Kamatchi Amman Virutham Lyrics in Tamil

ஸ்ரீ காமாட்சி அம்மன் விருத்தம் பாடல் வரிகள் காமாட்சி அம்மன் விரதம் அதாவது காரடையான் நோம்பு விரதம் இருக்கிறவர்வகள் கண்டிப்பாக இந்த காமாட்சி விருத்தத்தை படிக்கவேண்டும் . தினமும் இவ் விருத்தத்தை படித்தால் நம் குடும்பத்தில் எல்லா வளங்களும் கிடைக்கும் , …

Read More Kamatchi Amman Virutham Lyrics in Tamil

Sri Mahadevar Temple – Vaikom

ஸ்ரீ மஹாதேவர் கோயில்  – வைக்கம் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற மற்றும் பழமையான கோயில்களில் முக்கிய இடத்தில் உள்ள கோயிலாகும் இந்த வைக்கம் மஹாதேவர் கோயில் . இக்கோயில் கிட்டத்தட்ட 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கோயில் வளாகத்தினுள் முக மண்டபம் …

Read More Sri Mahadevar Temple – Vaikom

Sri Mandheeswarar Temple – Nambakkam

ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மாந்தீஸ்வரர் கோயில் – நம்பாக்கம் ,பூண்டி இறைவன் : மாந்தீஸ்வரர் இறைவி : மரகதாம்பிகை ஊர் : நம்பாக்கம் , பூண்டி மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு நான் பூண்டி தேவார பாடல் பெற்ற …

Read More Sri Mandheeswarar Temple – Nambakkam

Sri Yelagirishwar And Sri Kalyana Venkataswamy Perumal Temple – Yelagiri

ஸ்ரீ ஏலகிரிஸ்வரர் மற்றும் கல்யாண வேங்கடசுவாமி பெருமாள் கோயில் – ஏலகிரி சென்னைக்கு அருகில் உள்ள சுற்றுலா இடங்களில் ஏலகிரி மலை தனி சிறப்பை கொண்டது . இவ் மலையானது ஏழைகளின் ஊட்டி என்று சொல்லுவார்கள் .  அதிகம் செலவு வைக்காமல் …

Read More Sri Yelagirishwar And Sri Kalyana Venkataswamy Perumal Temple – Yelagiri

Sri Jambukeswarar Temple – Korattur

ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயில் – கொரட்டூர் இறைவன் : ஜம்புகேஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி தல தீர்த்தம் : லட்சுமி புஷ்கரனி ஊர் : கொரட்டூர் மாவட்டம் : சென்னை , தமிழ்நாடு கொரட்டூர் ஆதி கேசவ பெருமாள் கோயிலுக்கு அருகில் இந்த சிவன் கோயில் உள்ளது . லட்சுமி புஷ்கரனி கடந்து இடது பக்கம் குளத்தை ஒட்டியே சென்றால் ஜம்புகேஸ்வரர் கோயிலை அடையலாம் . இக்கோயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தெற்கு வழியாகவும் இக்கோயிலுக்கு செல்லலாம் . தெற்கு வாசல் வழியாக நாம் சென்றால் மொட்டை கோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது . மொட்டை கோபுரத்தின் முன் பகுதியில் ஈசன் தன் குடும்பத்துடன் சுதை சிற்பமாக  உள்ளார் . அப்படியே வலது புறமாக கிழக்கு வாசல் பகுதிக்கு சென்றால் பலிபீடம் மற்றும் நந்தியை காணலாம் . பின்பு நாம் கருவரையுடன் கூடிய மண்டபத்தின் உள் சென்றால் கிழக்கு நோக்கி இறைவன் காட்சி தருகிறார் . தாயார் அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கி காட்சி தருகிறார் . அர்த்தமண்டபத்தில் இரண்டு விநாயகர் ,வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர்,உற்சவ மூர்த்தி ,நால்வர் ,பைரவர் மற்றும் சூரியன் ஆகியோர் உள்ளார்கள் . இவர்களை தரிசனம் செய்துவிட்டு நாம் வெளியில் வந்து கோயிலை வலம் வந்தால் ஒரு அரைவட்ட வடிவில் அதாவது கஜபிருஷ்ட வடிவில் கோயிலின் கருவறை சுவர்  அமைந்துள்ளது . இவ் சுவரானது ஜகதி ,திரிபட்ட குமுதம் ஆகியவையோடு உள்ளது . மொட்டை கோபுரமாக உள்ளது . தேவ கோஷ்டத்தில் யாரும் இல்லை , ஆனால் தேவ கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி உள்ள இடத்தில் காகபுஜண்டர் சுதை சிற்பம் உள்ளது . காகபுஜண்டர் மற்றும் ஜம்புமஹரிஷி அவர்கள் இவ் இடத்தில் வந்து இறைவனை வணங்கியதாக நம்பப்படுகிறது . மற்றும் காகபுஜண்டர் இவ்விடத்தில் ஜீவா சமாதி அடைந்ததாகவும் கூறுகிறார்கள் , ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை . திருஞானசம்பந்தர் பக்கத்தில் உள்ள திருவலிதாயம் சிவன் கோயிலுக்கு வந்தபோது இக்கோயிலுக்கு வந்ததாக கூறுகிறார்கள் ஆதலால் இக்கோயிலானது 8 நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது . கல்வெட்டுகள் : இக்கோயிலானது சோழர்கள் காலத்தை சார்ந்ததாகும் . சோழர் காலத்தில் செம்பியன் மஹாதேவி ஈஸ்வரம் என்று அழைக்கப்பட்டது . செம்பியன் மஹாதேவி கண்டராதித்தன் சோழனின் மனைவி ஆவார் , முதலாம் ராஜராஜ சோழனின் பாட்டி ஆவார் . இந்த பகுதியானது புழல் கோட்டத்தை சார்ந்த பராந்தக சதுர்வேதி மங்களம் என்று அழிக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன . Photos: https://alayamtrails.blogspot.com/2022/10/sri-jambukeswarar-temple-korattur.html திறந்திருக்கும் நேரம் : காலை 07 .00 – 11 .00 மணி வரை , மாலை 5 .00 மணி முதல் இரவு 8 .00 மணி வரை . செல்லும் வழி : கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக சென்று பாடி சரவணா store தாண்டி கொரட்டூர் செல்லும் சிக்னல் வரும் அதை தாண்டி சென்று வலதுபுறம் சென்றால் இக்கோயிலை அடையலாம் . அருகில் உள்ள கோயில் :  திருவாலீஸ்வரர் கோயில் – பாடி English : The …

