Sri Agneeswarar Temple – Neyveli (poondi)

ஸ்ரீ ஆதி அக்னீஸ்வரர் கோயில்  – நெய்வேலி (பூண்டி அருகில் )

Agneeswarar temple - Neyveli

இறைவன் : ஆதி அக்னீஸ்வரர் , அக்னீஸ்வரர்

இறைவி : லலிதாம்பிகை

தல விருச்சம் : கல்லால மரம்

தல தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஊர் : நெய்வேலி கிராமம் , பூண்டி அருகில்

மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு

பூண்டி பாடல் பெற்ற தலமான ஊன்றீஸ்வரர் கோயிலுக்கு  போகும் போது அவ் ஊருக்கு முன்னேயே இந்த நெய்வேலி கிராமத்தில் மிக அற்புதமான பழமையான சித்தர்களோடு தொடர்புடைய இந்த கோயிலுக்கும் போகும் பாக்கியம் எனக்கு கிட்டியது .

மிகப்பெரிய நீர்தேக்கத்தின் கரையின் மடியில் பச்சைபசேலென்று மரங்களும் செடிகளும் மிக அற்புதமாக உள்ளது , மரங்களுக்கு இடையில் வளைந்து நெளிந்து செல்லும் சாலை இவைகளை கடந்து நாம் சென்றால் ஆரவாரம் இல்லாத அழகான இந்த நெய்வேலி கிராமம் நம்மை அழைக்கிறது .

கிராமத்தின் உள்ளே சென்றால் இக்கோயிலானது மிக பரந்து விரிந்த வயல்வெளிக்கு இடையில் மிக அழகாக காட்சி தருகிறது . அந்த சிறிய பாதையின் வழியாக நாம் பயணித்து கோயிலுக்கு வந்தேன் .

கோயிலுக்கு தெற்கு திசையில்  சிறிய முகப்பு உள்ளது அந்த முகப்பில் ஈசனும் , தாயாரும் அமர்ந்திருக்க ஒருபுறம் விநாயகர் மறுபுறம் முருகர் என சுதை சிற்பங்கள் உள்ளன .

முகப்பை கடந்து உள்ளே சென்றால் முன் மண்டபத்திற்கு தெற்கில் ஒரு நுழைவு வாயிலும் , கிழக்கே ஒரு நுழைவு வாயிலும் உள்ளது . நாம் கிழக்கு நுழைவு வாயிலை நோக்கி போகும் போது அனந்தநாயகி சமேத ஸ்ரீ அனந்தன் மற்றும் அவர்களின் இருபுறமும் கேது மற்றும் ராகு பகவான் சிலைகள் உள்ளன . அவர்களை வணங்கிவிட்டு நாம் நடந்தால் கிழக்கு நுழைவு வாயில் முன் கொடிக்கம்பத்தை தரிசிக்கலாம் , அப்படியே உள் நுழைந்தால் இறைவன் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் . இவர் இவ்வூர் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் . கோயிலுக்கு பின் உள்ள ஆதி அக்னீஸ்வரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போக இறைவனின் ஒப்புதலால் இவ்விடத்தில் இவரை பிரிதிஷ்டை செய்துள்ளார்கள் . தாயார் லலிதாம்பிகை தெற்கு நோக்கி அன்பையும் அருளையும் வாரி தருகிறாள்

சித்தர்கள் சன்னதி :
இருவரையும் தரிசித்து விட்டு நாம் தெற்கு வாசல் வழியாக வெளி வந்து வளம் வந்தால் மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் தல விருச்சமான கல்லால மரம் உள்ளது . இவ்மரமானது தக்ஷிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் மரமாகும் அதன்படி இவ் மரத்தின் அடியில் தக்ஷிணாமூர்த்தி உள்ளார். இவ் மரத்தை சுற்றி 18  சித்தர்களுக்கு தனி தனி சன்னதியை நிறுவியுளார்கள்.

