சென்னையில் அஷ்டலிங்க தரிசனம்
நாம் பெரும்பாலும் அஷ்டலிங்கங்களை திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரை சுற்றி கிரி வலம் வரும் போது கண்டிருப்போம் .ஆனால் நம் சென்னை அருகில் திருவேற்காடு சுற்றி அஷ்டலிங்கங்களை கண்டிருக்கமாட்டோம் .இந்த அஷ்ட லிங்கங்களும், சுமார் 18 கிலோமீட்டர் எல்லைச் சுற்றுக்குள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த எட்டு லிங்கங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து விட முடியும்.இங்கு உள்ள அனைத்து லிங்கங்களும் 2000 வருடங்களுக்கு முற்பட்டது ,இவை அனைத்தையும் அகத்தியர் மாமுனிவர் நிறுவினார் . இவை அனைத்தையும் அபிநய சோழனால் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது .
ஒவ்வொரு திசையிலும் அத்திசைகளுக்குரிய திக்பாலகர்கள், அஷ்ட லிங்கங்களை அமைத்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாகவும் திருவேற்காடு புராணம் கூறுகிறது.பக்தர்கள் ‘சிவாலய ஓட்டம்’ என்ற முறையிலும், அஷ்டலிங்க தரிசன சேவை என்ற வகையிலும் பவுர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அஷ்ட லிங்கங்களை தரிசித்து பாசுரங்களை பாடி வணங்குகின்றனர். முதலில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சன்னிதியில் தொடங்கி ஈசான லிங்கத் திருமேனியான எட்டாவது லிங்கம் வரை தரிசனம் செய்வது மரபு.
அஷ்டலிங்கங்களும் அதன் பெருமைகளும் :
அஷ்டலிங்கங்களை ஒரே நாளில் கண்டு ரசித்தால் கர்மவினை அகலும் என்று சொல்வார்கள் .ஒவ்வரு ராசிகளுக்கும் ஒரு லிங்கம் உண்டு அந்த ராசிக்காரர்கள் அவருக்குரிய லிங்கங்களை வணங்கினால் அதற்குரிய நன்மைகளை பெறலாம் .
1. இந்திரலிங்கம் – ரிஷபம் ,துலாம்
2. அக்னி லிங்கம் – சிம்மம்
3. எமலிங்கம் – விருச்சகம்
4. நிருதிலிங்கம் – மேஷம்
5. வருணலிங்கம் -மகரம் ,கும்பம்
6. வாயுலிங்கம் -கடகம்
7. குபேரலிங்கம் -தனுசு ,மீனம்
8. ஈசான்யலிங்கம் – மிதுனம் ,கன்னி
1. இந்திரலிங்கம் -வள்ளிகொல்லைமேடு (கிழக்கு )
இது அஷ்டலிங்கங்களின் முதல் லிங்கம் ஆகும் .இங்கே ஞானாம்பிகை சமேத இந்திர இந்திரசேனாபதீஸ்வரர் (இந்திரலிங்கம்) உள்ளார் .திருவேற்காடு பேருந்து நிலையம் போகும் வழியில் பெட்ரோல் பங்க் எதிர் புறம் பிரதான சாலையிலேயே அமைந்து உள்ளது .இவரை வணங்கினால் வேலையில் முன்னற்றம் ,அரசு தொடர்பான காரியங்களை தங்கு தடையின்றி பெறலாம் .
Location :
2 . அக்னிலிங்கம் – நூம்பல் (தென் கிழக்கு )
இங்கு இறைவன் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் என்னும் நாமம் கொண்டு இறைவன் அருள்புரிகிறார். அகத்தியர் இமயமலையிலிருந்து நூம்பல் என்ற பூவை எடுத்து வந்து இங்கே இவரை நிறுவி வணங்கியதால் இந்த ஊருக்கு நூம்பல் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது . வேலப்பன்சாவடியிலேருந்து கஜலக்ஷ்மி மண்டபத்தின் அருகில் உள்ள சாலையில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது . இவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம் .
Location :
3. எமலிங்கம் – சென்னீர்குப்பம் (தெற்கு )
மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் இங்கே அமைந்துள்ளார் . குடியிருப்புகள் அதிகமாக அமைந்துள்ள இடத்தில் வீற்றியுள்ளார் . பூந்தமல்லி ஆவடி மெயின் ரோட்டில் பைபாஸ் சந்திக்கும் இடத்துக்கு முன்னதாக இந்த கோவில அமைந்துள்ளது .இவரை வணங்கினால் எம பயம் நீங்கும் மற்றும் ஏழரை சனி ,கண்ட சனி இவைகளிருந்து விடுபடலாம் .
Location :
4. நிருதிலிங்கம் – பாரிவாக்கம் (தென் மேற்கு )
பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் அமைந்த இடம் . பூந்தமல்லி பைபாஸ் நடுவில் ஒரு சிக்னல் வரும் அதற்கு இடப்புறம் பட்டாபிராம் போகும் வழியில் பரிவாக்கம் வரும் இடது புறத்தில் கோவிலின் வளைவு வரும் . இவரை வணங்கினால் கடன் தொல்லைகள் ,வார கடன் இவைகளில் இருந்து விடுபடலாம் .இந்த கோவில் குருக்கள் வரும் நேரத்தில் மட்டுமே திறந்து இருக்கும் . பெரும்பாலும் விசேஷ நாட்கள் அதாவது மஹாசிவராத்திரி ,பிரதோஷ காலங்களில் மட்டும் திறந்திருக்கும் .
Location :
5. வருணலிங்கம் – மேட்டுப்பாளையம் (மேற்கு )
பாலிவாக்கம் கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில் அம்பேத்கார் சிலைக்கு அடுத்து வரும் ரோட்டில் திரும்பினாள் ஏரி கரையை கடந்தால் இயற்கையான இடத்தில மிக சிறியதான டென்ட் கொட்டகை உள் மிக ரம்யமாக ஜலகெண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வர் வீற்றியிருக்கிறரர் . அவரை வணங்கினால் நோய்களிலிருந்து விடுபடலாம் மற்றும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . இந்த கோவிலை புதுப்பிக்கும் மற்றும் கோபுரம் அமைக்கும் பணி வரும் கார்த்திகை மாதத்தில் தொடங்க இருக்கிறார்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் .
Location :
6. வாயுலிங்கம் – பருத்திப்பட்டு (வட மேற்கு )
மேட்டுப்பாளையத்தில் இருந்து 3கி .மீ சென்றால் பருத்திப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் ஹனுமான் கோவில் அருகில் உள்ளே சென்றால் இந்த அழகிய கோவில் வரும் . இந்த விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரரை வணங்கினால் வாயு தொல்லை மற்றும் இழந்த சொத்துக்களையும் மீட்டு எடுக்கலாம்.
Location :
7. குபேரலிங்கம் – சுந்தரசோழபுரம் (வடக்கு )
பருத்திப்பட்டு வாயுலிங்க சன்னிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆவடி-திருவேற்காடு சாலையில், சுந்தரசோழபுரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவன், வேம்புநாயகி சமேத குபேரீஸ்வரர். கி.பி.11-ம் நூற்றாண்டில் சுந்தரசோழன் ஆட்சி செய்த காரணத்தால், இந்த ஊர் சுந்தர சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. வேம்புநாயகி சமேத குபேரலிங்கேஸ்வர் இவரை வணங்கினால் வாழ்வில் எல்லா வித பொருளாதார மற்றும் வெற்றிகளை பெறலாம் .
Location :
8. ஈசானலிங்கம் – சின்னகோலடி (வட கிழக்கு )
வேதபுரீஸ்வரர் சன்னிதிக்கு வடகிழக்கு திசையில், சுந்தர சோழபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவேற்காடு- கோலடி சாலை சுற்றுப்பாதையில் வலப்புறமாக இந்த கோவில் இருக்கிறது. பார்வதி தேவி சமேத ஈசான லிங்கம் இதுவாகும். பெரிய பாணலிங்க வடிவில் அருள் புரியும் ஈசானிய லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், காரியத் தடை, கண் திருஷ்டி நீங்கும்.
Location:
இவ்வாறு நீங்கள் சென்னையில் உள்ள மிக பழமையான அப்பன் ஈசன் வீற்றியிருக்கும் இந்த அஷ்ட லிங்கங்களை தரிசித்து ஈசனின் அருளை பெறுவோமாக !
Om Namasivaya!