ஸ்ரீ க்ஷீரா ராமலிங்கேஸ்வரர் கோயில் – பால கொல்ல
இறைவன் : க்ஷீரா ராமலிங்கேஸ்வரர்
தாயார் : பார்வதி தேவி
தீர்த்தம் : க்ஷீரா தீர்த்தம்
ஊர் :பால கொல்ல
மாவட்டம் : மேற்கு கோதாவரி
மாநிலம் : ஆந்திர பிரதேசம்
- பஞ்சராம ஷேத்திரத்தில் இக்கோயிலும் ஒன்றாகும் .இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்தார் .
- ஒன்பது நிலைகளை கொண்ட 120 அடி ராஜகோபுரம் இவ்வூரின் எங்கிருந்து பார்த்தலாம் தெரியும் படி மிக ஒய்யாரமாக காட்சிதருகிறது . இக்கோபுரத்தை ரெட்டி ராஜ்யகாலத்தில் ஏப்ரல் 14 ,1777 ஆண்டில் திறந்தார்கள் .
- இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் சாளுக்கிய பீமா ஆட்சியின் போது கட்டப்பட்டது . இக்கோயின் பிரகாரங்கள் 10 ஆம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டதாகும் . இக்கோயில் மேடம் 72 தூண்களால் ஆனது .
- இங்கே பார்வதி சமேத பரமேஸ்வரரும் ,லட்சுமி சமேத ஜனார்தனரும் ,சரஸ்வதி சமேத பிரம்மதேவனும் தனி சன்னதிகளாக உள்ளார்கள் . அதுமட்டும் இல்லாமல் ஆஞ்சநேயர் ,சுப்பிரமணியர் ,வீரபத்திரர் ,நடராஜர் ஆகியோர்களுக்கு சன்னதிகள் உள்ளன .
- சபா மண்டபத்தில் உள்ள பூநஹோர கணபதி ரொம்ப விசேஷமானவர் இவரை வழிபட்டால் பூண விமுக்தி கிடைக்கும் ,இவரையும் நந்தி தேவரையும் சேர்த்து க்ஷீரா ராமலிங்கேஸ்வரரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம் .
- ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால் வண்ண சிவலிங்கம் இரண்டரை அடி உயரத்தில் நம்மை பக்தியில் சிலிர்க்கவைக்கிறது . பஞ்சராம ஷேத்திரத்தில் தாரகாசுரன் கழுத்தில் இருந்து விழுந்த அமிர்தலிங்கத்தின் இங்கே விழுந்த பாகம் தான் சிரசு பாகம் என்று கூறப்படுகிறது ஆதலால் இக்கோயிலை பெருமைமிக்க கோயிலாக கருதுகிறார்கள் .இவரை வழிபட்டால் வறுமை நீங்கும் என்றும் இவூரில் தங்கி வழிபட்டால் வாரணாசிக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது .
- வரலாறு : கௌஷிக் மகரிஷி மகன் உபமன்யு ஈசனிடம் விழாக்காலங்களில் தங்களுடைய அபிஷேகத்திற்கு எவ்வித தடையுமின்றி பால் கிடைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ,இறைவன் அவருடைய வேண்டுகோளை ஏற்று இங்குள்ள க்ஷீர புஷ்காரனி முழுவதும் பாலாக மாற்றினார். அதனாலேயே இவ்வூருக்கு பால கொல்ல என்ற பெயரும் க்ஷீராராம என்ற பெயரும் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள் .
மற்றொரு புராணத்தில் ராவணனை போரில் கொன்று வென்று சீதா லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயருடன் ஸ்ரீராமர் திரும்பி வந்துகொண்டிருந்தார் ,அப்போது ஸ்ரீராமருக்கு தான் ஒரு பிராமணனை கொன்று விட்டதால் தோஷம் ஏற்பட்டுவிட்டது என்ற மனக்கவலை ஏற்பட்டது ,அப்போது அகத்தியர் மகரிஷி ஒரு யோசனை கூறினார் ,இந்த கோஸ்தானி நதியில் நீராடி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினால் தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறினார் அதன்படி ஸ்ரீராமர் ஆஞ்சநேயரிடம் சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்லிவிட்டு நதியில் நீராடினார் ,ஆனால் சொன்ன நேரத்திற்குள் ஆஞ்சநேயர் வரவில்லை என்பதால் சீதாதேவி அங்குள்ள மணல் மற்றும் நத்தை ஓடுகளை கொண்டு சிவலிங்கத்தை செய்தார் ,அந்த நேரத்தில் அங்கு வந்த ஆஞ்சநேயர் மனம் வருத்தம் அடைந்தார் . இதைக்கண்ட ஸ்ரீராமர் ஆஞ்சநேயரிடம் முதலில் உண்னுடைய லிங்கத்தையே பக்தர்கள் தரிசிப்பார்கள் அதன் பிறகு சீதாவின் சிவலிங்கத்தை தரிசிப்பார்கள் என்று கூறினார் .
- நான் இங்குள்ள பால்வண்ண சிவலிங்கத்தை பால் அபிஷேகம் செய்யும் போது தரிசனம் செய்யும் பெரும் பாக்கியம் கிட்டியது ,அதை கண்டா என் மனம் கண்ட ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை . ஆஹா என்ன ஒரு ஆனந்தம்! பேரானந்தம் !!
Photos:
https://alayamtrails.blogspot.com/2021/06/ksheera-ramalingeswara-swamy-temple.html
பித்தா! பிறைசூடா ! உன்னை கண்டதில் கண்களில் வழிய வேண்டிய ஆனந்த கண்ணீர் என் இதயத்தில் அல்லவா கசிந்தது !!
- Located at Palakollu of West Godavari district in Andhra Pradesh, Sri Ksheera Ramalingeswara Swamy temple is known as one of the Pancharama Kshetras.
History of the Temple
The temple is a huge structure with a towering Rajagopuram. Here, the shiva lingam is tallest, milky white and it is made of white marble which can be viewed through the all four windows of the Garbha graham. The temple tower stands 120ft tall with 9 floors. The temple was built during the 9th century under the rule of Chalukya Bheema. The Prakara was designed during the 10th century and gopuram was constructed during 14th Century. Kalyana mandapam and Ashta Bhuja Lakshmi Narayanaswamy temples were built in the 17th century. The temple mandapam has 72 pillars carved out of black stones.
Opening Time: Morning 5.30 Am-12.00 Pm, Evening 4.00Pm-8.30Pm
Abhishagam: 6.00 Am-11.00 Am
How to Reach:
From Rajamundry 80km, nearby Airport Rajamundry and nearby Railway station Palakollu.
Location: