ஸ்ரீ ரெங்கநாதர் பெருமாள் – ஆதி திருவரங்கம்
மூலவர் – ஸ்ரீ ரெங்கநாதர்
தாயார் – ஸ்ரீ ரெங்கநாயகி
தீர்த்தம் – சந்திர புஷ்கரணி
தல விருச்சகம் – புன்னாக மரம்
ஊர் : ஆதி திருவரங்கம்
மாவட்டம் : விழுப்புரம் , தமிழ்நாடு
இங்கே வீற்றியிருக்கும் பெருமாள் ஸ்ரீரங்கம் பெருமாளை விட பெரியவர் ஆவர். ஸ்ரீரங்கத்தை விட பழமை வாய்ந்தவர் என்று கூறுகிறார்கள் . அதனால் இவரை பெரிய பெருமாள் என்று அழைக்கிறார்கள் . தமிழகத்தில் உள்ள பெருமாள்களில் பெரிய பெருமாள் ஆவர் .
இக்கோவில் திராவிடக் கட்டடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாகவும், பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள மிக அற்புதமான தலம்.
கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை , மொட்டை கோபுரமாகவே உள்ளது .கருவறையில் உள்ள ரங்கநாதபெருமாள் உருவமானது சயன கோலத்தில் 29 ft (8.8 m) சுதையில் உருவானவரே என்றாலும், தைலக்காப்பு எல்லாம் இல்லாமல் அழகாக இருக்கிறார். தலைப்பகுதியில் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளுடன் குடையாக உள்ளது. சீதேவியின் மடியில் தலை சாய்த்துப் பூதேவி அடி வருடப் பள்ளிக்கொள்கிறார். மேலும் தலைப்பகுதியில் கருடன் வணங்கிய கோலத்தில் உள்ளார். வலக்கையைத் தலைக் கணைத்து, இடக்கையை உயர்த்தி, பிரம்மாவுக்கு உப தேசிக்கின்ற நிலையில் உள்ளார். கருவறை முன்பு ஆழவார் மண்டபம் உள்ளது. தாயார் ரங்கநாயகிக்கு தனியாக ஒரு கருவறைக் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் தென் கிழக்கு மூலையில் செங்கல்லால் கட்டப்பட்ட வரலாற்றுகால தானிய சேமிப்பு கொள்கலன் (களஞ்சியம்) உள்ளது. இந்தக் களஞ்சியமானது திருரங்கம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் பாபநாசம் பாலைவனநாதர் கோவில்களில் உள்ளது போல உள்ளது.
தல வரலாறு :
சோமுகன் என்ற அசுரன் தேவர்களை அழிப்பதற்காக வேதங்களை அபகரித்தான் .இதனால் தேவர்களும் ,முனிவர்களும் கவலை அடைந்து மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர் . மகா விஷ்ணு அவர்களின் கவலைகளை போக்க சமுத்திரத்தில் ஒளிந்திருந்த சோமுகனை அழித்து வேதங்களை மீட்டு இத்தலத்தில் பிரம்மனுக்கு உபதேசம் செய்தார் .
இந்த சேஷ்திரத்தின் பெருமை ஸ்கந்தபுராண உத்தரகாண்டத்தில் உமாமகேஸ்வரஸம் வாதத்தில் 301 அத்தியாயம் முதல் 306 வது அத்தியாயம் வரை உதிரரங்க மஹாத்ம்யம் என்ற பெயரில் ஆறு அத்தியாயங்களில் வடமொழியில் கூறப்பட்டுள்ளது .
திருமங்கை அல்வா பெரிய திருமொழியில் ‘வொருவதால் ‘ என தொடங்கும் பத்து பாசாரங்களும் ‘ஏழை ஏதலன் ‘ என்று தொடங்கும் பத்து பாசுரங்களிலும் இத்தலத்தை மங்களாசனம் செய்துள்ளார் என இங்குள்ள கல்வெட்டுகளிலில் காணமுடிகிறது .
108 திவ்யா தேசங்களில் ஒன்றாக இத்தலம் இல்லை என்றாலும் மிக அற்புதமான ஒரு தலமாகும் .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்
செல்லும் வழி :
திருக்கோயிலூரில் இருந்து சுமார் 10 km தொலைவில் மணலூர்பேட்டை வழியாக செல்லவேண்டும் மற்றும் திருவண்ணாமலையில் இருந்தும் இக்கோயிலுக்கு செல்லலாம் .
Map :