காரடையான் நோன்பு
காரடையான் நோன்பு மாசியும் ,பங்குனியும் கூடும் நாளில் வரும் .கற்புக்கரசி சாவித்திரி தன் கணவனின் ஆயுள் முடிவதற்கு மூன்று நாட்கள் முன் கௌரி பூஜை செய்து கணவனின் ஆயுளை காப்பாற்றினாள். சாவித்திரி நோற்ற நோன்பை குறிக்கும் விதமாக நோன்பின் போது சுமங்களில்கள் அரிசி மாவும் ,வெல்லப்பாகும் சேர்த்து அடைதட்டி கற்களின் அடையாளமாக காராமணி பயிரை வேகா விட்டு கலந்து கௌரியை வேண்டி விரதமிருந்து நோன்பு கயிறை கட்டி கொண்டால் ,கணவனின் ஆயுள் அதிகரிக்கும் .
பூஜை செய்யும் முறை
குளித்து மடியாக காயவைத்த மடிசார் புடவையை கட்டிக்கொண்டு ,பூஜைக்கு தேவையான பட்சணங்கள் செய்துவிட்டு ,விளக்கு ஏற்றி கோலமிட்டு ,நுனி வாழை இலையில் கார் நெல் அரிசி மாவில் அடை செய்து தாம்பூலம் ,இரண்டு அடைகள்,வெண்ணை ,நோன்பு கயிறு வைத்து பூஜை செய்யவேண்டும் .ஒரு கயிறை அம்பாள் படத்துக்கு அணிவித்து மற்றொன்றை தான் அணியவேண்டும் .மூத்த சுமங்கலியார் இளையவர்களுக்கு கட்டி விடுவது மரபு .கன்னி பெண்கள் இவ் நோன்பு இருந்தால் விரைவில் திருமணம் நடக்கும்
“உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் படைத்தேன்.ஒருக்காலும் என் கணவன் பிரியாதிருக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே மணமான பெண்கள் நோன்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டும் .