ஏரி காத்த ராமர் சன்னதி – திருநின்றவூர்
- திருநின்றவூரில் பெருமாள் கோவிலின் பின்புறம் ஏரியின் மேல் அமைந்துள்ளது . ஏரி கரையில் ராமர் கோயில் உள்ள தலங்கள் மதுராந்தகம் ,மேற்கு மாம்பழம் ,நுங்கம்பாக்கம் மற்றும் திருநின்றவூர் ஆகிய இடங்களில் இருந்தன காலத்தின் வளர்ச்சியில் இப்போது மதுராந்தகம் மற்றும் இவ் ஊரில் மட்டுமே உள்ளன , கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கவேண்டிய தலம் ஆகும் ,இக்கோயின் அருகிலேயே பக்தவச்சல பெருமாள் திவ்யா தேசம் மற்றும் இருதேஸ்வரர் சிவன் கோயில் பூசலார் நாயன்மார் கட்டிய கோயில் உள்ளது .
- முன்னோரு காலத்தில் திருநின்றவூர் ஏரி நீரால் நிரம்பி அடிக்கடி ஏரி உடைந்து இந்த ஊரை மூழ்க செய்யும் ,ஆதலால் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி ராமரை வேண்டினர் ராமர் தனக்கு ஏரி கரையில் கோயில் அமைக்குமாறு கூறினார் ,அவர்களும் அவ்வாறே செய்ய ஏரி காப்பாற்றப்பட்டது .
- ஏரியின் கரையில் மிக ரம்மியமாக காட்சி அளிக்கிறது இந்த கோயில்
- உள்ள நுழைந்தவுடன் இடது பக்கம் நர்த்தனம் ஆடும் கிருஷ்ணன் சிலை உள்ளது . வலதுபுரத்தில் ஆஞ்சநேயர் தன் இரு தோள்களின் மேல் ராமரையும் ,லக்ஷ்மணரையும் சுமந்து காலுக்கு அடியில் லங்கிணியை மிதித்தும் காட்சியளிக்கிறார் .அவரது பின்புறத்தில் இருவருடைய பாத தரிசனம் செய்யலாம்.
- மூலசானத்தில் ராமர் ,லக்ஷ்மணர் மற்றும் சீதை மிக மிக உயரமாக காட்சி அளிக்கின்றனர் .
- கோவிலின் பின்புறம் ஏரி மிக பெரியதாகவும் மிக ரம்மியமாகவும் காட்சி தருகின்றது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 8 .30 – 11 .30 , மாலை 5 .30 – 7 .00
செல்லும் வழி
சென்னை அரக்கோணம் செல்லும் ரயில்களில் சென்றால் திருநின்றவூர் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் இக்கோயிலுக்கு செல்லலாம் மற்றும் பூந்தமல்லியிலிருந்து திருவள்ளுவர் செல்லும் பாதையில் indo – japan lights கம்பனியின் வலது புறம் திரும்பினாள் 5 km தொலைவில் வரும் .பேருந்து வசதிகள் கோயம்பேடு மற்றும் பூந்தமல்லியில் இருந்து உள்ளது .
Location:
ஹரே ராமா ஹரே ராமா ,ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா