Sri Kothanda ramasamy Temple- Chengalpet

ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் – செங்கல்பட்டு

Sri kothanda Ramasamy Temple-Changalpet

இறைவன் : கோதண்டராமர் , வரதர்

தாயார் : சீதாதேவி , பெருந்தேவித்தாயார்

ஊர் : செங்கல்பட்டு

மாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு

  • செங்கல்பட்டில் உள்ள மிக புராதனமான கோயில் இது . பெருமாள் கோயிலாக முன்னர் இருந்தது வரதர் மற்றும் பெருந்தேவி தாயார் ஆகியவர்களுக்கு தனி சன்னதி உள்ளது .
  • கோதண்டராமசாமி என்ற பெயரில் அழைத்தாலும் இங்கு கற்பகிரஹத்தில் பகவான் ‘ஸ்ரீ பட்டாபிராமன் “ ஆவார். இவர் வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார் .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சேனையர் ஆகியோர்கள் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் ,இக்காட்சியை காண்பதற்கு நமக்கு கோடி கண்கள் வேண்டும் .
  • செங்கல்பட்டில் பெருமாள் கோயில் என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும் , இங்குள்ள வரதர் சன்னதி கி.பி 1041 ஆண்டு கட்டப்பட்டது .
  • பட்டாபிராமர் செங்கல்பட்டு கோட்டையில் வீற்றியிருந்தார் ,அப்போது 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பில் இக்கோயில் தகர்க்கப்பட்டது .ஸ்ரீ திம்ம ராஜ ஜமீன்தார் அவர்களால் கி .பி 1768 ஆண்டு வரதர் கோயிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நிறுவப்பட்டது .இவருடைய மகன் செங்கல்வராயன் என்பவராவார் இவர் பெயராலேயே இவூர் செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது
  • இக்கோயிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது காலுக்கு கீழ் சனிபகவானுடன் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும் ,சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக்கொள்ளும் இடம் ஆகும் .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/05/sri-kothanda-ramasamy-temple-chengalpet.html

செல்லும் வழி:
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது .
திறந்திருக்கும் நேரம் : காலை 7 .30 -10 .30 , மாலை 5 .30 -8 .30

Location :


Leave a Reply