது மனதிற்கு ஆச்சிரியத்தையும் வியப்பையும் தருகிறது .
வாருங்கள் என்னோடு கொஞ்சம் நேரம் பயணித்து பின்னோக்கி வரலாற்றோடு கொஞ்சம் அசைபோடுவோம் …
கூரம் செப்பேடுகளில் இவ் இடத்தில் நடந்த போர்களை பற்றி குறிப்பு உள்ளது . கி.பி.630 ல் முதலாம் நரசிம்மவா்மன் காலத்தில் பல்லவா்கள் வலிமை பெறத் தொடங்கினா். இரண்டாம் புலிகேசி தெற்கு நோக்கி செல்லும் வழியில் பாலா்களை தோற்கடித்தாா். தற்போது மணிமங்கலம் இந்த இடத்தில் நகா்ந்து சென்றாா். இந்நகரம் பல்லவா்களின் தலைநகராக கஞ்சிக்கு 20 மைல் தொலைவில் உள்ளது.இங்கு பல்லவ படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டாா். அப்போது நடைபெற்ற போரில் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டார் . சோழர்கள் மற்றும் பல்லவர்கள் காலத்தில் சதுர்வேதி மங்கலம்என்று அழைக்கப்பட்டது . மற்றும் லோகமஹாதேவி சதுர்வேதி மங்கலம்,இரத்தினகிரஹாரா,இராஜசூலாமணி சதுர்வேதி மங்கலம்,பாண்டியனை-இரு-மடி-வெண்-கொண்ட-சோழ சதுர்வேதி மங்கலம் என பல பெயர்களில் இவ் தளம் அழைக்கப்பட்டது . இந்த ஊரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் இந்த பெயர்களே உள்ளன . இவ்வளவு புராண மற்றும் தொன்மையான இந்த இடத்தில் இருக்கும் தர்மேஸ்வரர் மற்றும் ராஜகோபால்சாமி கோயில்களை பற்றி இரு பதிவுகளாக நாம் காண்போம் .
இபோது நாம் காண போவது ஸ்ரீ தர்மேஸ்வரர் கோயில் பற்றிய தகவல்களாகும் …
பறந்து விரிந்த இடத்தில் மதில்களில் சுற்றி பச்சை பசேலென்று வயல்களால் சூழ்ந்த இடத்தில் தொன்மை மாறாமல் இவ் கோயில் அமைந்துள்ளது . தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது .
ராஜகோபுரம் கிடையாது ஆதலால் நுழைவு வாயில் சிறிய முகப்புடன் காணப்படுகிறது உள்ளே நுழைந்தவுடன் நேராக நாம் அம்பாளின் சன்னதியை காணலாம் . அதர்க்கு முன் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு நந்தியை நாம் காணலாம் அவரை தட்டி பார்த்தால் வெண்கல சத்தம் கேட்கிறது அவரை வணங்கிவிட்டு தாயார் சன்னதியை நாம் செல்லலாம் வேதங்களின் தலைவியான அம்பாள் வேதநாயகி தனிச்சன்னதியில், சதுர பீடத்தில் நின்றபடி இருக்கிறாள். இவள் வேதங்களின் இருப்பிடமாக இத்தலத்தில் அருளுகிறாள். எனவே இவள் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். தாயாரை வணங்கிவிட்டு நாம் இபோது நந்தியின் இடது புறத்தில் உள்ள சிறிய நுழைவு வாயிலின் வழியாக உள்ளே சென்றால் சிறிய வெளிப்பிரகாரம் உள்ளது . இப்போது நாம் சிறிய படிக்கட்டில் ஏறினால் ஒரு மண்டபம் வருகிறது அந்த மண்டபத்தில் உள் நுழைந்தால் ஈசனின் கருவறையை அடையலாம் .
சதுர பீட ஆவுடையரில் லிங்க திருமேனியாக ஈசன் காட்சி தருகிறார் . எங்கெல்லாம் நமக்கு அநீதி மற்றும் அதர்மம் நடைபெறுகிறதோ அப்போது நாம் இந்த தல ஈசனிடம் முறையிட்டால் கண்டிப்பாக நமக்கு நீதி கிடைக்கும் .
கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் ஈசனின் சன்னதி உள்ளது , பெரும்பாலும் தொண்டை மண்டலத்தில் உள்ள கோயில்கள் இந்த அமைப்பிலேயே காணப்படுகின்றன . இவ்வகையான விமானங்கள், தரையிலிருந்து சன்னதியுடன் சேர்த்துதான் கட்டப்படும். ஆனால், இக்கோயிலில் சன்னதியின் மேல் பகுதி மட்டும் கஜபிருஷ்ட அமைப்பில் கட்டப்பட்டிருப்பது வித்தியாசமான அமைப்பு. கோயிலை வலம் வந்தால் பின் புறத்தில் இரண்டு விநாயகர் உள்ளார்
இங்குள்ள சிதைந்து பூனா மற்றும் தனித்து உள்ள சிலைகளை ஒரே இடத்தில் வைத்துள்ளார்கள். அதில் ஒன்று தன கழித்தால் தானே கத்தியை வைத்து உள்ளது போல் சிலை உள்ளது .
தல வரலாறு:
முற்காலத்தில் இப்பகுதியை பல்லவ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக, சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எவ்விடத்தில், எப்படி கோயில் அமைப்பது என அவனுக்குத் தெரியவில்லை.
ஒருசமயம் சிவன், அடியார் வேடத்தில் அவனிடம் சென்றார். தான் பரம ஏழை என்றும், தனக்கு ஏதாவது தர்மம் செய்யும்படியும் வேண்டி நின்றார். மன்னன், அவருக்கு தானம் செய்ய முயன்றான். அப்போது அவர், ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு ஒரு சிவன் கோயில் கட்டி தானமாக தரும்படி கேட்டார். மன்னன் வியந்து நின்றான். அப்போது, அடியாராக வந்த சிவன் சுயரூபம் காட்டியருளினார். மகிழ்ந்த மன்னன், சிவன் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் கோயில் எழுப்பினான். சுவாமிக்கு, “தர்மேஸ்வரர்’ என்றே பெயர் சூட்டினான்.
திறந்திருக்கும் நேரம் :
காலை 8 .00 – 10 .00 , மாலை 5 . 00 – 6 .00 , குருக்கள் காலையிலேயே வந்து செல்வதால் நீங்களும் காலையில் சென்று பார்ப்பது நல்லது .
கும்பாபிஷேகத்திற்கு இக்கோயில் இக்கோயில் தயார் செய்துகொண்டிருப்பதால் நம்மால் முடிந்த உதவிகளை செய்து மிகவும் பழமையான மற்றும் புராதமான இந்த இந்த கோயிலை புதுப்பொலிவு கொடுப்போம் எல்லா வல்ல அந்த ஈசனின் அருளை பெற்று நாம் எல்லா வளங்களையும் அடைவோம் ..
Location Map :
– ஓம் நமசிவாய –