ஆதி அக்னீஸ்வரர் :

கோயிலை வலம் வருகையில் ராதா சமேத கிருஷ்ணர் ,விநாயகர் சன்னதி , தெய்வானை வள்ளி சமேத முருகர் சன்னதி உள்ளது , முருகர் சன்னதிக்கு முன்  ஒரு சிறு கொட்டகை கீழ் ஆதி அக்னீஸ்வரர் தேடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி தருபவராக உள்ளார் . இவர் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான லிங்கம் ஆவார் . இவர் அருகில் கருவூரார் மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் இறைவனை வணங்கியபடி உள்ளார்கள் .

இவர்கள் இன்றும் இக்கோயிலில் இறைவனுக்கு அருவுருவமாக இருந்து பூஜை செய்வதாக கூறுகிறார்கள் . இவ் சுயம்பு லிங்கத்தை எடுத்து கோயில் கட்ட முற்படும்போது இவரை பெயர்க்க  முடியாமல் திணறினர் அப்போது சித்தர்கள் எங்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்று பிரசன்னம் பார்க்கும் போது கூற இவருக்கு முன் வேறு ஒரு கோயிலை நிறுவினார்கள் . இவ் ஆதி அக்னீஸ்வரருக்கு நாமே பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். அவருக்கு முன்பு உட்கார்ந்து தியானம் செய்யலாம்.

இவரை வணங்கி விட்டு நாம் கோயிலை வலம் வந்தால் வனதுர்கை சன்னதியை காணலாம் . பின்பு கோயில் தல தீர்த்தமான அக்னி தீர்த்தம் உள்ளது ,பைரவர் , நவகிரஹணம் மற்றும் நாகர் ஆகியோர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளது .

இக்கோயிலானது சித்தர்கள் தினமும் அருஉருவமாக வந்து  வழிபடும் கோயிலாக இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாக விளங்குகிறது . வேண்டும் வரங்களை தந்து நம் வழியில் நோயற்று வாழ்வு தந்து சிறப்பாக வாழ அருள் புரிகிறார் .

இக்கோயிலுக்கு நீங்கள் போகும் போது முடிந்த அளவு தீபா என்னை ,விபூதி ஆகியவரை வாங்கி செல்லுங்கள் .

English :

This Adhi agneeswarar temple is situated in the village of neyveli near poondi. the main deity is Shree Agneeswarar , believed that the 18 siddha purushas among whom the two most prominent duo Shree Karur Devar and Nerur Shree Sadhasiva Brahmendrar worship this deity even today during midnights .The Kallala tree without hanging roots is the adobe of Vana Durga  and 9 rishis are penancing below this tree . It was revealed during prasnam that the Adivasis who lived here have worshipped this Kali as their main deity in ancient days and the divine presence of Kali is still felt even today in this tree.

Temple Photos

https://alayamtrails.blogspot.com/2022/09/sri-adhi-agneeswarar-temple-neyveli.html

திறந்திருக்கும் நேரம் :  

காலை 7 .00 மணி முதல் 11 .00  மணி வரை , மாலை 6 .00 முதல் இரவு 7 . 00  , நேரம் மாறுதலுக்கு உட்பட்டது , கீழ் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு செல்லவும் .

contact details : திரு . ராமமூர்த்தி குருக்கள் – 8610896279
                          நிர்வாகி – 9843685562

செல்லும் வழி :
திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 14 km தொலைவில் நெய்வேலி சந்திப்பு வரும் அதில் இருந்து வலது புறம் திரும்பி சுமார் 2 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது .

அருகில் உள்ள கோயில் :
1 . ஊன்றீஸ்வரர் கோயில் – பூண்டி தேவரா பாடல் பெற்ற தலம்

2 . வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் – திருவள்ளூர் ,108 திவ்ய தேசம்

3 . வாசீஸ்வரர் கோயில் – திருப்பாசூர் , திருவள்ளூர் ,தேவார தலம்

Location Map:

திருச்சிற்றம்பலம்

Leave a Reply