ஸ்ரீ கமடேஸ்வரர்- காளிகாம்பாள் கோயில் -சென்னை
இறைவன் : கமடேஸ்வரர்
தாயார் : காளிகாம்பாள்
தல தீர்த்தம் : கடல் நீர்
தல விருச்சகம் : மாமரம்
ஊர் : பாரிமுனை ,சென்னை
மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு
- சென்னையில் உள்ள பழமையான சக்திவாய்ந்த கோயில்களில் ஒன்று அக்காலத்தில் இக்கோயில் கடற்கரையின் அருகில் மீனவ கிராமத்தில் சிறிய கொட்டகையில் அமைந்திருந்தது ,இவ் மக்கள் அம்பாளுக்கு செந்தூரம் சாத்தி வணங்கிவந்தனர் ஆதலால் சென்னியம்மன் என்ற ஒரு பெயரும் உன்டு.
- இக்கோயிலை சத்ரபதி சிவாஜி அவர்கள் 1677 ஆம் ஆண்டு அக்டோபர் 3 தேதி அவர் அம்பாளை தரிசித்ததாக கோயில் குறிப்பில் உள்ளது .
- மஹாகவி பாரதியார் இவ் பகுதியில் தங்கியிருக்கும் போது தினமும் இவ் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசனம் செய்தார் .அவர் பாடலில் வரும் யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடல் இவ் காளிகாம்பாளையே குறிக்கும் .
- இவ் அம்பாளை வேண்டுபவர்களுக்கு திருமண தடை நீங்கும் என்றும் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் அபிசேகம் செய்கிறார்கள் மற்றும் மஞ்சளை அம்பாளின் காலடியில் வைத்து எடுத்து தினமும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் கலந்து குடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள் .
- வெள்ளிக்கிழமைகள் மற்றும் ராகு காலங்களில் இக்கோயிலில் பக்தர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள் .
செல்லும் வழி :
சென்னை பாரிஸ் கார்னர் அருகில் உள்ள தம்பு `செட்டி தெருவில் உள்ளது .
Location: