அன்புடையீர் வணக்கம்
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக கொள்வேனே
– திருமூலர்
எனது பயணங்களில் நான் பெரும்பாலும் பழைய மற்றும் மிக சொற்ப அளவில் தெரிந்துள்ள கோவில்களுக்கு செல்வது எனது பழக்கமாகும் . அவ்வாறு நான் காணும் கோயில்களில் நமது பண்பாடு ,கலாச்சாரம் ஆகியவற்றை நமது முன்னோர்களும் , அரசர்களும் எவ்வாறு அவற்றை பின்பற்றினர் என்பதை கண்டு எனது மனம் பெரும் ஆச்சரியம் கொண்டது..
இறைவனின் எண்ணற்ற அற்புதங்கள் நடந்தேறிய இடம் நம் பாரத தேசம் குறிப்பாக நம் தமிழ்நாட்டில் எண்ணிலடங்காத கோயில்கள் உள்ளன அவை நால்வர்களால் பாடல் பெற்ற தேவார பாடல் பெற்ற தலம், ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பெற்ற திவ்யதேசம் மற்றும் மிக பழமை வாய்ந்த கோயில்கள் சித்தர்கள் மற்றும் ரிஷிகள் வாழ்ந்த சிறப்பு மிக்க இடம் . ஆனால் அவைகள் நம் காலசூழ்நிலையில் பல சிதைந்தும் அழிந்தும் வருகின்றன .
இவைகளை வரும் காலங்களில் யாவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் நான் இந்த முயற்சி எடுத்துளேன் . பெரும்பாலும் இணையங்களில் நம் கோயில்களை பற்றி தேடும் போது அவைகள் ஆங்கிலத்திலேயே உள்ளன . அழகிய தமிழில் இவைகளை தரலாம் என்ற எண்ணத்தில் கோயில்களின் இடம் ,வழி,சிறப்புக்கள் அவைகளின் இன்றைய நிலைமை பற்றி எனது இந்த www.indiatempletour.com இணயத்தளத்தில் தரலாம் என்றுள்ளேன் .
நீங்கள் எல்லோரும் இதை படித்து அழிந்து வரும் கோயில்களை கண்டு ஒரு வேலை பூஜைகளும் மற்றும் தீபம் ஏற்ற எண்ணெய் முதலியவைகளை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
I created this website for explore the ancient temples,unknown temples and lesser known temples which I has been visited. And India temple tour website explore 274 thevara padal petra thalam (thevara hymns sthalam) , 108 divya desam , Murugan temples including thirupugazh temples, vinayagar temples ,Narasimha temples,Sri ramar temples,51 sakthi peedam,panja bootha sthalam,panja sabaigal,64 siva avathar,rishi,siddhar and heritage places . And we are guiding temples routes ,map,timings and temple history also.