ஸ்ரீ கரி வரத ராஜ பெருமாள் கோயில் – நெற்குன்றம் (சென்னை )
சென்னையில் உள்ள பழமையான மற்றும் அதிகம் அறியப்படாத கோயில்களில் இக்கோயிலும் ஒன்று . நான் அதிகமாக இந்த இடம் வழியாக சென்று வந்திருக்கிறேன் ஆனால் அப்போது எனக்கு இக்கோயிலை பற்றி தெரியவில்லை , இப்போது கோயில்களை பற்றி எழுதத்தொடங்கியபோது வலைத்தளங்களின் வாயிலாக இக்கோயிலைப்பற்றி அறிந்து கொண்டு பார்க்க சென்றேன் முதலில் இக்கோயிலை கண்டுபிடிக்க சிறிது கஷ்டப்பட்டேன் கண்டவுடன் இந்த இடத்திலா உள்ளது என்று வியப்புற்றேன் .
மிக அழகான கோயில் 1000 வருடங்களுக்கு மேற்பட்ட கோயில் ஆனால் இவ்வித ஆடம்பரங்களோ உயர்ந்த கோபுரங்களோ இல்லாமல் மிக சிறிய மற்றும் தற்போது பலர் அன்பர்களின் உதவியோடு சற்று மேன்பட்டிருக்கும் கோயில்.
உள்ளே நுழைந்தவுடன் ஆஞ்சநேயர் சன்னதியை காணலாம் , மூலவர் சன்னதி முன் shed அமைக்கப்பட்டுள்ளது . மூலவர் கண்ணாடி அறையின் உள்ள ஸ்ரீ தேவி பூதேவியுடன் காட்சிதருகிறார் . நாம் கண்ணாடி அறையின் உள்ளே சென்றவுடன் பட்டாச்சாரியார் கதவை சாற்றிவிட்டு தீபம் ஏற்றும் போது மின்சார விளக்குகளை போடுகிறார் , அப்போது பெருமாளின் திறந்த கண்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது . இவ் பெருமாளின் சிறப்பே அவர் பக்த்தர்களுக்கு தன் இருக்கண்களையும் திறந்து அவர்களின் குறைகளை கேட்டு நிவிர்த்தி செய்வதுதான் .
கோயிலின் வரலாறு :
கரி என்றல் யானை , இவ் கோயிலின் புஷ்பகரணியிலிருந்து தினமும் தாமரை மலரை எடுத்து இந்த விஷ்ணு பக்த யானை பூஜை செய்துவந்தது . அவ்வாறு எடுத்து பூஜை செய்கையில் ஒரு நாள் குளத்தில் இருந்து பூவை பரித்தபோது பாரதராஜ் முனிவரின் சாபத்தை பெற்ற ஒரு முதலை இவ் யானை தீண்டினால் மட்டுமே சாப விமோச்சனம் பெறமுடியும் என்ற காரணத்தால் அவ் யானையின் பாதத்தை பற்றியது , யானையின் தும்பிக்கையில் புஷ்பமும் கால் முதலையின் வாயில் உள்ளதாலும் “ஆதிமூலமே ” என்று குரல் எழுப்பியது கூப்பிட குரலுக்கு வந்து நிற்கும் பெருமாள் இவர்களின் நிலையை கண்டு இவர்களுக்கும் விமோச்சம் கிட்ட தன் சக்கரத்ஆழ்வாரை பிரயோகனம் பண்ணினார் , சக்கரத்தாழ்வார் இருவரையும் கரையில் கிடத்தினார் , யானை கரைக்கு வந்ததும் பலம் கிட்டியதும் முதலையை உதைத்தது உடனே முதலைக்கு சாப விமாரோச்சனம் கிட்டியது ,பெருமாள் யானைக்கு விமோச்சம் தந்து , பெருமாள் இருவருக்கும் மோட்சத்தை கொடுத்தார் .
அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்
கோயம்பேடு மார்க்கெட் வழியாக நாராயணா பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள சாலையில் சென்றால் பல்லவன் நகர் வரும் வெங்காய மண்டி பேருந்து நிலையத்திற்கு திரும்பும் சாலையின் முன் வலது புறத்தில் சிறிய தெருவின் கடைசியாக உள்ளது . மற்றொரு வழி வெங்காய மண்டி பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள அம்மா உணவகத்தின் அருகில் உள்ள சாலையில் சென்று கடைசியாக இடது புறம் திரும்பி முதல் சிறிய தெரு வரும் அதில் கடைசியாக இக்கோயில் உள்ளது .
பட்டாச்சாரியார் தொலைபேசி : 9962811792
கோயில் காலை 8 .30 முதல் 12 .30 வரை
மாலை 5 .30 முதல் 8 .30 வரை
கண்டிப்பாக நேரும் கிடைக்கும் போது சென்று பெருமாளை தரிசித்து உங்களால் முடிந்த எண்ணெய், நெய் மற்றும் பண உதவிகளை செய்து இறைவனின் அருளை பெறுக .