ஸ்ரீ திருக்கண்ணீஸ்வரர் கோயில் – ஆக்கூர்
இறைவன் : திருக்கண்ணீஸ்வரர்
இறைவி : திரிபுரசுந்தரி
ஊர் : ஆக்கூர்
மாவட்டம் : திருவண்ணாமலை , தமிழ்நாடு
கரு மேகங்கள் சூழ ,இரு புறமும் பச்சை பசேலென்று வயல்வெளிகள் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் தார் சாலை பயணம் செய்யவே மிக அற்புதமாக இருந்தது . நான் மற்றும் திரு . வேலுதரன் ஐயா , திரு . மனோஜ் இந்த ஊரை தேடி சென்றோம் . ஊரின் எல்லையை அடைந்ததும் நம்மை மிக பெரிய கோபுரத்துடன் மிக அழகான அம்மன் கோயில் வரவேற்றது , அம்மன் கோயிலின் அருகிலேயே மிகவும் பரிதாபத்துடன் மொட்டை கோபுரத்துடன் உடையும் நிலையில் உள்ள கதவுடன் காணப்படுகிறது . மொட்டை கோபுரத்தின் வாயிலின் இரு புறமும் தற்காலத்தில் நிறுவப்பட்ட முருகன் , விநாயகர் கோயில் உள்ளது . உள்ளே நுழைந்தால் வெளிப்பிரகாரம் காணப்படுகிறது . நேராக பார்த்தல் முக்த மண்டபத்துடன் கூடிய சன்னதி உள்ளது . அந்த மண்டபத்தில் உள்ள தூண்களில் நிறைய சித்தர்கள் ,தெய்வங்களின் புடைப்பு சிற்பங்கள் உள்ளன .
இடது புறம் திரும்பினால் ஒரு சிறு சன்னதியில் மற்றும்மொரு சிவ லிங்கம் நந்தியுடன் இருக்கிறார் . அப்படியே வலம் வந்தால் கோஷ்டத்தில் விநாயகர் , தக்ஷணாமூர்த்தி ,விஷ்ணு ,பிரம்மா மற்றும் துர்கை ஆகியோர் உள்ளார்கள் . கிழக்கு நோக்கி ஈசன் திருக்கண்ணீஸ்வரர் காட்சி தருகிறார் , அவருக்கு நேர் வெளியே பலிபீடமும் , நந்தியும் உள்ளார் .
அம்மன் திரிபுரசுந்தரி மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் . முக்த மண்டபத்தில் நவகிரஹ சின்னத்தில் உள்ளது .
மிகவும் பழமையான கோயிலான இக்கோயில் 13 அல்லது 14 ஆவது நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது , ஏன்னெனில் இவ்வூரில் அமைந்துள்ள பழமையான பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டு காலத்தை பொறுத்து இக்கோயிலும் பழமையான கோயிலாக இருக்கும் என்று கருதப்படுகிறது .
திறந்திருக்கும் நேரம் :
ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது , அதுவும் நேரம் கணிப்பது சற்று கடினம் . பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி அன்று திறந்திருக்கும் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/08/sri-thirukanneeswarar-temple-akkur.html
செல்லும் வழி :
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் சுமார் 20 km சென்றால் இவ்வூரை அடையலாம் . உத்திரமேரூர் இருந்து சுமார் 24 km தொலைவில் உள்ளது .
Location :