ஸ்ரீ அவிநாசியப்பர் (லிங்கேஸ்வரர் ) கோயில் – அவினாசி
மூலவர் : அவிநாசியப்பர் ,அவிநாசி ஈஸ்வர் , லிங்கேஸ்வரர்
அம்பாள் :ஸ்ரீ கருணாம்பிகை ,பெரும்கருணை நாயகி
தலவிருச்சகம் : பாதிரிமரம்
தல தீர்த்தம் : காசி கிணறு , நாககன்னி தீர்த்தம்
பழைய பெயர் : திருப்புக்கொளியூர் அவிநாசி
ஊர் : அவிநாசி
மாவட்டம் : திருப்பூர்
- தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களில் இது முதல் தலமாகும் . பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இத்தலம் 205 வது தலமாகும் .
- ‘விநாசனம்’ என்றால் அழியக்கூடியது அதன் முன் ‘அ’ சேர்த்தால் அவிநாசி அப்படியென்றால் அழியத்தன்மை என்று அர்த்தம் . இக்கோயிலின் இறைவனை வணங்கினால் ‘பிறவாத்தன்மை’ கிடைக்கும்
- இத்தலத்தின் இறைவன் லிங்கேஸ்வரர் சுயம்பு வடிவமானவர் .
- அம்பாள் கருணாம்பிகை ஆட்சிபீட நாயகி என்பதால் இறைவனின் வலது புறத்தில் தனி சன்னதி மற்றும் கொடிமரத்துடன் உள்ளார்
- முதலில் விநாயகரை வணங்கி பின்பு பெரிய கோபுரத்துக்கும் அம்பாள் சன்னதியின் கோபுரத்திற்கும் நடுவில் உள்ள தவத்திலிருக்கும் பாதிரி மரத்து அம்பாளை தரிசித்துவிட்டுதான் உள்ளே செல்லவேண்டும் .
- அம்பாளின் கோயில் பின்புறம் உள்ள மதில் சுவரில் தேள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இவ் அம்மனை வழிபட்டால் விஷம் நீங்கும். இவ் அம்பாளை பற்றி ஒரே நாளில் 100 பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது .
- இக்கோயிலின் உள்ப்ரகாரத்திலயே பைரவர் சன்னதி உள்ளது இது காசியிலிருந்து எடுத்து வந்ததாகவும் காசி பைரவருக்கு முற்பட்டவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன . இவருக்கு வடைமாலை சாற்றுவது சிறப்பான வழிபாடாகும் .
- இக்கோயின் நவகிரக சன்னதியின் அருகில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது . வசிஷ்டருக்கு சனி தோஷத்த்திலிருந்து விடுபட இத்தல சனீஸ்வரரை வணங்கி விடுபட்டார் ஆதலால் அவரே இக்கோயிலில் தனி சன்னதியை உருவாக்கினார் . இடது காலை பீடத்திலும் வலது காலை காகத்தின் மீது வைத்தும் காட்சி தருகிறார் .
- விருச்சிக ராசிக்காரர்கள் அம்பாள் கோயிலின் பின்புறத்தில் உள்ளே விருச்சிக மரத்தை வணங்கி செல்கின்றனர் .
- இங்குள்ள தட்சணாமூர்த்தி தலைக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார் . இவர் தட்சணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய ஞானத்தை பெற்று குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆனார் . ஆதலால் குருவின் குருவாக மதிக்கப்படுகிறார் .
தல வரலாறு :
சுந்தரர் இக்கோயிலுக்கு வரும் போது தெருவில் எதிர் எதிர் உள்ள இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் பையனுக்கு பூணல் கல்யாணமும் மற்றொரு வீட்டில் பெற்றோர்கள் கவலையுடனும் இருந்தனர் ,இதை கண்ட சுந்தரர் அவர்களிடம் கேட்டபோது தங்களுக்கு ஒரு குழந்தை இருந்ததாகவும் அவனுக்கு நன்கு வயது இருக்கும் போது ஏரியில் குளிக்க சென்றபோது முதலை இழுத்து சென்றுவிட்டதாகவும் அவனுக்கு இப்பொது 7 வயது ஆகும் அவன் இருந்தால் அவனுக்கும் பூணல் கல்யாணம் நடந்திருக்கும் என்று கூறினர். சுந்தரர் இக்கோயிலின் வெளியே இருந்து இறைவனை நினைத்து மனம் உருகி பாடினார் , அப்போது இறைவனின் அருளால் முதலையின் வயிற்றில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விழுங்கிய பையன் 7 வயது பையனாக வளர்ந்து வெளியே வந்தான் . இந்த நிகழிச்சியை ஒரு விழாவாக இக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று 3 நாட்கள் உற்சவமாக கொண்டாடுகிறார்கள் .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-avinashiappar-lingeswarar-temple.html
செல்லும் வழி மற்றும் அருகில் உள்ள கோயில்கள்
சேலம் – கோவை சாலையில் கோவைக்கு 20 km முன்பாக அவிநாசி பழைய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது.
இத்தலத்தின் அருகில் திருப்பூர் சாலையில் 6 km தொலைவில் திருமுருகன் பூண்டி பாடல் பெற்ற தலம் உள்ளது . மற்றும் அவிநாசியிலிருந்து 6 km தொலைவில் சேவூர் என்ற ஊரில் வைப்பு தலம் உள்ளது .
Location: