ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் – தென்காசி
இறைவன் : காசி விஸ்வநாதர்
அம்பாள் : உலகம்மன்
தல விருச்சகம் : செண்பகமரம்
தல தீர்த்தம் : காசி தீர்த்தம்
ஊர் : தென்காசி
மாவட்டம் : திருநெல்வேலி
- தமிழ்நாட்டில் உள்ள உயரமான மற்றும் சிறப்பும் கலைநயமும் மிக்க கோபுரங்களில் இக்கோயில் கோபுரமும் ஒன்று . சுமார் 180 உயரமும் 800 க்கும் அதிகமான சிற்பங்களும் கொண்ட உயர்ந்த கோபுரமாகும் .
- பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பித்து குலசேகர பாண்டியனால் கட்டிமுடிக்கப்பட்டது . பாளையத்துக்காரர்களும்,ஆங்கிலயேர்களாலும் தாக்குதலால் சிதலமடிந்த இந்த கோபுரம் 1960 ஆண்டு மீண்டும் புதுப்பித்து குடமுழக்கு நடத்தப்பட்டது .
- இக்கோயின் கோபுரத்தின் வாயிலை நாம் கடக்கும் போது பொதிகை மலை காற்று ஆரியங்காவு கணவாய் வழியாக மேற்கில் இருந்து கிழக்காக நம்மை வரவேற்கும் விதமாக மிக குளிர்ந்த காற்று நம்மை வருடி செல்லும் இதை உணரும்போது நம் உடல் மட்டும் அல்ல நம் மனம் கூட குளிர்ந்து ஒரு இன்பத்தை மற்றும் அமைதியை உணரலாம் .
- பராக்கிரம பாண்டியன் இறைவனை காண ஒவ்வொரு முறையும் காசிக்கு செல்வது வழக்கம் ,ஒரு நாள் அவர் கனவில் இறைவன் தோன்றி இந்த தென்பகுதியிலேயே தனக்கு கோயில் காட்டுமாறு கூறினார் மற்றும் எறும்பு எந்த இடத்தில சென்று நிற்கிறதோ அங்கே காட்டுமாறு கூறினார் அவ்வாறே ஒரு எறும்பு ஊர்ந்து சென்று இந்த செண்பக காட்டில் நின்றது அங்கே சுயம்புவாக இறைவன் இருந்தார் உடனே அரசன் அங்கேயே கோயிலை எழுப்பினான் .
- காசிக்கு செல்லமுடியாதவ்ர்கள் இக்கோயிலுக்கு சென்று தன் பிராத்தனைகளை செய்துகொள்கின்றனர் .
- இக்கோயில் சிற்பங்கள் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றது .இதை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது.
அமைவிடம் :
திருநெல்வேலியில் இருந்து 50 km தொலைவில் உள்ளது. அருகில் குற்றாலம் குற்றாலீஸ்வரர் கோயில் உள்ளது .
Location: