Kanchipuram Divya desams

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 15 திவ்ய தேசம் தரிசனம்

காஞ்சிபுரம் என்று நாம் சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது கோயில்கள் , அதிலும் நமக்கு காமாட்சி அம்மன் ,ஏகாம்பரேஸ்வரர் ,வரதராஜ பெருமாள் கோயில்தான் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும் . ஆனால் காஞ்சிபுரத்தில்  பழமையான நிறைய கோயில்கள் உள்ளது . அதுல குறிப்பா பாடல் பெற்ற தலம் மற்றும் 108 திவ்ய தேசங்கள் கோயில்கள் நிறைய உள்ளன .  அதுல நாம பார்க்க போவது பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 15 திவ்ய தேச தலம் காஞ்சிபுரத்தில் உள்ளது . 14 காஞ்சிபுரத்தில் , ஒன்று காஞ்சிபுரத்தில் கொஞ்சம் வெளியேவும் உள்ளது . இந்த எல்லா தலங்களையும் நாம் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம் .

திவ்ய தேசம் என்றால் என்ன ? அப்படின்னு நமக்கு ஒரே கேள்வி வரும் அதாவது ஆழ்வார்களால் 4000 தமிழ் பதிகம் பாடி அதாவது மங்களாசனம் செய்யப்பட்ட பெருமாளின் கோயில்களை திவ்ய தேசம் என்று சொல்வார்கள் . அதில் 105  திவ்யதேசம் இந்தியா முழுவதும் உள்ளது . ஒன்று நேபாள் நாட்டிலும் மற்ற இரண்டும் நமது இறப்புக்கு பின் அடையும் இடத்தையும் கூறுவார்கள் .

காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களின் பெயர்களை இங்கே கொடுத்துள்ளேன் , அதன் முழு விவரங்களையும் தனி தனியாக நான் இந்த இணைய தளத்திலேயே சொல்லியுள்ளேன் .

காஞ்சிபுரத்தில்  உள்ள திவ்யதேசங்களின் பெயர்கள் :

1 . வரதராஜ பெருமாள் கோயில் – திருக்கச்சி

2 . ஆதி கேசவ பெருமாள் (அஷ்டபுஜம் ) கோயில் – ஆட்டயபுரம்

3 . விளக்கொளி பெருமாள் கோயில் –  தூப்பல்

4 . அழகிய சிங்கர் பெருமாள் கோயில் – திருவேளுக்கை

5 . திருநீரகத்தான் பெருமாள் கோயில் – திருநீரகம்

6 . பாண்டவதூதர் பெருமாள் கோயில் – திருபாடகம்

7 . நிலாத்துண்டர் பெருமாள் கோயில் – ஏகாம்பரேஸ்வரர் கோயில்

8 . உலகளந்த பெருமாள் கோயில் – திருஊரகம்

9 . திருகருணாகர பெருமாள் கோயில் – திருகாரகம்

10 . திருகார்வானர் பெருமாள் கோயில் – திருகார்வணம்

11 . சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் – திருவெஃகா

12 . கள்வப்பெருமாள் கோயில் – காமாட்சி அம்மன் கோயில்

13 . பவளவண்ணம் மற்றும் பச்சைவண்ணம் பெருமாள் கோயில் – காஞ்சி

14 . வைகுண்ட பெருமாள் கோயில் – திருபரமேஸ்வர விண்ணகரம்

15 . ஸ்ரீ விஜயராகவர் பெருமாள் கோயில் – திருப்புட்குழி

மேற்கொண்ட எல்லா கோயில்களையும் ஒரே நாளில் நம்மால் பார்த்துவிட முடியும் . காலை 6 .00 அளவில் நாம் ஆரம்பித்தால் எல்லா கோயில்களையும் தரிசனம் செய்துவிடலாம் . குறிப்பாக ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயில்கள் சீக்கிரம் திறந்து விடுவார்கள் அதே நேரத்தில் லேட்டாகத்தான் நடையை அடிப்பார்கள் , அதனால் அதற்கு ஏற்றார் போல் நமது தரிசன நேரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் .

English- kanchipuram the name is identity for silk and temples. There are 22 Divyadesams in Thondainaadu. Out of these 14 Divyadesams are inside Kanchipuram. The 15th divyadesam Thirupputkuzhi, is situated on the Chennai-Bangalore highway, near Balu chettiar chathiram, 10 kms away from Kanchipuram. Kanchipuram Divyadesams can easily be covered in a day. you will start at 6.00 Am. you have been covering all Divya Desam perfectly.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply