ஸ்ரீ சதுர்புஜ கோதண்டராமர் கோயில் – பொன்பதர்கூடம்
இறைவன் : சதுர்புஜ கோதண்டராமர்
தீர்த்தம் : தேவ ராஜா புஸ்கரனி,சேஷ தீர்த்தம்
விமானம் : புஷ்பக விமானம்
ஊர் : பொன்பதர்கூடம்
மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு
- திவ்யதேசங்கள் தவிர்த்து பெருமாளின் அவதாரங்களின் புகழை பறைசாற்றும் பல பழமையான கோயில்கள் இவ் தேசத்தில் பல இடங்களில் உள்ளன ,அவ்வாறு உள்ள கோயில்கள் நம் சென்னையின் அருகில் அதிகமாக உள்ளன .அவற்றில் ஒன்று இக்கோயில் ஆகும் . நான் 13 .04 .19 அன்று இக்கோயிலுக்கு சென்று ஸ்வாமியை தரிசித்தேன் அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .
- இக்கோயில் உள்ள உற்சவர் மூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவர் ,கை விரல் நகங்கள் மற்றும் ரேகைகள் தெரியும்படி தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்கள் .
- மஹாவிஷ்ணுவாக ராமர் காட்சிதந்ததால் இவர் மார்பில் மஹாலக்ஷ்மி உள்ளார் .
- தர்மதிஷ்டர் என்ற மகான் ஒரு சாபத்தால் தோல் சம்பந்தமான நோய் ஏற்பட்டது ,அவர் இத் தலத்தின் ராமரை வண்ணங்கி தன் சாபத்தில் இருந்து விடுபட்டார் , இதனால் இக்கோயிலுக்கு தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இறைவனுக்கு துளசி மாலை அணிவித்து கற்கண்டு படைத்தது வேண்டிக்கொள்கிறார்கள்
- வரலாறு : ராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மஹாவிஷ்ணு தனது தாய் கௌசல்யா ,தான் பக்தன் ஆஞ்சநேயர் ,இலங்கையில் சீதாவுக்கு பரிவு காட்டிய திரிசடை மற்றும் ராவணன் மனைவி மண்டோதரி ஆகியோர்களுக்கு நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி மஹாவிஷ்ணு காட்சி தந்தார் ,அதுபோல் தனக்கும் கிடைக்கவேண்டும் என்று தேவராஜா மகரிஷி விரும்பினார் அவருடைய பக்திக்காக விஷ்ணு நான்கு கைகளுடன் சங்கு சக்கரத்துடன் காட்சி தந்தார் மஹரிஷியின் வேண்டுதலை ஏற்று இத்தலத்தில் அவர் இந்த காட்சியுடன் அருள் தருகிறார் , இதுபோல் ராமரின் சதுர்புஜ தரிசனம் வேறு எங்கும் காண்பது இயலாது இது ஒரு அபூர்வ தரிசனம் ஆகும் .
- சிறிய கிராமத்தில் மிக அழகாக இக்கோயில் அமைந்துள்ளது அருகில் பொன்விளைந்தக்களத்துர் கோயில் உள்ளது.
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/chathurbuja-kothandaramar-temple.html
கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -7 .00 வரை மாலை 5 .00 – 6 .00 வரை மட்டுமே திறந்திருக்கும் , முன்னதாகவே பட்டாச்சாரியாருக்கு தெரிவித்து சென்றால் அவர்கள் திறந்திருப்பார்கள் . தொலைபேசி எண்: 9444518810
செல்லும் வழி:
செங்கல்பட்டில் இருந்து 13 km தொலைவில் உள்ளது ,பேருந்து வசதிகள் உள்ளன ,ஆனால் ஆட்டோ அல்லது காரில் சென்றால் இக்கோயிஅருகில் உள்ள பல கோயில்களுக்கு விரைவாக சென்று வரலாம்.
Location :