Aippasi Annabishekam For Lord Shiva
ஐப்பசி மாதம் அன்னா அபிஷேகம் தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !! தாயின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு , உணவும் , மன உணர்வும் நெருங்கிய தொடர்புடையவை . நம் தாய் சமைத்து வழங்கும் உணவில் ஒருவித புரிதல் , அன்பு கலந்த உணர்வு ஏற்படும் , ஆதலால் தான் யாராவது நமக்கு உணவு கொடுத்தால் அதை நாம் சாப்பிட்டுவிட்டு இது என் அம்மா செய்தது போல் உள்ளது என்போம் . இதையே பட்டினத்தார் தன் பாட்டில் “ அன்னையோடு அறுசுவை உண்டிபோம் ” என்று அம்மாவை பற்றி கூறியுள்ளார் . இதன் அடிப்படையிலேயே நமக்கெல்லாம் தாயுமாகவும் , தந்தையாகவும் உள்ள ஈசனை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம் . “அன்னம் பரப்பிரம்மம் சொரூபம் “ என்று சொல்வர் . உணவை கடவுளாக நாம் கருதுவதால் அந்த உணவு நாம் கடவுளாக மதித்து வீணாக்காமல் இருக்க வேண்டும் . இந்த உலகத்தில் எல்லா உயிரினத்திற்கும் உணவு அளிப்பவன் எல்லாமும் ஆகி நிற்கும் ஈசன் , அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது . ஐப்பசி மாதம் சிறப்பு : இதை ஐப்பசி மாதம் நடத்த காரணம் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு . அன்றுதான் சந்திரன் தனது சாபம் நீங்கி 16 கலைகளுடன் முழு பொலிவுடன் தோன்றுகிறான் . அறிவியல் ரீதியாக பார்த்தால் அக்டோபர் மாதத்தில் தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது ஒளியையும் …
Read More Aippasi Annabishekam For Lord Shiva