Read More Sri Jambukeswarar Temple – Korattur

Sri Adi Keshava perumal Temple – Korattur

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள்  கோயில் / ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில் – கொரட்டூர் சென்னையில் உள்ள கொரட்டூரில் பழமையான கோயில்கள் உள்ளது என அறிந்த நான் கடந்த சனிக்கிழமை அந்த கோயில்களை தரிசிக்க விரும்பி சென்றேன் . …

Read More Sri Adi Keshava perumal Temple – Korattur

Kanchipuram Divya desams

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 15 திவ்ய தேசம் தரிசனம் காஞ்சிபுரம் என்று நாம் சொன்னால் நமக்கு நினைவுக்கு வருவது கோயில்கள் , அதிலும் நமக்கு காமாட்சி அம்மன் ,ஏகாம்பரேஸ்வரர் ,வரதராஜ பெருமாள் கோயில்தான் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும் . ஆனால் காஞ்சிபுரத்தில்  …

Read More Kanchipuram Divya desams

Sri Agneeswarar Temple – Neyveli (poondi)

Sri Agneeswarar Temple – Neyveli (poondi)

ஸ்ரீ ஆதி அக்னீஸ்வரர் கோயில்  – நெய்வேலி (பூண்டி அருகில் ) இறைவன் : ஆதி அக்னீஸ்வரர் , அக்னீஸ்வரர் இறைவி : லலிதாம்பிகை தல விருச்சம் : கல்லால மரம் தல தீர்த்தம் : அக்னி தீர்த்தம் ஊர் : …

Read More Sri Agneeswarar Temple – Neyveli (poondi)

Sri Oondreeswarar  Temple – Poondi, Thiruvenpakkam

Sri Oondreeswarar  Temple – Poondi, Thiruvenpakkam

ஸ்ரீ ஊன்றீஸ்வரர் கோயில்  – பூண்டி , திருவெண்பாக்கம் இறைவன் : ஊன்றீஸ்வரர், ஆதாரதண்டேஸ்வரர் இறைவி  :மின்னொளி அம்பாள், தடித்கௌரி தல விருட்சம்:இலந்தை தீர்த்தம்:குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம் புராண பெயர்: திருவெண்பாக்கம் ஊர்:பூண்டி மாவட்டம்:திருவள்ளூர்,தமிழ்நாடு பாடியவர்கள்: சுந்தரர் தேவார பதிகம் …

Read More Sri Oondreeswarar  Temple – Poondi, Thiruvenpakkam

Sri Chottanikkara Bhagavathy Temple – Chottanikkara

Sri Chottanikkara Bhagavathy Temple – Chottanikkara

சோட்டாணிக்கரை பகவதி கோயில் – சோட்டாணிக்கரை கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் நிறைய கோயில்கள் மிகவும் புகழ் பெற்றது . குருவாயூரப்பன் , திரிசூர் வடக்குநாதர் , சபரிமலை அய்யப்பன் ,திருவனந்தபுரம் பத்மநாபா கோயில் ஆகிய கோயில்களை போல் இந்த …

Read More Sri Chottanikkara Bhagavathy Temple – Chottanikkara