Sri Dhandeeswarar Temple – Velachery

ஸ்ரீ  தண்டீஸ்வரர் கோயில் – வேளச்சேரி

Sri Thandeeswarar Temple -  Velachery

மூலவர் :               தண்டீஸ்வரர்

தாயார் :                 கருணாம்பிகை

தல விருட்சம்  : வில்வம்

தீர்த்தம்                : எம தீர்த்தம்

சென்னையில் மிகவும் பரப்பரப்பான இடமான வேளச்சேரி பகுதியில் மிக அமைதியான இடத்தில் அமைந்து உள்ளது இந்த கோயில் .

வேளச்சேரி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சாலையில் 1 கி.மீ  சென்றால் எம தீர்த்த குளத்தை அடையலாம் அதன் அருகில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்து உள்ளது . மூலவர் அமைந்து உள்ள பகுதி மிகவும் பழமையாக சிறியதாகவும் உள்ளது .

கருவறையின் கிழக்கில் பிள்ளையாரும் , மேற்கு பகுதியில் அண்ணாமலையரும் வீற்றியிருக்கின்றனர் .

சோமசுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்த நான்கு வேதங்களையும் பறித்து சென்றான் அதனை திருமால் மீட்டு வந்தார் , வேதங்கள் அசுரனிடம் இருந்த தோஷத்தை போக்க சிவனை நோக்கி தவம் செய்தனர் சிவன் அவர்களுக்கு காட்சி தந்து அவர்களின் தோஷத்தை போக்கினார் , வேதங்கள் வழிபட்டதால் ‘வேதச்சேரி ‘ என்று அழைக்கப்பட்டது அதுவே இப்பொது வேளச்சேரி என்று ஆனது .

மார்க்கண்டையரின் ஆயுளை எடுக்க எமன் கயிறை வீசும் போது அது சிவனின் மீது விழுந்தது ,சிவன் கோபம் வந்து யமனின் பதவியை பறித்தார் ,எமன் தன் பாவத்தை மற்றும் தன் பதவியை பெற பூலோகத்தில் உள்ள இந்த குளத்தில் நீராடி தன் பதவியை திரும்ப பெற்றார் . ஆதலால் இவ் பெருமானை வண்ணங்கினால் தீர்க்க ஆயுளையும் இழந்த பதவியையும் பெறலாம் .

எமன் சிவனை பூஜிப்பதற்காக தண்டத்தை ஊன்றி பூஜை செய்தார் பூஜை முடிந்ததும் திரும்ப தண்டத்தை எடுக்க முடியவில்லை அதுவே தண்டு ஈஸ்வரனாக அமைந்ததால் ‘தண்டீஸ்வரர் ‘ என்ற பெயர் பெற்றதாக கூறுவதுண்டு .

இங்கு சஷ்டியர்திபூர்த்தி செய்யவும் , இழந்த பதவிகளை பெறவும் தகுந்த கோவில்.

திறந்திருக்கும் நேரம் :

காலை 6.30-11.௦௦  , மாலை 4.00-8.30

Location:

Leave a Reply