Sri Ulagalantha Perumal Temple- Thirukovilur

ஸ்ரீ உலகளந்த பெருமாள் – திருக்கோயிலூர்

Sri Ulagalantha perumal- Thirukoilur

இறைவன் : திருவிக்ரமர்

தாயார் : புஷ்பவல்லி தாயார்

தல விருச்சகம் : புண்ணை மரம்

தல தீர்த்தம் : கிருஷ்ணா தீர்த்தம் , சக்ர தீர்த்தம் ,பெண்ணையாறு

மங்களாசனம் : பொய்கையாழ்வார் ,பூதத்தாழ்வார் ,பேய் ஆழ்வார்

விமானம்: ஸ்ரீ சக்கர விமானம்

கோலம் : நின்ற கோலம்

ஊர் : திருக்கோயிலூர்

மாவட்டம் : விழுப்புரம் ,தமிழ்நாடு

  • 108 திவ்யதேசங்களில் 43 வது திவ்ய தேசமாகும் . நடுநாட்டு திவ்யதேசத்தை சேர்ந்தது
  • பொய்கையாழ்வார் ,பூதத்தாழ்வார் ,பேய் ஆழ்வார் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம்.
  • பொய்கையாழ்வார் ,பூதத்தாழ்வார் ,பேய் ஆழ்வார் ஆகிய மூவரும் முக்தி முடிந்த திவ்ய தலம் .
  • நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலாக பாடப்பெற்ற தலம் .
  • மிருகண்டு முனிவர் இறைவனின் திருவிக்ரம கோலத்தை காண ஆசைகொண்டு தன் மனைவியுடன் பெண்ணையாற்றின் குடில் அமைத்து தவம் செய்து வந்தார் அவரின் தவத்திற்கு இறைவன் மனம் இறங்கி திருவிக்ரமாக காட்சி தந்தார் .
  • இறைவன் அத்தி மரத்தினால் ஆனா பெரும் திருமேனி .இடது கரத்தில் இருக்க வேண்டிய சங்கு இங்கு வலது கரத்தில் காணப்படுகிறது . இறைவனை மஹாபலி சக்ரவத்தி ,மிருகண்டு முனிவர் அவரது மனைவி ,சுக்ராச்சாரியார் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோர்கள் சூழ்ந்துள்ளார்கள் .
  • காஞ்சிபுரத்தில் வீற்றியிருக்கும் உலகளந்த பெருமாள் செதுக்கிய சிற்பம் ஆனால் இங்கே அழகிய திருவுருவமாக காட்சிதருகிறார் .
  • க்ஷேத்ர பாலகராக வேணுகோபாலன் பாமா ருக்மணியோடு காட்சிதருகிறார் . இவர் சாலிக்ராம கல்லினால் ஆனவர் ,இவரை வணங்கிய பின்னரே மூலவரை தரிசிக்கவேண்டும் .
  • லட்சுமி நாராயணர் ,லட்சுமி வராஹர் ,லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தனி தனியாக உள்ளன .
  • விஷ்ணு துர்க்கை பெருமாளின் சன்னதிக்கு அருகிலேயே காட்சிதருகிறார் . இது இங்கு மட்டுமே காணக்கூடிய ஒன்றாகும்

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-ulagalantha-perumal-temple.html

செல்லும் வழி
விழுப்புரம் இருந்து 40 km தொலைவில் உள்ளது . அருகில் வீரட்டேஸ்வர் பாடல் பெற்ற தலம் உள்ளது . மற்றும் அந்திலி நரசிம்மர் கோயில் மிக அருகில் உள்ளது. மற்றும் ஆதி திருவரங்கம் கோயில் 16 km தொலைவில் உள்ளது .

Location:

Leave a Reply