ஸ்ரீ கந்தழீஸ்வரர் கோயில் – குன்றத்தூர் (சென்னை )
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு ,நீருண்டு
அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம் இறை ஈசனை
நன்னெறியாமல் நழுவுகின் றாரே !
இறைவன் : கந்தலீஸ்வரர்
அம்பாள் : நகைமுகை வல்லி
தல விருச்சகம் : அரச மரம்
ஊர் : குன்றத்தூர்
மாவட்டம் : காஞ்சிபுரம்
- 1000 வருடங்கள் மேற்பட்ட கோயில் , சோழர்களால் கட்டப்பட்ட கோயில் , கி.பி 1241 திரிபுவன சக்கரவத்தி ஸ்ரீ ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கோயில் . அதன் பிறகு கிருஷ்ண தேவராயர் இவ் கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது .
- பெரிய வடிவ லிங்கமேனியில் சதுரவடிவ ஆவுடையாரில் வீற்றியிருக்கிறார் .
- பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் இவ் வழியே வரும்போது இக்கோயிலை கண்டு பெரிய திருமேனியுடன் வீற்றியிருக்கும் ஈசனிடம் சரணாகதி அடைந்தார் . அவரையே நினைத்து தவம் செய்தார். ஈசனுடன் சரணாகதி ஆனார் அப்போது ஒருநாள் இறைவன் அவருக்கு காட்சி தந்து அருள்புரிந்தார் .அந்த கணமே அவருக்கு தன் கர்வம் தொலைந்தது போல் உணர்ந்து மெய்சிலிர்த்து போனார் . உடனே இறைவனை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர் .
தன் பற்றுதலை அழைத்ததால் கந்தழீஸ்வரர் என்று பெயர் சூட்டினார் . கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம் , கந்தலீஸ்வரர் என்றால் பற்றுதல் நீக்கியவர் என்று அர்த்தம் . - இக்கோயிலின் அருகிலேயே சேக்கிழார் கோயில் , ஊரகப்பெருமான் பெருமாள் , குன்றத்தூர் முருகன் ஆகியோர்கள் அமைந்துள்ளார்கள் .
- கண்ணப்ப நாயனார் சிவனின் கண்களில் காலை வைத்திருக்கும் கல் சிற்பம் அமைந்துள்ளது .
அமைவிடம்
குன்றத்தூர் முருகன் கோயிலின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோயில் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-kandhazeeswarar-temple-kundrathur.html
Location: