Sri Arudra Kabaleeswarar Temple – Erode

ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் – ஈரோடு

இறைவன் :  ஆருத்ர கபாலீஸ்வரர்

இறைவி : வாராணி அம்பாள்

தலவிருச்சம் : வன்னி மரம்

ஊர் : கோட்டை, ஈரோடு

மாவட்டம் : ஈரோடு , தமிழ்நாடு

இக்கோயில் அமைந்திருக்கும் பகுதியை கோட்டை என்று கூறுவார்கள் , பழங்காலத்தில் இந்த பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் .

இறைவன் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார் . இறைவன் மற்றும் இறைவிக்கு என இரண்டு ராஜகோபுரங்கள் இக்கோயிலுக்கு உள்ளன .

இக்கோயிலை சோழர்கள் கட்டியதாக இங்குள்ள 800 வருடங்கள் பழமையான கல்வெட்டில் காணப்படுகின்றது . இறைவனின் மீது ஆண்டு தோறும் மாசி மாதம் 25 ,26 ,27 தேதிகள் சூரிய ஒளி விழுகிறது . முதன் முதலில் தமிழகத்தில் தமிழில் அர்ச்சனை நடைபெற்ற கோயிலாகும் .

வரலாறு :

தேவ குருவின் சாபத்தால் ரம்பை , ஊர்வசி மானிட பிறவியாக சிறுநல்லாள்  , பெருநல்லாள் என பெயரோடு பூலோகத்தில் பிறந்தார்கள் பிறந்தார்கள் .அவர்கள் இத்தலத்தில் இறைவன் மற்றும் இறைவியை மனமுருக வழிபாடு செய்தார்கள் . அவர்களின் அன்புக்கு இறங்கிய ஈசன் ,இந்திரன் மூலம் பூந்துறை நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து பாவம் போக்கினார் என்று வரலாறு கூறுகிறது .

இவர்கள் வறுமையில் வாடியபோது இறைவன் அவர்களின் வறுமையை போக்க பொன் மயமான இருமலைகளை தானமாக வழங்கினார் . அந்த மலைகள் தற்போது  மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூருக்கு மேற்கே இரட்டை மலைகளாக காட்சிதருகின்றன . இப்போது பொன்மலை ,கனககிரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது .

இக்கோயிலை சூரிய பகவான் வழிபட்டார் எனவே சூரிய வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறுகிறது . முன்மண்டபத்திருக்கும் ,மடப்பள்ளிக்கும் இடையே சூரியன் தன் இருபெரும் தேவியரோடு காட்சி தருகிறார் . இக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் கன்னி விநாயகர் உள்ளார் .

இக்கோயில் அருகிலேயே கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது . சைவ வைணவத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்விடம் அமைந்துள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/06/sri-arudra-kapaleeswarar-temple-erode.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 6 -11 , மாலை 4 -8

செல்லும் வழி :

இக்கோயில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்காவில் இறங்கி சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது .

Location:

    ஓம் நமசிவாய

Leave a Reply