ஸ்ரீ திருமுருகநாதர் கோயில் – திருமுருகன் பூண்டி
மூலவர் : திருமுருகன் நாதர் ,ஆவுடைநாயகர்
அம்பாள் : ஆவுடைநாயகி
தீர்த்தம் : ஷண்முக தீர்த்தம் , ஞானதீர்த்தம்,பிரம்மதீர்த்தம்
ஊர் : திருமுருகன் பூண்டி
மாவட்டம் : திருப்பூர்
- கொங்கு நாட்டு தேவார பாடல் பெற்ற தலங்களில் 2 வது தலமாகும் . 274 பாடல் பெற்ற சிவத்தலங்களில் 206 வது தலமாகும் .
- முருகன் பெயரிலேயே அமைந்திருக்கம் தலம். 7 நூற்றாண்டை சார்ந்தது என்று கூறப்படுகிறது .
- முருக பெருமான் சூரனை அழித்து அந்த பிரமஹத்தி தோஷத்திலிருந்து விடுபட இங்கு முருகனே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கினார் . அதனாலே கோயிலின் கருவறையின் உள்ளேயே தனி சன்னதியில் உள்ளார் . இவ் சிவபெருமானை வணங்குவதெற்க்கு முன்பு தன் வேலை கோயிலுக்கு முன்பாக நிறுத்தினான் அதென்ன அருகிலேயே மயிலையும் நிறுத்தினார் . ஆதலால் இங்குள்ள முருகனுக்கு கையில் வேலும் அருகில் மயிலும் இல்லை .
- சுந்தரர் சேரமான் தந்த பெரும் பொருள்களோடு இவ்வழியே செல்லும் போது சிவபெருமான் இவருடைய சிறந்த தமிழை கேட்க வேடர் வேடம் பூண்டு அவைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டார் . இதனால் மனம் வேதனை உற்ற அவர் விநாயகரிடம் முறையிட்டார் , விநாயகர் தன் தந்தையின் திருவிளையாடல் இது என்று தெரிந்துகொண்டு சுந்தரரிடம் இக்கோயிலுக்கு வந்து பாட சொன்னார் அவரும் அவ்வண்ணமே இக்கோயிலுக்கு வந்து பெருமானை பாடினார் ,
இறைவன் பாடலில் இன்புற்று தான் கைப்பற்றிய எல்லா பொன் பொருள்களையும் திரும்பி கொடுத்து ஆசிபுரிந்தார் . - இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி இவரை வணங்கினால் சித்தபிரமை ,பாவங்கள் ஆகியவை தீரும் என்ற நம்பிக்கை உள்ளது சண்முகதீர்த்ததில் நீராடி பிராத்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது .
ஸ்ரீ மாதவனேஸ்வரர் திருக்கோயில் (கேது பரிகார தலம் )
- திருமுருகநாதர் கோயிலின் அருகிலேயே இக்கோயில் அமைந்துள்ளது தாயார் மங்களாம்பிகை .
- கேது பகவான் ஒரு முனிவரின் சாபத்திலிருந்து விடுபட இத்தலத்திற்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி மத்தவனேஸ்வரை வணங்கி சாபம் நிவர்தியானார் . ஆகவே இங்கு வந்து வணங்கும் பக்த்தர்கள் கேது தோஷத்திலிருந்து விடுபடுகின்றனர் .
- சிவனின் பிரம்மதாண்டவம் இத்தலத்தில்தான் நடந்தது என்று கூறுகிறார்கள் .
- இவூரில் ஸ்வாமி சிற்பங்கள் , சிலைகள் செய்துகொடுக்கிறார்கள் .
அமைவிடம் மற்றும் செல்லும் வழி
அவிநாசியிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 5 km தொலைவில் உள்ளது . திருப்பூர் ரயில்நிலையத்திலிருந்து 15 km தொலைவில் உள்ளது .
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-thirumuruganatharswamy-temple.html
அருகில் உள்ள கோயில்கள்
1 . லிங்கேஸ்வரர் கோயில் -அவிநாசி
2 . வாலீஸ்வரர் கோயில் – சேவூர்
Locations: