அட்சயதிரிதியை சிறப்புகளும் பூஜை முறைகளும்
திருமாலின் மார்பில் திருமகள் இடம் பிடித்த ,முதல் யுகமான கிருதாயுகத்தில் பிரம்மா உலகை படைத்த ,லட்சுமி குபேரர் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்ற நாள் இந்த சிறப்புமிக்க அட்சய திருதியை .
இந்த நாளில் தான் பகவான் கிருஷ்ணர் தன நண்பர் குசேலனுக்கு ஒரு பிடி அவல் கொடுத்து அவருடைய வறுமையை போக்கி செல்வதில் திளைக்க செய்தார் . ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி வறுமையில் வாடிய அயாசகன் என்னும் ஏழையின் வீட்டின் பெண்ணிற்கு தங்க நெல்லிக்கனிகளை மழையாய் பொழியவைத்தார்.அதுமட்டும் அல்லாமல் திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றதும் ,பரசுராமர் ,பலராமர் ஆகியோர் அவதரித்ததும் இவ் நாளே . இந்த அட்சய திருதியை நாளன்று குபேரனை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும் .உணவுகள் தடையின்றி கிடைக்கும்
பூஜை செய்யும் முறை:
அட்சயதிருதியை அன்று பருப்பு ,உப்பு மற்றும் அரிசி வாங்கிவந்து குபேரர் பூஜை செய்தால் நம் வறுமைகள் ,கடன்கள் நீங்கி சமூகத்தில் ஒரு கவுரமான வாழ்வு கிடைக்கும் .
மற்றும் நம்மால் முடிந்த தானம் பிறருக்கு செய்யவேண்டும் .ஏனனில் இவ் அட்சயதிருதியை தான திருவிழா என்று குறிப்பிடுகிறார்கள் .நம்மால் முடிந்த தான தர்மங்களை நாம் இந்நாளில் செய்தால் மஹாலக்ஷ்மி மனம் குளிர்வாள் .ஏழைகளுக்கு கோதுமை மாவு ,உணவு ,உடை ,கல்விக்கு உதவி என தர்மம் செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் .இவ் நன்னாளில் உணவை வீணாக்கவோ, பணத்தை கடனாகவோ பெறவோ கூடாது .
இந்த நன்னாளில் நாம் முன்னோர்களை நினைத்து வணங்குவதற்கு சிறந்த நாளாகும் .
திருச்சிற்றம்பலம்