Sri Krishnan Temple /Adi Shankara Janmabhoomi Kshetram – Kalady

ஸ்ரீ திருக்காலாடியப்பன் கோயில் மற்றும் ஆதி சங்கரர் அவதார தலம் – காலடி

மூலவர் : திருக்காலாடியப்பன்

தலவிருட்சம் : பவளமல்லி

தல தீர்த்தம்  : பூர்ணாநதி

ஊர் : காலடி

மாவட்டம் : எர்ணாகுளம் , கேரளா

கேரளாவில் உள்ள மிக முக்கியமான இந்துக்களின் புனித இடம் இந்த காலடி ஆகும் . ஏனெனில் அத்வைத தத்துவத்தை உலகுக்கு வழங்கிய ஆதி சங்கரர் அவதரித்த இடம் இந்த காலடி ஆகும் . மற்றும் அவரால் நிறுவப்பட்ட திருக்காலாடியப்பன் கோயில் ,அக்ஷ்ய திருதியை அன்று  மஹாலக்ஷ்மி தாயார் தங்க நெல்லிக்கனியை மழையாய் பொழிந்த  இடம் , ஆதி சங்கரர் தாயார் ஆர்யாம்பாள் சமாதி உள்ள இடம் .சிங்கேரி சாரதாபீடத்தை சார்ந்த  ஆஸ்ரமம் உள்ளது .

ஆதி சங்கரர் :

சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதியருக்கு மகனாக இவ் தலத்தில் சங்கரர் அவதரித்தார் . இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அதன் மூலம் அத்வைத தத்துவத்தை உலகுக்கு எடுத்து காட்டினார் .

சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

கோயில் அமைப்பு :

 கேரளா கட்டிட அமைப்புடன் உள்ள கோயிலுக்கு உள் சென்றால் திருக்காலாடியப்பன் என்கின்ற கண்ணனை நாம் தரிசிக்கலாம் .இவர் வலது கையில் வெண்ணை வைத்துள்ளார் , இடதுகையை இடுப்பில் வைத்துள்ளார் . வலது மேல் கையில் சக்கரம் , இடது மேல் கையில் சங்கு வைத்துள்ளார் . இந்த கண்ணன் விக்ரகம் 3 .5 அடி உயரத்தில் “அஞ்சனா” என்ற கல்லால் ஆனது , இந்த கல்லானது இரும்பு மற்றும் தாமிரம் அதிக அளவில் கலந்திருக்கும் , இது மிகவும் சக்தி வாய்ந்த கல்லாகும். பெருமாள் தலங்களிலேயே குருவாயூர் கண்ணனும் இந்த கோயில் கண்ணனும் இவ் வகையான விக்ரகம் ஆகும் .

இக்கோயிலானது சங்கரருடைய குலதெய்வம் ஆவார் . அவருடைய தாயார் தினமும் பூர்ணாநதியில் குளித்து இவ் கண்ணனை அவர் தினமும் வணங்குவார் . கி பி  795 இல் சங்கரர் இக்கோயிலை காட்டினார் .

கண்ணனின் சன்னதியின் வலது புறத்தில் சிவன் பார்வதி மற்றும் கணபதி ஆகியோர் உள்ளார்கள் .நமஸ்கார மண்டபத்தில் பரசுராமர் மற்றும் ஆதிசங்கரர் சன்னதிகள் உள்ளது . சுற்று பிரகாரத்தில் பவளமல்லி மரம் மற்றும் ஸ்வாமி ஐயப்பன் சன்னதி உள்ளது .

ஒரு அட்சயதிரிதியை நாளில்தான் மஹாலக்ஷ்மி தாயார் இங்கு தங்க நெல்லி மழை பொழிந்தார் , ஆதலால் இங்கு ஒவ்வொரு அட்சய திரிதியை அன்றும் யாகம் செய்து யாகத்திற்கு பணம் செலுத்துவர்களுக்கு தங்க நெல்லி , வெள்ளி நெல்லி மற்றும் யந்திரம் தருகிறார்கள் .

தங்க நெல்லி மழை :

சங்கரர் தன குருகுல வாசத்தின் போது ஏகாதசி விரதம் இருந்து மறு நாள் துவாதசி திதி  அன்று பிட்சை எடுத்து உண்ண புறப்பட்டார் அப்போது அவர் அயாசகன் என்ற ஏழை வீட்டில் “பவதி  பிட்சாம் தேஹி” என்று பிட்சை கேட்டார் , ஆனால் அவரிடம் பிட்சை போட எதுவும் இல்லை ஆதலால் தன்னிடம் இருந்த காய்ந்த நெல்லிக்கனியை சங்கரருக்கு பிட்சை இட்டார் , இதை கண்டு மிகவும் மனம் வருந்திய சங்கரர், அந்த பெண்ணிற்கு உதவ நினைத்து  மனம் உருகி தயார் மஹாலக்ஷ்மியை நினைத்து  சுலோகம் பாடினார் , அவர் 19 ஸ்லோகம் பாடி முடித்தபோது தாயார் கருணையால் அந்த ஏழை பெண்ணின் வீட்டின் கூரையில் இருந்து தங்க நெல்லிக்கனியை மழையாக பொழிவித்தார் . அந்த ஸ்லோகமே கனகதாரா ஸ்லோகமாகும் .

பூர்ணாநதி :

இந்த பூர்ணாநதியில் தான் சங்கரர் குளித்து கொண்டிருந்தபோது ஒரு முதலை அவரின் காலை கவ்வியது , கரையில் இருந்த சங்கரர் தாயார் அலறினார் , ஊர் மக்கள் அங்கு கூடிவிட்டார்கள் , முதலை அவர் உடலை விழுங்க தொடங்கிவிட்டது .சங்கரர் என்ன நடக்கும் என்பதை கணித்து தான் சந்நியாசம் வாங்கினால் தான் இவ் முதலை என்னை விடும் என்று தன் தாயாரிடம் கூறினார். தன் மகனின் உயிரே முக்கியம் என்பதால் சந்நியாசத்திற்கு அனுமதி அளித்தார் . உடனே சங்கரரை முதலை விடுவித்தது . இவ் நதியில் குளித்து இவ் கண்ணனை வணங்கினால் எல்லா இன்னல்களிலும் இருந்து விடுபட்டு நீண்ட ஆயுளை பெறலாம் .

திறந்திருக்கும் நேரம் :

காலை 5 .00  மணி  முதல் நண்பகல் 01 .௦௦ மணி வரை , மாலை 4 .00 முதல் இரவு 8 .00 மணி வரை

Kalady Sree Krishna temple is located at Kalady in Ernakulam district, Kerala. The temple is associated with Adi Shankaracharya. As per history, this was the family temple of Adi Shankara and Sri Krishna Bhagavan worshipped here was the paradevata of the family.

செல்லும் வழி :

எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 35 கி மீ தொலைவில் அங்கமாலி என்ற இடத்தில் இருந்து தெற்கே சுமார் 8 கி மீ தொலைவில் உள்ளது . சென்னையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் அனைத்து ரயில்களும் அங்கமாலி வழியாகத்தான் செல்லும் .

Location:

– ஹரே கிருஷ்ணா –     

Leave a Reply