ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் – நுங்கம்பாக்கம்
இறைவன் : அகத்தீஸ்வரர்
தாயார் : ஆனந்தவல்லி
தல விருச்சகம் : வன்னி மரம்
ஊர் : நுங்கம்பாக்கம்
மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு
- பொம்மராஜன் என்ற வைணவ குறுநில மன்னன் தொண்டை மண்டலத்தில் உள்ள பொம்மராஜபுரம் என்ற சிற்றூரை ஆண்டுவந்தான் அவனுக்கு தீராத சூளை நோய் ஏற்பட்டது அதனால் தன் சிரமத்தை குறைப்பதிற்காக தன் அகத்தினுள் பாற்கடல் வாசனை மனமுருகி வேண்டிக்கொண்டான் அப்போது மன்னன் கனவில் திருமால் தோன்றி இவ்வூரில் உள்ள குளத்தில் நீராடி இத்தலத்தில் அமைந்துள்ள ஈஸ்வரனையும், தாயாரையும் வணங்கினால் சூளை நோயிலிருந்து விடுபடலாம் என்று கூறி மறைந்தார் ,அவ்வாறே மன்னன் செய்து முடிக்க அவர் நோயிலிருந்து முழுவதும் குணம் அடைந்தார் .அரசன் அகத்தில் இருந்து ஈஸ்வரனை வழிபட்டதால் அகத்து ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டார் நாளடைவில் இப்பெயர் மருவி அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . பொம்ராஜபுரம் என்ற ஊர் இப்பொழுது நுங்கம்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
- திருவானைக்காவல் அடுத்தபடியாக இக்கோயிலில் அன்னை அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுவது சிறப்பு .
- சுக்ராச்சாரியாருக்கு சிவபெருமான் முதலில் காட்சி கொடுக்க விட்டு கொடுத்த அம்பாள் தனக்கு உரிய வெள்ளிக்கிழமையை அம்பிகைக்கு உரியதாக ஏற்கவேண்டும் அன்று தன்னை பூஜிப்பவர்களுக்கு சுக்ரதோஷம் வரக்கூடாது என்று சுக்கிரனுடன் கேட்டுக்கொண்டார் சுக்கிரனும் அதை ஏற்றுக்கொண்டார் . சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை ,பல கோயில்களில் வெள்ளிக்கிழமையில் பூஜைகள் நடந்தாலும் இக்கோயில் அம்மனுக்கு சுக்ரவாரம் பூஜை சிறப்பு வாய்ந்தது அன்று அம்மனை பெண்கள் பல்லக்கில் தூக்கி வருவது சிறப்பாகவும் ,ஆதலால் இவ் தாயாருக்கு சுக்ரவார அம்மன் என்ற பெயர் உண்டு .
- இக்கோயில் சுமார் 400 வருடங்கள் முந்தையது என்று கருதப்படுகிறது
- இக்கோயின் திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் கிழக்கு வாசலில் அமையப்பெற்ற திருகுளமாகும். இது ஒரு அபூர்வ அமைப்பாகும் .
- கல்வி ,உடல்நலம் , திருமணம் ஆகியவற்றைக்கு வேண்டுதலுக்கு உரிய தலம்.
Photo :
https://alayamtrails.blogspot.com/2021/05/sri-agatheeswarar-temple-nungambakkam.html
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 -10 மணி வரை , மாலை 5 -8 மணி வரை
செல்லும் வழி
நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள தெருவில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
அருகில் உள்ள கோயில்கள் :
1 . சுயம்பு வடிவ அசலாத்தம்மன் கோயில்
2 . பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
Location :