Sri Kamakshi Amman Temple- Mangadu (Chennai)

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – மாங்காடு ( சென்னை )

Sri Kamakshi Amman - Mangadu
Raja Gopuram 

மூலவர் / தாயார் – காமாட்சி

தல விருச்சகம் – மாமரம்

ஊர் – மாங்காடு

மாவட்டம் காஞ்சிபுரம்

Sri Kamakshi Amman - Mangadu
Arthameru Chakram & Kamakshi 
  • சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் மிக பிரபலமான தலம் இது .
  • அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலால் அக்னி தவம் செய்த இடம் , இங்கு தவம் செய்துவிட்டுத்தான் பின்பு காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரை மணந்தார் .
  • இத்தலத்தில் ஸ்ரீ சக்கரம்தான் பிரதானமானது . இச் சக்கரத்திற்கு அர்த்தமேரு ஸ்ரீசக்கரம் என்று பெயர் . இச்சக்கரத்தை ஆதி சங்கரர் அமைத்தார் . அம்பாளின் தவத்தால் அந்த இடத்தின் வெப்பத்தை தணிக்க இச்சக்கரத்தை அமைத்தார் . ஆமை உருவத்தை அடித்தளமாக அமைத்து அதன் மேல் மூன்று படிக்கட்டு கட்டி அதன் மேல் 16 இதழ் தாமரை அமைத்து அதன் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன் மேல் ஸ்ரீசக்கரம் வரையப்பட்டுள்ளது .இச்சக்கரம் 43 திரிகோணங்களை கொண்டது ,இது எட்டு வகையான (அஷ்டகந்தம் ) மூலிகையால் செய்யப்பட்டுள்ளது . ஆதலால் இதெற்கு அபிஷேகம் கிடையாது .
    குங்குமம் அர்ச்சனை மற்றும் 18 முழம் புடவை சாத்தப்படுகிறது .இவ் மாதிரியான பெரிய ஸ்ரீசக்கரம் எங்கும் கிடையாது என்பது சிறப்பு .
  • பஞ்ச உலோகத்தாலான மூலவருக்கு அபிஷேகமும் , ஸ்ரீசக்கரத்திற்கு அர்ச்சனையும் செய்யப்படுகிறது .
  • ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடு குண்டத்தின் நடுவில் தன் இடது காலின் கட்டை விரலால் நின்று தன் வலது காலை இடது காலின் தொடை பகுதிக்கு மேல் வைத்து இடது கையை நாபி கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தன் சிரத்துக்கு மேலே வைத்து தன் கண்களை மூடி அய்யன் ஈசனை திருமணம் செய்ய கடும் தவம் புரிந்தார் .இவ் காட்சியை கோவிலின் உள்ளே உற்சவர் சிற்பமாக காணலாம் .
  • இத்தலத்தில் பின்புறம் வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது இங்குதான் தன் பக்தனான சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி கொடுத்தார் ஈசன் . பின்பு அம்பாளை காஞ்சிபுரம் சென்று ( https://www.indiatempletour.com/sri-velleeswarar-temple-mangaduchennai/ ) தவம் செய்ய சொல்லி அனுப்பினார் .
  • இக்கோயிலில் 6 வார வழிபாடு பிரபலமானது . எதாவது ஒரு கிழமையில் எலுமிச்சம் பழத்துடன் வந்து அம்பாளை தரிசனம் செய்து அதே கிழமைகளில் ஒரு மண்டலம் அதாவது ஆறு வாரங்கள் தொடர்ந்து வந்து பூஜை செய்தால் வேண்டியவைகள் நிறைவேறும் என்று அழுத்தமாக நம்பப்படுகிறது ஏன்னெனில் அம்பாள் ஒத்தக்கால் தவம் இருந்து நினைத்ததை நிறைவேற்றிக்கொண்ட இடம் இது .
  • வேலை இல்லாதவர்கள் ,குழந்தை இல்லாதவர்கள் ,பதவி உயர்வு ,
    உடல் உபாதை உள்ளவர்கள் , கல்யாண தோஷம் உள்ளவர்கள் இக்கோயில் பிராத்தனை செய்கிறார்கள் . குறிப்பாக வேலை கிடைக்க இந்த 6 வார வேண்டுதல் செய்கிறார்கள் .
  • ஸ்ரீசக்கரத்திற்கு விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது அன்று மட்டும் தங்க கவசத்தில் காட்சி தருவார் மற்ற நாள்களில் வெள்ளி கலசம் சாத்தப்பட்டிருக்கும்
  • ஸ்ரீ சக்கரமே இக்கோயிலின் பிரதானமான அம்பாள் ஆவார். பின்னால் இருக்கும் பஞ்சலோக காமாட்சி வலது கையில் கிளியும் தலையில் பிறைச்சந்திரனோடும் காட்சி தருகிறார் . அருகில் காமாட்சி விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருக்கும் ஆக நான்கு அம்பாள்களை ( ஸ்ரீசக்கரம் ,பஞ்சலோக காமாட்சி , பஞ்சாக்னியில் ஒற்றைக்கால் தவம் புரியும் காமாட்சி , காமாட்சி விளக்கு ) ஒரே இடத்தில தரிசிக்கிலாம்
Sri Kamakshi Amman - Mangadu
Thabam 
Sri Kamakshi Amman - Mangadu
SriSakaram 

கோவில் திறந்திருக்கும் நேரம் மற்றும் அமைவிடம்

திங்கள் ,புதன் ,வியாழன் மற்றும் சனி கிழமைகள்

காலை 6 முதல் 1 .30 மணி , மாலை 3 .00 முதல் 9 .00 வரை

செவ்வாய் ,வெள்ளி மற்றும் ஞாயிறு காலை 5 முதல் இரவு 10 வரை இடைவெளி இன்றி தரிசிக்கலாம் .

கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி போகும் வழியில் குமணமச்சாவடி இடது புறத்தில் குன்றத்தூர் செல்லும் சாலையில் 2 km தொலைவில் உள்ளது. வழியில் திருவேற்காடு சென்று அம்பாளை தரிசனம் செய்யலாம் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-kamakshi-amman-temple-mangadu.html

அருகில் உள்ளே கோயில்கள் :
1 . வெள்ளீஸ்வரர் (சுக்ரன் ) கோயில் -மாங்காடு
2 . ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் -மாங்காடு

மூன்று தலங்களையும் தரிசிப்பது மிக பலனை தரும் ஏனென்றால் மூன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் உள்ள தலம் .

4 Comments

Leave a Reply