ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் – நசரத்பேட்டை (சென்னை)
அதிகம் அறியப்படதா சிவன் கோயில் ,சென்னைக்கு அருகில் பூந்தமல்லியிலிருந்து 2 km தொலைவில் நசரத்பேட்டை என்ற ஊரின் மையத்தில் உள்ளது .
- மூலவர் காசி விஸ்வநாதர் ,அம்பாள் காசி விசாலாக்ஷி அம்மையார்
- கோயிலின் ஒவ்வொரு தூண்களிலும் மிக அழகான மற்றும் நேர்த்தியான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன .அவைகளை காணும்போது நம் மனம் இனம் புரியாத ஆனந்தத்தை அடைகின்றன .
- கோயிலின் உள்பிரகாரத்தில் நுழையும் போதே இரண்டு பக்கங்களிலும் இரண்டு கல்வெட்டு சிற்பங்கள் உள்ளன ஆனால் அவர்கள் யார் என்று எனது அறிவுக்கு புலப்படவில்லை . தெரிந்தவர்கள் கண்டிப்பாக எனக்கு தெரியப்படுத்தவும் .
- கோயிலின் உள்ளே மிக சிறிய ஆவுடையார் காசியில் உள்ளது போல் காட்சிதருகிறார் .கரகோட்டக மகரிஷி காசியிலிருந்து இவரை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்தார் என்று கூறுகிறார்கள் .
- 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாழ்ந்த கோயில்
- சன்னதியின் உள் பிரஹாரத்திலேயே தாயார் சன்னதி ,முருகன் ,நவகிரஹ சன்னதிகள் உள்ளன
- கொடிமரத்தின் அருகில் உள்ள மண்டபத்தின் தூண்களில் மிக நேர்த்தியான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன
- சனீஸ்வரனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது
- இக்கோயிலுக்கு உள்ளேயே ஐயப்ப பக்தர்களால் சுவாமி ஐயப்பனுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது .
- இந்து அறநிலை துறை இக்கோயிலை பராமரிக்கிறார்கள் . ஆனால் இக்கோயின் பெயர் பலகை கூட பிரதான சாலையிலேயோ அல்லது அத் தெருவின் முன்னோ இல்லை என்பது வருந்த படவேண்டியதாகும் .
செல்லும் வழி மற்றும் திறந்திருக்கும் நேரம்
காலை 7 .00 -11 .30
மாலை 4 .30 -8 .00
பூந்தமல்லியிலிருந்து பெங்களூரு நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை சிக்னல் இடது புறம் திரும்பி 500 மீட்டர் தொலைவில் இடது புறம் உள்ள தெருவில் திரும்பி கடைசியாக சென்றால் கோயிலை அடையலாம். பூந்தமல்லியிலிருந்து நிறைய ஷேர் ஆட்டோக்கள் உள்ளன .
அருகில் உள்ள கோயில்கள்
1 . பச்சைவர்ண பெருமாள் -நசரத்பேட்டை
2 . வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் தலம்)-பூந்தமல்லி
3 . திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் -பூந்தமல்லி
Location Map: